search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பத்மநாபபுரம் வாழவிளை அழகேஸ்வரி முத்தாரம்மன் கோவில் கொடை விழா 6 நாட்கள் நடக்கிறது
    X

    பத்மநாபபுரம் வாழவிளை அழகேஸ்வரி முத்தாரம்மன் கோவில் கொடை விழா 6 நாட்கள் நடக்கிறது

    • நாளை தேவி பூஜை, ஹோமங்கள், இரவு பீட பூஜை நடக்கிறது.
    • 15-ந்தேதி பூப்படை வாருதல், சாமி மஞ்சள் நீராடுதல், சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    தக்கலை அருகில் உள்ள பத்மநாபபுரம், வாழவிளை அழகேஸ்வரி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் கொடைவிழா நேற்று தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், அலங்கார தீபாராதனை, இரவு திருவிளக்கு பூஜை, சமுதாய நலக்கூட்டம், அன்னதானம், மெல்லிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தீர்த்த சங்கரணம், கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள், ஹோமம், நாளை(புதன்கிழமை) மாலை தேவி பூஜை, ஹோமங்கள், இரவு பீட பூஜை, 13-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாகவாசனம், திரவ்யஷோமம், காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம், மாலையில் பஜனை, புஸ்பாபிஷேகம், தீபாராதனை, 14-ந்தேதி காலை 8 மணிக்கு பாறை இசக்கியம்மன் கோவில் பூஜை, 9 மணிக்கு பெருமாள்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வருதல், மதியம் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், 15-ந்தேதி காலை 9 மணிக்கு பூப்படை வாருதல், சாமி மஞ்சள் நீராடுதல், தொடர்ந்து சாமி வீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பொறுப்பாளர் வேலுதாஸ் தலைமையில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் தாணு, துணைத்தலைவர் ராமசாமி, செயலாளர்கள் சபரீசன், விஜயகுமார், ரவி, விழா கமிட்டி தலைவர் கண்ணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×