search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்"

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

    சாத்தூர்,

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இம்மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. 8 நிரந்தர உண்டியல் 1 கோசாலை உண்டியல் உள்பட 9 உண்டியல்கள் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன.

    அதில் ரொக்கம் ரூ.37 லட்சத்து 67 ஆயிரத்து 839-ம், தங்கம்- 179.96 கிராம், வெள்ளி- 551.84 கிராம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.

    இந்து அறநிலைய துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளர் யக்ஞநாராயணன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம், மகாராஜன், நவரத்தினம், அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர்.

    தமிழக அரசு உத்தரவின் படி உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

    • இறந்து கிடந்த முதியவர் யார்? என தெரியவில்லை.
    • அவரது கழுத்தில் டயாலிசிஸ் செய்ததற்கான சிரெஞ்சு உள்ளது

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அடுத் துள்ள சுக்குப்பாறை தேரி விளை சிவ சுடலைமாட சுவாமி கோவில் பின்புறம் நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தென்தாம ரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் அங்கு கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை கைப்பற்றிஆசாரி ள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்த முதியவர் யார்? என தெரியவில்லை. மேலும் அவரது கழுத்தில் டயாலிசிஸ் செய்ததற்கான சிரெஞ்சு உள்ளதால் அவர் சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோயால் அவதிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன உளைச்சலால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில்களில் உள்ள சி.சி.டி.வி.காமிரா பதிவு காட்சிகளை கைப்பற்றி ஆய்வு
    • போலீசார் இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், அருமனை, களியக்காவிளை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இந்து கோவில்களில் தொடர்ந்து உண்டியல்களை உடைத்து திருடும் சம்பவம் நடந்து வந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு நடந்த கோவில்களில் உள்ள சி.சி.டி.வி.காமிரா பதிவு காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையன் யார் என தெரிய வந்தது.

    நாகர்கோவில் ராமன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்பரசன் (வயது 29) என்பவர் தான் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

    இதை யடுத்து தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் அருளப்பன் தலைமை யிலான போலீசார் இன்று அதிகா லையில் அன்பர சனை மார்த்தா ண்டம் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கோரிக்கை
    • இந்த கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

    நாகர்கோவில்:

    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நாகர்கோவில் நாகராஜா கோவில், கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசாமி கோவில், வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் கோவில், பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே இக்கோவில்களின் தேர் ஓடும் வீதிகளில் உள்ள மின் வயர்களை புதைவடங்களாக மாற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புரட்டாசி மாத பிறப்பையொட்டி நடக்கிறது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    கன்னியாகுமரி:

    பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது. அதனால் புரட்டாசி மாதம்பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம்.

    இதனால் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகமா கும். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தது.

    புரட்டாசி மாதபிறப்பை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில்இன்று விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவி லில் இன்று காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 5 மணிக்கு தோமாலை சேவையும் அதைத்தொடர்ந்து இரவுசுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்றுஅதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும் 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும் தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப்பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ண சாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ் ணன் கோவிலில்உள்ள கிருஷ்ணசாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன் சுவாமி கோவில், கோட்டார்வா கையடிஏழகரம்பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதப்பிறப்பை யொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

    • விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • கொழுக்கட்டை, பொரி படைத்து வழிபாடு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி இந்து மகா சபா பாரதிய ஜனதா தமிழ்நாடு சிவசேனா உள்பட பல்வேறு இந்த அமைப்பு கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முக்கிய சந்திப்புகள் பொது இடங்களில் விநா யகர் சிலைகளை இன்று அதிகாலையிலேயே பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு பக்தர்கள் கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தார்கள். மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 2 அடி முதல் 10 அடி உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய் யப்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற் கொண்டனர். விநாயகர் சிலைகள் உரிய அனுமதி வாங்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகர் கோவில்களிலும் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள், அபிஷேகங்கள் நடந்தது. இதை எடுத்து விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோட்டார், மீனாட்சிபுரம், வடசேரி, கிருஷ்ணன் கோவில் உள்பட நாகர் கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநா யகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விநாயகருக்கு பொரி, கொழுக்கட்டை படைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்றிரவு தக்கலை, குளச்சல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட் டார். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா நடைபெற்றது.
    • சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த ஆனங்கூர் அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ விச்வசேனர், ஸ்ரீ தேவி -பூ தேவி சமேதாய ஆதிகேசவ பெருமாள் சக்கரயோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சாமி , நவக் கிரஹ மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

    தொடக்க விழாவில் அனங்கூர் பஞ்சாயத்து தலைவர் சிங்காரவேலு தலைமையில் அன்னதானம் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் தொடங்கி வைத்தார். சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×