search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்பட்டி"

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு சக கைதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை சிறைக் காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
    • கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு காலை, மாலை என 4 முறை கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது.

    மேலும் மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த கிராம மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று காலை கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

    • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • அம்பாள், உற்சவ அம்பாள்,குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி யெழுச்சி பூஜை நடை பெற்றது. 7 மணிக்கு அம்பாள், உற்சவ அம்பாள்,குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன் ,சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிர மணியன் செய்தார். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், கணபதி, மாரிஸ்வரன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்க ப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை குழுவினர் செய்தனர்.

    • கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்து கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • விற்பனையாளர்கள், உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கோவில்பட்டி:

    தமிழக அரசு எடை அளவு முத்திரை சட்டத்தின்படி எடை அளவுக்கான முத்திரை கட்டணத்தை 50 சதவீதம் அதிகரித்ததை கண்டித்தும், நகைக் கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகளுக்கான முத்திரைக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்தும் கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துராஜ், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் கண்ணன், பொருளாளர் தினேஷ், மொபைல் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் லாலா ஸ்வீட்ஸ் விற்பனையாளர்கள், கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், செல்போன் விற்பனையாளர்கள், மருந்து வணிகர்கள், பூச்சி மருந்து மற்றும் உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
    • அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    கோவில்பட்டி:

    தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. மேலும், மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது.

    திறமையான காவல்துறை இருந்தாலும், அந்த துறையை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் கண்டு காணாததும் போல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.

    கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகமாக மக்கள் நடமாடும் இடங் ளில் தாராளமாக கிடைக்கின்றன. மாணவர்களை குறி வைத்தே பொருட்கள் விற்பனை நடக்கின்றன. இதனை தடுக்க இந்த அரசு திராணியற்று இருக்கிறது.

    கோடை காலமான தற்போது அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    வருமான வரித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னிச்சையான அமைப்பு. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு யாரை வேண்டுமென்றாலும் சோதனையிட உரிமை உள்ளது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதுதான் மரபு.

    இதையெல்லாம் பின்பற்றும் வழக்கம் தி.மு.க.வு.க்கு கிடையாது. அதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
    • 8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்ட ளையின் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறு கிறது.

    3-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் கஸ்டம்ஸ் புனே அணியும், இந்தியன் பேங்க் சென்னை அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் கஸ்டம்ஸ் புனே அணி வெற்றி பெற்றது.

    8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

    9-வது லீக் ஆட்டத்தில் ரெயில் வீல் பேக்டரி பெங்களுரு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சென்னை அணியும், 10-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க், நியூ டெல்லி மற்றும் நிஸ்வாஸ் ஹாக்கி டீம் பாம்போஸ் அணிகளும் மோதுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடை பெறும் இப்போட்டிகளின் தமிழ் நாடு போலீஸ் சென்னை- சாய்-எஸ்.டி.சி. பெங்களூரு அணிகள் மோதுகின்றன,

    இதேபோல் பெட்ரோ லியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோ மோஷன் போர்டு -சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணிகளும் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா, நியூ டெல்லி - ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகளும், சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்திராபாத் - இந்தியன் பேங்க் சென்னை அணிகளும் மோதுகின்றன.

    • தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் நிறைந்த பகுதியாக கோவில்பட்டி திகழ்கிறது.
    • கோவில்பட்டி நகரில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட் டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகர மாகும். கோவில் பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல்லாயிரக் கண க்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.

    கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, பூசாரிபட்டி, வடக்கு, தெற்கு திட்டக்குளம் மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்டவ ர்மங்கலம், மந்திதோப்பு, தோணுகால், சாலைப்புதூர், ஆவல்நத்தம், அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளியங்குளம், பாறைப்பட்டி, கிருஷ்ணா நகர், சுபா நகர், கணேஷ் நகர், ராஜகோபால் நகர், பல்லக்கு ரோடு, சண்முக சிகாமணி நகர் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 30 கிராம ங்களில் இருந்து தினசரி பல்லாயிரக் கணக்கான பொது மக்கள், வியா பாரிகள், மாணவ மாணவி கள் கோவில்பட்டி நகரு க்குள் வந்து செல்கின்றனர்.

    எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. கோவில்பட்டி நகரில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், போக்குவரத்து பிரிவு மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு என பல காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொது மக்களின் நலன் காத்திடவும், விபத்து மற்றும் குற்றச் செயல்களை தடுத்திடவும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல ர்களின் எண்ணி க்கையை உயர்த்த வேண்டும்.

    பெருகி வரும் வாகன போக்குவரத்தை கணக்கில் கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். அதேபோல் சமீப காலங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன்கருதி கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின் புதூர், கழுகுமலை, கயத்தார் உள்ளிட்ட காவல் நிலை யஙகளில் குற்றப்பிரி வுக்கென தனி இன்ஸ்பெ க்டர்கள் மற்றும் கோவி ல்பட்டி ஜனத்தொகை எண்ணி க்கை கணக்கில் கொண்டு அதிக காவலர்க ளை நியமிக்க வேண்டும். மேலும் போலீசார் இரவு நேரங்களில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கல்யாண முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பூஜையில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் பங்குனி உத்திர சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.

    விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த னர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • 13-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றம் விமர்சையாக நடை பெற்றது.

    பின்னர் சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி, பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜனகல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி, வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேச சென்ன கேசவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், பொறியாளர் அணி ரமேஷ், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மற்றும் அனைத்து மண்டக படிதாரார்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விழா இன்று தொடங்கி வருகிற 15 -ந் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் விழாகள் நடைபெறும்.

    1- ம் திருநாளான இன்று பிராமணர் சமூகம் சார்பில் இரவு 7மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறவுள்ளது. 2 ம் திருநாளான 6-ந் தேதி பூலோகப்பாண்டியத்தேவர் மற்றும் ரத்தினவேல்ச்சாமித் தேவர் சார்பில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 3-ம் திருநாளான 7-ந் தேதி இல்லத்துப்பிள்ளைமார் சமுகம் சார்பில் பூதவாகனம் - காமதேனு வாகனத்தில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 4- ம் திருநாளான 8- ந் தேதி மேடைத்தளவாய் கட்டளைதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதிஉலா மற்றும் குடவரை வாசல் தரிசனம் நடைபெறவுள்ளது. 5-ம் திருநாளான 9-ந் தேதி விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி அம்மன் திருவீதி உலா நடைபெறுவுள்ளது. 6-ம் திருநாளான 10-ந் தேதி அழகர் ஜூவல்லர்ஸ் அழகிரிசாமி செட்டியார் சார்பில் இரவு 7 மணிக்கு யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும். 7-ம் திருநாளான 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில், நடராஜர் சப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 8 -ம் திருநாள் 12-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ செட்டியார்கள் சங்கம் சார்பில் குதிரை வாகனம், கிளி வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 9-ம் திருநாளான 13-ந் தேதி காலை 8 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது.

    9-ம் திருநாளான வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு யானை முன் செல்ல வானவேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    10-ம் திருநாள் மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    11-ம் திருநாளான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வானவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங்கரிக்கபட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையரும், தக்காருமான சங்கர், செயல்அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

    • பங்குனி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடுவிழா நடைபெற்றது.
    • பொங்கல் விழா பூஜைகளை அர்ச்சகர் பாலு செய்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் அமைந்துள்ள மகா புவன காந்தாரியம்மன் கோவில் பங்குனி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடுவிழா மற்றும் காந்தாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் தர்மகத்தா ரவி பாண்டியன், தலைவர் ஏமராஜ், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் காந்தாரி முத்து, துணைத்தலைவர் கருப்பசாமி, துணை செயலாளர் கருப்பசாமி, துணை பொருளாளர் இளையராஜா, இணை பொருளாளர் பொன்ராஜ் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூஜைகளை அர்ச்சகர் பாலு செய்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை வசதிகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • புற்றுக்கோவிலில் வைகாசி பவுர்ணமி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வைகாசி பவுர்ணமி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மூலமந்திர ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது.

    பிறகு சசங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார்.

    இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தனியார் மினிபஸ் ஓட்டுநர்கள், பயிற்சி பள்ளி நிர்வாகிகள், ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எரிபொருள் சிக்கனம், சாலை பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு குறித்து பேசினார்.

    கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×