search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடை விழா"

    • கொடை விழா ஜூலை 24,25,26-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது.
    • இன்று மாலையில் திருவிளக்குபூஜை, தீபாராதனை நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் பூக்குழி கொடை விழா அடுத்த மாதம் (ஜூலை) 24,25,26-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இக்கொடை விழாவில் பக்தர்கள் பால்குடங்கள் சுமந்தும், காவடி தூக்கியும், பறக்கும் காவடி எடுத்தும் வருவார்கள். அதோடு பூக்குழி இறங்கவும் செய்வார்கள்.

    அப்படி உள்ள பக்தர்கள் கொடை விழாவிற்கு 41 நாட்கள் முன்னதாக கோவிலில் வந்து அம்மனை வணங்கி மாலை போட்டு விரதம் இருப்பார்கள். அப்படி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிலில் வைத்து நடக்கிறது. இதையொட்டி இன்று காலையில் கணபதி ஹோமம், கலச பூஜை, தொடர்ந்து ஆலமுடு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

    அதன்பின்னர் விரதம் இருக்கும் பத்தர்கள் மாலை போட்டுகொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம். மாலையில் திருவிளக்குபூஜை, தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் அறக்கட்டளை தலைவர் இ.அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சங்கத்தினர் செய்துள்ளனர்.

    • இன்று நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
    • நாளை நீலசாமி இசக்கியம்மனுக்கு அர்த்தசாம அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    ஆத்திக்காட்டுவிளை நீலசாமி இசக்கியம்மன் குடும்ப கோவில் கொடை விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று விக்னேஸ்வர பூஜையும், தீப லெட்சுமி பூஜையும், மகா சுதர்சனஹோமமும், 9 மணிக்கு அபிஷேகம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு மஞ்சள்காப்பு மற்றும் மாகாப்பு பூஜையும், 8.30 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு நீலசாமி இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், அன்னதானமும், மாலை 6 மணிக்கு வில்லிசையும், இரவு 8.30 மணிக்கு பிரம்மசக்தி அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு நீலசாமி இசக்கியம்மனுக்கு அர்த்தசாம அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    10-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு வில்லிசையும், காலை 6 மணிக்கு வன்னியடி மறவர் சாமிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நீலசாமி இசக்கியம்மன் கோவில் குடும்பத்தார் செய்து வருகின்றனர்.

    • கொடைவிழா கடந்த 16-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • வீரகேரள விநாயகா் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை- இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் கீழத்தெரு சேனைத் தலைவா் சமு தாயம் சார்பில் கொடை விழா நடை பெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான கொடைவிழா கடந்த 16-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நித்யகல்யாணி அம்மன், பரிவார தேவதைகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கொடை விழா நேற்று நடைபெற்றது.

    இதனையொட்டி காலையில் வீரகேரள விநாயகா் கோவிலில் இருந்து நித்யகல்யாணி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வருதல், குங்கும அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், அக்னிச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நள்ளிரவு செண்டை மேளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் நித்யகல்யாணி அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாயத்தினர், இளைஞர் சங்கத்தினர், விழா கமிட்டியினா் செய்திருந்தனர்.

    • கொடை விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந் தேதி சாமிகள் ஊர் சுற்றி வருதல் நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி யாதவர் சமுதாய புலமாடன், ஈனன், பேச்சியம்மன் சாமி கோவில் கொடை விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, தொடர்ந்து குடியழைப்பு, தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெறும்.

    பூஜைகளை ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்துகிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளங்களுடன், முளைப்பாரி, பால்குடங்களுடன் ஊர்வலமாக கோவில் வருதல் நடைபெறும். ஊர்வலத்தை ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் உச்சிகால தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு 8 மணிக்கு சாமி கதைபாடுதல், நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, படைப்பு, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெறும். வருகிற 27-ந் தேதி மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3 மணிக்கு சாமிகள் ஊர் சுற்றி வருதல் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

    • கொடை விழா நாளை தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
    • நாளை மாக்காப்பு அலங்காரத்துடன் விழா தொடங்குகிறது.

    நெல்லை பேட்டை அருகே நடுக்கல்லூர் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதியம்மன் மாரியம்மன் கோவில் கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 23ந்தேதி வரை நடக்கிறது. நாளை இரவு 8 மணிக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் விழா தொடங்குகிறது.

    நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு குடி அழைப்பு நிகழ்ச்சியும், 23-ந்தேதி காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மதியக்கொடையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கிரகக்குடம் எடுத்து வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு அலங்கார பூஜையும், 10 மணிக்கு தீச்சட்டி எடுத்து வருதல், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது.

    தொடர்ந்து ஆயிரம் கண் பானை, பூ பெட்டி எடுத்து கோவில் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு படைப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடுக்கல்லூர் விழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

    • கொடை விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • 20-ந்தேதி சாமிமார்கள் ஊர் சுற்றிவரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தேரூர், மகாராஜபுரம் சந்தனமாரியம்மன் வங்காரமாடசாமி கோவில் கொடை விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு வில்லிசை, 12.30 மணிக்கு குடியழைப்பு நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பம் தரித்து வருதல், 11 மணிக்கு களபம் சாற்றுதல், அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு சமபந்தி விருந்து, நள்ளிரவு 1.30 மணிக்கு நீராட செல்லுதல், 2 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

    20-ந் தேதி மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், பகல் 1.30 மணிக்கு பூ படைப்பு, உச்சி கொடை, மாலை 5 மணிக்கு சாமிமார்கள் ஊர் சுற்றிவரும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • 4-வது நாள் விழா அன்று சுவாமிகள் மஞ்சள் நீராடினர். பின்னர் கடலில் தீர்த்தம் கும்பம் எடுத்து வந்தனர்.
    • நேற்று மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சித்திரை கொடை விழா 7 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் காலை, மாலை மற்றும் இரவில் சிறப்பு பூஜையும் ,வில்லிசையும் நடந்தன.

    முதல் நாளில் யாக பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. 4-வது நாள் விழா அன்று சுவாமிகள் மஞ்சள் நீராடினர். பின்னர் கடலில் தீர்த்தம் கும்பம் எடுத்து வந்தனர்.அம்பாள் சரஸ்வதி திருக்கோலத்தில் அம்மன் காட்சியருளல் நடந்தது. 5- வது நாளில் மஞ்சள் நீராடல் மற்றும் தாமிரபரணி ஆற்றில் நீராடல் நடந்தது.

    இரவில் சிறுவர்- சிறுமியர் ஆயிரங்கண் பானை மற்றும் மாவிளக்கு பெட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    6-வது நாளான நேற்று மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது.நிறைவு நாளான இன்று காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தன. பின்னர் அன்னதானம் நடை பெற்றது. நிகழ்ச்சி களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதா கிருஷ்ணன், தங்க பாண்டி யன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
    • ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    சாமிதோப்பு அருகே உள்ள செட்டிவிளை ஊர் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் நாளை அதிகாலை 5 மணிக்கு கடல் தீர்த்தம் கொண்டு வருதல், திருநடை திறப்பு, மாலை 6 மணிக்கு நையாண்டிமேளம், 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமிக்கு பூஜை, 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது.

    26-ந்தேதி காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், 8.30 மணிக்கு சிங்காரி மேளம், 9.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், பகல் 12 மணிக்கு வெள்ளை மாரியம்மன், மஞ்சள் மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.

    மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து, 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு உச்சிமாகாளி அம்மனுக்கு பூப்படைப்பு, அலங்கார பூஜை, அதிகாலை 2 மணிக்கு செங்கிடாகாரசாமி, வழி வேட்டைக்காரசாமிக்கு பூஜை, அதிகாலை 5 மணிக்கு பிரம்ம சக்தி, சுடலை மாடசாமிக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    • கொடை விழா நேற்று தொடங்கி வருகிற 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • வருகிற 27-ந்தேதி காலை 9 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புலவர்விளையில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை கொடை விழா நேற்று தொடங்கி வருகிற 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    விழாவையொட்டி கணபதி ஹோமம், தேவி முத்தாரம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை, அன்னதானம், மாலை பக்தர்கள் அம்மனுக்கு முளைப்பாரி வைத்தல், நாத ஸ்வர இன்னிசை கச்சேரி, தேவி முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை போன்றவை நடைபெற்றது.

    இன்று (24-ந்தேதி) காலை 6 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு அபிஷே கம், 8 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, சமயசொற்பொழிவு, உச்ச கால பூஜை, அன்னதானம், பக்தி பஜனை, வில்லிசை போன்றவை நடக்கிறது.

    விளையாட்டு போட்டிகள் வருகிற 27-ந்தேதி காலை 9 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், 30-ந்தேதி மாலை 3 மணிக்கு புள்ளிக்கோலம், ரங்கோலி கோலப்போட்டி, 1-ந்தேதி காலை 8 மணிக்கு பால்குட பவனி, 2-ந்தேதி மாலை 5 மணிக்கு ஒழுகினசேரி ஆற்றில் இருந்து கோவில் நோக்கி அம்மன் யானை மீது பவனி வருதல், பெண்கள் மாவிளக்கு ஏற்றி கோவிலை சுற்றி வலம் வருதல் போன்றவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 7 மணிக்கு அபிஷேக தீபாராதனை, 10 மணிக்கு வில்லிசை, மாலை 3 மணிக்கு அம்மன் நகர்வலம் வருதல், இரவு 8 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு தங்க பூந்தொட்டிலில் திருத்தாலாட்டு, 9 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

    இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 5-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு மணிக்கு தேவி முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், 9 மணிக்கு சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை புலவர்விளை ஊர் தலைவர் செல்வராஜன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • இரவு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது.
    • சுடலை மாட சுவாமி கதை மகுட ஆட்டம் நடக்கிறது.

    ஈத்தாமொழி அருகே உள்ள நெடுவிளை ஊசிக்காட்டு சுடலைமாட சாமி கோவிலில் சித்திரை கொடை விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் பயின்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குவதும், முன்னாள் ஊர் பொறுப்பாளர்களை கவுரவிப்பதும் நடைபெறுகிறது. இரவு நடைபெறும் அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.

    நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையும், 9.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. 26-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஈத்தாமொழி கோம்பேஸ்வரர் கோவில் தீர்த்த இடத்தில் புனித நீர் எடுத்து யானை முன் செல்ல ஊர்வலமாக கோவில் வருவதும், இரவு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது.

    27-ந் தேதி காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமமும், லெட்சுமி ஹோமமும், இரவு 9 மணிக்கு குருசாமி கதை மகுட ஆட்டமும், 11.30 மணிக்கு தீபாராதனையும், 12 மணிக்கு ஊசிக்காட்டு சுடலை மாட சுவாமி கதை மகுட ஆட்டமும், நள்ளிரவு 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    28-ந் தேதி காலை 11.30 மணிக்கு கால சாமிக்கு பூஜையும், மதியம் 1.30 மணிக்கு ஊசி காட்டு சுடலை மாட சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும், 2.30 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு அரிச்சந்திரா கதை மகுட ஆட்டமும், நள்ளிரவு 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 10 மணிக்கு பலவேசக்கார சுவாமிக்கு பூஜையும், 6 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ஆர். ஜோதிலிங்கம், செயலாளர் எல்.வேல்செல்வன், பொருளாளர் எஸ்.குமரேசன், துணைத் தலைவர் சி.அய்யப்பன், துணைச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், ஆலோசகர் என்.எம்.வெற்றிசெல்வன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • கொடை விழா இன்று தொடங்கி 3-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

    நாகர்கோவில் புலவர்விளையில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை கொடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 3-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று கணபதி ஹோமம், தேவி முத்தாரம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு பக்தர்கள் அம்மனுக்கு முளைப்பாரி வைத்தல், 6.30 மணிக்கு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 8.30 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை போன்றவை நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8 மணிக்கு சிறப்பு பூைஜகள் நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, சமய சொற்பொழிவு, உச்சகால பூஜை, அன்னதானம், பக்தி பஜனை, வில்லிசை போன்றவை நடக்கிறது.

    வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், 30-ந் தேதி மாலை 3 மணிக்கு புள்ளிக்கோலம், ரங்கோலி கோலப்போட்டி, 1-ந் தேதி காலை 8 மணிக்கு பால்குட பவனி, 2-ந் தேதி மாலை 5 மணிக்கு ஒழுகினசேரி ஆற்றில் இருந்து கோவில் நோக்கி அம்மன் யானை மீது பவனி வருதல், பெண்கள் மாவிளக்கு ஏற்றி கோவிலை சுற்றி வலம் வருதல் போன்றவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 7 மணிக்கு அபிஷேக தீபாராதனை, 10 மணிக்கு வில்லிசை, மாலை 3 மணிக்கு அம்மன் நகர்வலம் வருதல், இரவு 8 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு தங்க பூந்தொட்டிலில் திருத்தாலாட்டு, 9 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

    இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 5-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு 7 மணிக்கு தேவி முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், 9 மணிக்கு சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை புலவர்விளை ஊர் தலைவர் செல்வராஜன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • நாளை தேவி பூஜை, ஹோமங்கள், இரவு பீட பூஜை நடக்கிறது.
    • 15-ந்தேதி பூப்படை வாருதல், சாமி மஞ்சள் நீராடுதல், சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    தக்கலை அருகில் உள்ள பத்மநாபபுரம், வாழவிளை அழகேஸ்வரி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் கொடைவிழா நேற்று தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், அலங்கார தீபாராதனை, இரவு திருவிளக்கு பூஜை, சமுதாய நலக்கூட்டம், அன்னதானம், மெல்லிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தீர்த்த சங்கரணம், கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள், ஹோமம், நாளை(புதன்கிழமை) மாலை தேவி பூஜை, ஹோமங்கள், இரவு பீட பூஜை, 13-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாகவாசனம், திரவ்யஷோமம், காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம், மாலையில் பஜனை, புஸ்பாபிஷேகம், தீபாராதனை, 14-ந்தேதி காலை 8 மணிக்கு பாறை இசக்கியம்மன் கோவில் பூஜை, 9 மணிக்கு பெருமாள்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வருதல், மதியம் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், 15-ந்தேதி காலை 9 மணிக்கு பூப்படை வாருதல், சாமி மஞ்சள் நீராடுதல், தொடர்ந்து சாமி வீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பொறுப்பாளர் வேலுதாஸ் தலைமையில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் தாணு, துணைத்தலைவர் ராமசாமி, செயலாளர்கள் சபரீசன், விஜயகுமார், ரவி, விழா கமிட்டி தலைவர் கண்ணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×