search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
    X

    குமரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

    • விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • கொழுக்கட்டை, பொரி படைத்து வழிபாடு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி இந்து மகா சபா பாரதிய ஜனதா தமிழ்நாடு சிவசேனா உள்பட பல்வேறு இந்த அமைப்பு கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முக்கிய சந்திப்புகள் பொது இடங்களில் விநா யகர் சிலைகளை இன்று அதிகாலையிலேயே பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு பக்தர்கள் கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தார்கள். மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 2 அடி முதல் 10 அடி உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய் யப்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற் கொண்டனர். விநாயகர் சிலைகள் உரிய அனுமதி வாங்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகர் கோவில்களிலும் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள், அபிஷேகங்கள் நடந்தது. இதை எடுத்து விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோட்டார், மீனாட்சிபுரம், வடசேரி, கிருஷ்ணன் கோவில் உள்பட நாகர் கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநா யகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விநாயகருக்கு பொரி, கொழுக்கட்டை படைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்றிரவு தக்கலை, குளச்சல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட் டார். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×