search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை மனு"

    • கன மழையால் அணை நிரம்பி உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
    • பாசன கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

    தருமபுரி,

    சென்னையில் நடை பெற்ற சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பின்னர், முதல்-

    அ மைச்சரிடம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஷ்வரன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சின்னாறு (பஞ்சப்பள்ளி) அணைக்கு பெய்து வரும் கன மழையால் அணை நிரம்பி உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

    உபரிநீரின் ஒரு பகுதி மாரண்டஅள்ளி அணைக்கட்டு, செங்கன்பசுவன்தலாவ் ஏரி, ஜெர்த்தலாவ் ஏரி, புங்கன்குட்டை, தளவாய்அள்ளி ஏரி, முத்தூர் ஏரி, ஏ.செட்டிஅள்ளி ஏரி, சீங்கல் ஏரி, கம்மாளப்பட்டி ஏரி, கொல்லப்பட்டிகுட்டை, பனங்கள்ளி ஏரி, சோகத்தூர் ஏரி, கடகத்தூர் ஏரி மற்றும் பாப்பாரப்பட்டி வழியாக பாப்பாரப்பட்டி ஏரி – பாலவாடி ஏரி – இண்டூர் வரையுள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பகுதி சின்னாற்றின் வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலந்து மேட்டூரை அடைந்து பின்னர் கடலில் கலக்கிறது.

    பாசன கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டு முறையாக பரா மரிக்கப்பட்டால் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை அணையின் உபரிநீர் மூலம் விரைந்து நிரப்பி யிருக்க முடியும். மேலும் குறைந்த நாட்களில் அதிக எண்ணிக்கை யிலான நீர்நிலை களையும் நிறைந்திருக்க முடி யும். அணையில் இருந்து கடைமடை பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் வந்து சேரும்போது நீர்வரத்தின் வேகம் சுருங்கி விடுகிறது. கடைமடைக்கு விநாடிக்கு 400 கனஅடிக்கு குறையாமல் நீர்வரத்து இருக்கும் வகையில் பாசன கால்வாய்களை அகலப்படுத்த வேண்டும்.

    தற்போது கால்வாய் போதிய அகலம் இல்லாததால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக சின்னாறு அணையில் இருந்து சின்னாற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் பெரும் பகுதி கடலுக்குத்தான் செல்கிறது.

    நிலத்தடி நீர்மட்ட அளவை உயர்த்தவும், விவசாய நிலப்பரப்பை பெருக்கி விவசாயம் செழிக்கவும், வேலைவாய்ப்பு பெருக்கவும், வெளி மாநில, மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பி மகிழ்ச்சியாக வாழவும் மேற்கண்ட பாசன கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த தங்களை கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மழை வெள்ளத்தால் 20 வீடுகள் பலத்த சேதமடைந்தன.
    • தாசில்தார் கவாஸ்கரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள அனுமந்த நகர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு பெய்த கனமழையாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பும் மழை வெள்ளத்தால் 20 வீடுகள் பலத்த சேதமடைந்தன.

    இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 30 பேர் மனித உரிமைகள் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன் தலைமையில், ஓசூர் தாசில்தார் கவாஸ்கரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.

    அதில், மாவட்ட கலெக்டர் உறுதி அளித்ததை நிறை வேற்றும் வகையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு உடனடி யாக மாற்று இடம் அல்லது வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல், ஓசூர் சப்- கலெக்டர் அலுவ லகத்திலும் அவர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

    • திருப்பரங்குன்றம் பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
    • இது சம்பந்தமாக குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றனர். முகாமில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    திருப்பரங்குன்றம் திருநகர் பகுதியில் பாதாள சாக்கடை இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அவல நிலை உள்ளது. திருநகர் 5-வது பஸ் நிறுத்தத்தில் இருந்து 3-வது பஸ் நிறுத்தம் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்கள் கொடுத்தனர்.

    கூட்டத்தில் நகர பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையர் முஸ்தபா கமால், மாமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, சுவேதா சத்யன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தூய்மை பாரத இயக்க ஊரக திட்டத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 772 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி வளாகத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமையில் எஸ்.டி.பி.ஐ. ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் முன்னி லையில் ஊராட்சி துணை தலைவர் புரோஸ் கான், வார்டு உறுப்பினர்கள் முகம்மது மீராசா, அய்யூப்கான், பீர் மைதீன் உள்பட பலர் கூடுதல் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்த னர்.

    பெரியபட்டினம் எஸ்.டி.பி.ஐ. ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான் கூறுகையில், இந்த அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதிய இடம் இருப்பதால் மாணவிகளுக்கு தூய்மை பாரத இயக்க ஊரக திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தோம்.

    இது சம்பந்தமாக தொடர்ந்து குரல் எழுப்பி மாணவிகள் கோரிக்கை நிறைவேற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

    • முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
    • முன்னாள் படைவீரர்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை 2 பிரதிகளில் கலெக்டரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டகலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 14-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    எனவே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவரை சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தார்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை 2 பிரதிகளில் கலெக்டரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறும் மரக்கன்று நடும் விழாவில் மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் தினமும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

    அங்கு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலித்து நடவ டிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில்தஞ்சை பூக்கார தெரு விளார் சாலையில் உள்ள மாரிக்கு ளம் நந்தவனத்தில்தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் கேலக்ஸி ரோட்டரி சங்கம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ரம்யா சரவணன், கன்னுக்கிணியாள், மாநகராட்சி உதவி பொறியாளர் சந்திரபோஸ், துப்புரவு ஆய்வாளர் மோகனப்பிரியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) மாநகர செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை பேரூராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
    • இல்லை என்றால் பொதுமக்கள், முருக பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோபாலகிருஷ்ணன், பேரூர் செயலாளர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் சத்தி ரசேகர் தலைமையில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னிமலை பேரூ ராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சென்னிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க போடப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டித்ததை மீண்டும் வழங்க வேண்டும்.

    இதை உடனடியாக 2 வாரங்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள், முருக பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதில் அவைத்தலைவர் ஆதவன், துணை செய லாளர் சாவித்திரி, பொரு ளாளர் காவேரி ரங்கன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கோபால கிருஷ்ணன், ஜம்பு என்கிற சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி மாரப்பன், மெட்றோ டெக்ஸ் தலைவர் கோவிந்தசாமி,

    முன்னாள் பேரூர் செயலாளர் கொங்கு கந்தசாமி, முன்னாள் பேரூ ராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், மகளிரணி சாந்தி, வார்டு செயலா ளர்கள் சூளை ஈஸ்வரன், ரமேஷ், சுப்பிரமணி, கே.அண்ணா துரை,

    பழக்கடை குமார், தாரை. லட்சு மணன், லோகு, பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, ரமேஷ், திருநாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மொழிப்போர் தியாகி களுக்கு திருவள்ளுவர் தினத்தன்று கவுரவிக்கப் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
    • மாவட்ட நிர்வாகம் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு நாட்டின் சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவில் கௌரவ படுத்த வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம் சார்பில் இன்று கலெக்டரிடம் 17 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    இந்திய விடுதலை போராட்ட தியாகிகளையும், மறைந்த தியாகிகளின் வாரிசு களையும் இந்திய சுதந்திர தினம், இந்திய குடியரசு தினம் ஆகிய தினங்களில் நடத்தப்படும் அரசு விழாக்களில் கலெக்டர் மூலம் கவுரவிக்கப்படுவது நடைமுறையில் இருந்து வந்தது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசு களுடன் மொழிப்போர் தியாகிகளையும் அமர வைத்து விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு சமமாக கவுரவிக்கப்படுவது, விடுதலை போராட்ட தியாகிகளின் தியாகங்களை இரண்டாம் பட்சமாக கருதப்படுவதுடன், விடுதலை போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் தொடர்ந்து மிகுந்த மனஉளைச்சலை தருவதாக பல விழாக்களிலும், தியாகிகளின் குறைத்தீர்க்கும் கூட்டங்களிலும் தெரிவித்து உள்ளோம்.

    மாவட்ட நிர்வாகம் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு நாட்டின் சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவில் கௌரவ படுத்த வேண்டும்.

    மொழிப்போர் தியாகி களுக்கு திருவள்ளுவர் தினத்தன்று கவுரவிக்கப் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

    மேலும் தருமபுரி மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர்.

    நாட்டுப்புறக் கலைஞர் களுக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அலுவலகம் சேலத்தில் உள்ளது. எங்களுடைய கோரிக்கை கள் குறித்து மனு கொடுக்க சேலம் சென்று வருவதால் எங்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. அதனால் தருமபுரி மாவட்டத்தில் நாட்டுப்புற நாடக கலைஞர்கள் உதவி மையத்தை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வகையில் அமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்தனர்.

    • கந்த கவுண்டனூர் பகுதியில் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
    • தங்களின் நிலத்தை வருவாய்த் துறையினர் முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டர், எஸ்.பி.யிடம் பெண் கோரிக்கை மனு.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள கந்தகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் அன்பழகன். அன்பழகனுக்கு தங்கை ஒருவர் உள்ளார்.

    அவர் மாற்றுத்திறனாளி. இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கந்த கவுண்டனூர் பகுதியில் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தங்களின் நிலத்தை வருவாய்த் துறையினர் முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என தருமபுரி கலெக்டர், மற்றும் தருமபுரி எஸ்.பி. ஆகியோரிடமும், தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் கலைவாணியின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பழங்குடி மக்கள் மனு கொடுத்தனர்.
    • அடையாள அட்டை வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், போச்சம்பள்ளி ஒன்றிங்களுக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி, பூமாலை நகர், காரகுப்பம், ஜவுக்குபள்ளம், எம்ஜிஆர் நகர், பழனிஆண்டவர் நகர், கொத்தப்பள்ளி, காளிக்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் (இருளர்) வசித்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதியில் தேன், கிழங்கு, கீரைகள், பழங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை தங்களது வாழ்வாதாரமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் சிறு வனத்திற்குள் சென்று தேன், கிழங்கு, மூலிகை செடிகள் சேகரிக்க சென்று வர ஏதுவமாக அனுமதி அட்டை வழங்க வேண்டுமென என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இருளர் இன மக்கள் 150க்கும் மேற்பட்டவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தேனி, வால்பாறை, தர்மபுரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள், சிறு வனத்திற்கு சென்று வர அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. கடந்த 2019ம் ஆண்டு சிறு வன மகசூல் மீதான முகாமில் மனு அளித்தோம். அதற்கும் இதுவரை பதிலளிக்கவே இல்லை.

    எனவே நாங்கள் வனப்பகுதிக்கு செல்ல அனுமதி அட்டை வழங்கி, சிறு வன மகசூல் எடுத்து சீத்தாக்காய், புளி, முலிகைகள் எடுக்க அனுமதியுடன், அடையாள அட்டை வழங்க வேண்டும். இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்றனர்.

    • கீழக்கரையில் சேதமான சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • கைவினையாளர்கள் சங்கம் சார்பில் ஊர்மக்கள் கையெழுத்திட்ட மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

    கீழக்கரை

    திருப்புல்லாணி ஒன்றியம் மேதலோடையில் இருந்து வண்ணாங்குண்டு செல்லும் 4 கி.மீ., சாலை சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

    இதுதொடர்பாக பனைத்தொழிலாளர் மற்றும் கைவினையாளர்கள் சங்கம் சார்பில் வட்டார தலைவி கலைவாணி, காமாட்சி உள்ளிட்ட பெண்கள் ஊர்மக்கள் கையெழுத்திட்ட மனுவை கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மேதலோடை மற்றும் அருகில் உள்ள காடுகாரன்வலசை, ஈசுப்புலி வலசை, மாரி வலசை, பன்னிவெட்டி வலசை, உமையன் வலசை, மேதலோடை (வடக்கு), அய்யனார்புரம் ஆகிய 8 கிராமங்களில் 450 குடும்பங்களை சேர்ந்த 2000 பேர் வசிக்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

    10-ம் வகுப்பிற்கு மேல் எங்கள் ஊரில் இருந்து 4 கி.மீ., ல் உள்ள வண்ணாங்குண்டு அரசு மேல்நிலை பள்ளிக்குதான் செல்ல வேண்டும். அங்கு 150 மாணவர்கள் படிக்கின்றனர்.

    இந்த பள்ளிக்கு மேதலோடை (தெற்கு) பகுதியில் இருந்து வண்ணாங்குண்டு செல்லும் 4 கி.மீ., சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த வழியாக பள்ளி செல்ல பஸ் வசதியும் இல்லை. இதனால் சாலையில் மாணவர்கள் நடந்தும், சைக்கிளில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு காயமடைகின்றனர்.

    இந்த சாலையை உடனடியாக சீரமைத்து பஸ் வசதி செய்ய வேண்டும். தினைக்குளத்தில் உள்ள மேதலோடை துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் புற ஆதார முறைகளை களைய வேண்டும்.
    • 30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும்

    பெரம்பலூர்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் புற ஆதார முறைகளை களைய வேண்டும்.

    30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 28-ந்தேதியும், நேற்று முன்தினமும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

    நேற்று அந்த சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வழியாக முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 துறை இயக்குனர்களுக்கும் கோரிக்கை முறையீட்டு மனுவினை வழங்கினர்.

    ×