தட்டார்மடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தட்டார் மடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் டிராக்டர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது.
தட்டார்மடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார் மடத்தில் போலீசார் சார்பில் மாற்றத்தைத் தேடி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் குருசுமிக்கேல், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச் சங்க செயலர் லூர்து மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாலை பாதுகாப்பு குறித்து டிராக்டர் ஓட்டுநர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இன்ஸ்பெக்டர் பவுலோஸ் எடுத்துரைத்தார். தொடர்ந்து டிராக்டர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது. இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனம் வைத்திருப்பவர்களுக்கு வாகன இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், வண்டி உரிமம் ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது எனவும், விபத்து தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் ஓட்டுனர்கள் கோபால், சேர்மதுரை, கிதியோன், சுதாகர், டைட்டஸ், ஜஸ்டின், இன்பம், பரத்,பீட்டர், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com