search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு
    X

    பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு

    • புரட்டாசி மாத பிறப்பையொட்டி நடக்கிறது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    கன்னியாகுமரி:

    பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது. அதனால் புரட்டாசி மாதம்பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம்.

    இதனால் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகமா கும். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தது.

    புரட்டாசி மாதபிறப்பை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில்இன்று விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவி லில் இன்று காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 5 மணிக்கு தோமாலை சேவையும் அதைத்தொடர்ந்து இரவுசுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்றுஅதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும் 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும் தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப்பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ண சாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ் ணன் கோவிலில்உள்ள கிருஷ்ணசாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன் சுவாமி கோவில், கோட்டார்வா கையடிஏழகரம்பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதப்பிறப்பை யொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

    Next Story
    ×