search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆரல்வாய்மொழி புலமாடன் சாமி கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது
    X

    ஆரல்வாய்மொழி புலமாடன் சாமி கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது

    • கொடை விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந் தேதி சாமிகள் ஊர் சுற்றி வருதல் நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி யாதவர் சமுதாய புலமாடன், ஈனன், பேச்சியம்மன் சாமி கோவில் கொடை விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, தொடர்ந்து குடியழைப்பு, தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெறும்.

    பூஜைகளை ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்துகிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளங்களுடன், முளைப்பாரி, பால்குடங்களுடன் ஊர்வலமாக கோவில் வருதல் நடைபெறும். ஊர்வலத்தை ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் உச்சிகால தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு 8 மணிக்கு சாமி கதைபாடுதல், நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, படைப்பு, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெறும். வருகிற 27-ந் தேதி மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3 மணிக்கு சாமிகள் ஊர் சுற்றி வருதல் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×