search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்"

    • விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் டவுன் 2-வது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    தற்போது இந்த கோவில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் கோவில் சுவரில் ஒரு அரசியல் கட்சியின் போஸ்டர் மற்றும் சினிமா போஸ்டர் அத்துமீறி ஒட்டப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுக்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் திருத்தொண்டர்கள் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் திறந்த வெளிகள் அழகு சீர்குலைப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம், சாயரட்சை பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
    • இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ராமேசுவரம்

    நாளை (28-ந்தேதி) சனிக்கிழமை நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம், சாயரட்சை பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    இரவு 12 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி 1.44 மணிய ளவில் அக்னி தீர்த்த கட லில் தீர்்த்தவாரி உற்சவம் நடைபெறும். தொடர்ந்து சுவாமி வீதி உலா வந்து அதிகாலை 3.30 மணியளவில் கோவிலை வந்தடைவார். அதன் பின்னர் நடை திறக்கப்பட்டு கிரகண அபிஷேகமும், அர்்த்தஜாம பூஜையும் நடைபெறும்.

    தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, ஸ்படிகலிங்க பூஜை, திருவனந்தல் பூஜைகள் நடைபெறும். சந்திர கிரகணத்தின் போது இரவு 10 மணி முதல் அதி காலை 3.30 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டி ருக்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவார்கள்.

    இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திருப்பத்தூர் அருகே கருவேம்பு செல்ல அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடக்கு இளையாத்தங் குடியில் பூரண புஷ்கலா சமேத கருவேம்பு செல்ல அய்யனார் கோவில் உள்ளது. இங்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கடந்த ஜூன் 20-ந் தேதி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சேங்கையிலிருந்து பிடி மண் கொடுத்தல் நடந்தது. தொடர்ந்து அரண்மணை குதிரை, நாட்டுக்குதிரை தலா ஒன்று, கிராமத்து குதிரை 32, நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிராமத்தார்களும், தங்கள் கிராமசாமியாடிகளுடன் சூளைக்கு வந்து புரவி களுக்கு மரியாதை செய்தனர். பின்பு சாமியாட்டம் நடந்தது. புரவி களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் தங்களுக்கு பாத்தியப்பட்ட புரவிகளை தோளில் சுமந்தபடி எட்டரை கிராம மக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புரவிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த புரவி எடுப்பு விழாவில் வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, கோயில் இளையாத்தங்குடி, சந்திரன் பட்டி, சேவிணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, ரகு நாதப்பட்டி, கீரணிப்பட்டி, முத்தூர்,விராமதி, கல்லாப்பேட்டை, அச்சரம் பட்டி, காவேரிபுரம் உள்ளி ட்ட எட்டரை கிராமத்தினர் பங்கேற்றனர். போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஆடி பூரம் விழாவையொட்டி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
    • இதை தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிேஷம், அலங்காரம், தீபாரானை நடந்தது.

    சென்னிமலை:

    ஆடி பூரத்தினை முன்னிட்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பெரிய நாயகி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை யொட்டி கோவிலில் யாக பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிேஷம், அலங்காரம், தீபாரானை நடந்தது. தொடர்ந்து உற்சவர் ஊஞ்சலில் எழுந்த ருளினார். ஊஞ்சலில் வைத்து பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அம்மனை ஊஞ்சலில் வைத்து ஒதுவார் ஆனந்த சாமிகள் பாட்டு பாடி ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலை மையில் மதி குருக்கள், தபுராஜ் சிவாச்சாரியார் ஆகியோர் அம்மனுக்கு ஊஞ்சல் ஆட்டினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில் தீட்சிதர்கள் சிலர் கார் வண்ணனை நெட்டி தள்ளி தாக்கி உள்ளனர்.
    • கார் வண்ணன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்து இருந்தார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை அடுத்துள்ள சிவபுரியை சேர்ந்தவர் கார் வண்ணன். சிவ பக்தர்.

    இவர் கடந்த 21-ந் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள 21 படிக்கட்டு அருகே சென்று கொண்டிருந்த போது கோவில் தீட்சிதர்களுக்கும் கார்வண்ணனுக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவில் தீட்சிதர்கள் சிலர் கார் வண்ணனை நெட்டி தள்ளி தாக்கி உள்ளனர். இது குறித்து கார் வண்ணன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் சிதம்பரம் பஸ் நிலையம் மற்றும் நகர் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் சிவபுரி பகுதியை சேர்ந்த பக்தர் கார் வண்ணன் சாமி தரிசனம் செய்ய சென்றபோது தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விராலிமலை அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு முத்துமாரியம்மன் கோவில் திறக்கப்பட்டது
    • இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மேலபச்சகுடி ஊராட்சி தென்னிலை பட்டியில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு நடத்தி வந்த 3 தரப்பினர்களுக்கு இடையே முதல் மரியாதை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் கோயில் பூட்டப்பட்டது. இதனால் திருவிழா நடத்த முடியாமலும், தினசரி வழிபாடு நடத்த முடியாமலும் பக்தர்கள் மனவேதனை அடைந்து வந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தமிழக இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதுகோட்டை மாவட்ட தேவஸ்தான அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட 3 தரப்பினரையும் அழைத்து கோயில் திறக்கப்படுவதாக தெரிவித்ததோடு மேற்படி முதல் மரியாதை தொடர்பாக ஏதேனும் நிவர்த்தி வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடிக்கொள்ளமாறு அறிவுறுத்தினர்.

    அதைதொடர்ந்து திருக்கோயில் தஞ்சாவூர் இணை ஆணையர் ஞானசேகரன், புதுக்கோட்டை உதவி ஆணையர் அனிதா, திருக்கோவில் தக்கார் சந்திரசேகர், குளத்தூர் சரக ஆய்வாளர் யசோதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர், திருக்கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டு நித்திய பூஜை நடைபெற்றது. 2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவ பக்தரை தீட்சிதர்கள் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    • கார்வர்ணனை தள்ளி நிற்குமாறு கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரியை சேர்ந்தவர் கார் வண்ணன் (வயது 61). சிவ பக்தர்.

    இவர் தினமும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அது போல் நேற்று சாமி தரிசனம் செய்ய நடராஜர் கோவிலுக்கு வந்தார்.

    அப்போது அவர் சுவாமி முன் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை நடராஜர் கோவிலில் தீட்சிதர்களாக உள்ள கனக சபாபதி, அவரது மகன் ஸ்ரீவர்ஷன் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

    கார்வர்ணனை தள்ளி நிற்குமாறு கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கனகசபாபதி அவரது மகள் ஸ்ரீவர்ஷன் ஆகியோர் சிவபக்தர் கார்வண்ணன் கன்னத்தில் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த கார்வண்ணன் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து அவர் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து தீட்சிதர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் கள் அமைந்துள்ளன.
    • 12 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் தேர்த்திருவிழாவிற்கு ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் இடையப்பட்டியில் இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் கள் அமைந்துள்ளன.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் தேர்த்திருவிழாவிற்கு ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.

    இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு மாரியம்மன் கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் மாவிளக்கு சுமந்து, அம்மனுக்கு துதி பாடிச் சென்றனர்.

    இதனைத்தொடர்ந்து, சேலம் லட்சுமணூர் கோடங்கி நாயக்கனூர் கிராமிய கலை குழுவினரின் தேவராட்டம் நடைபெற்றது. வெண்ணிற வேட்டி சட்டை அணிந்து, தாரை தப்பட்டை, உறுமிமேள இசைக்கேற்ப நடனமாடிய கலைஞர்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.

    புதன்கிழமை மகா சக்தி மாரியம்மன் ரதம் ஏறுதல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல், உருளைத்தண்டம் போடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் தீர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விமான வாகனம், ரதத்தேர் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் அலகு குத்தி ஊர்வலமாக வந்து பக்தர்கள் பரவசத்தை ஏற்படுத்தினர்.

    நேற்று (வியாழக்கிழமை) கிராமிய தோல் இசைக்கருவி கள் முழங்க மகாசக்தி மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்து. ராஜவீதியில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மோட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவி லின் வரவு -செலவு கணக்குகளை நிர்வாகிப்பது மற்றும் கோவிலை பரா மரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மோட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதிதாக புனர மைக்கப்பட்ட இக்கோவிலின் வரவு -செலவு கணக்குகளை நிர்வாகிப்பது மற்றும் கோவிலை பராமரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினர்களும் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த

    22-ம் தேதி எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பி னருக்கிடையே சமாதான பேச்சு வார்த்தை நடை பெற்றது. இதில் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் இதுகுறித்து சங்க கிரி வருவாய் கோட்டாட்சி யர் முன்னிலையில் சமா தான பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

    பாதுகாப்பு கருதி சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும் வரை, இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் நுழைந்து எந்த ஒரு நிகழ்வுகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த்துறையினர் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினார் திடீரென அயனாரப்பன் கோவி லுக்குள் நுழைந்து தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர்.

    இதற்கு மற்றொரு தரப்பி னர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறை அலு வலர்கள் சம்பந்தப்பட்ட கோவிலின் பிரதான வாயி லுக்கு பூட்டு போட்டனர். இன்று சங்ககிரி கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறும் சமா தான பேச்சு வார்த்தைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததிருந்தனர்.

    இதனை அடுத்து சம்மந்தப்பட்ட ஒரு ஒரு தரப்பினர்கள் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் திரண்டு வந்து அய்யனா ரப்பன் கோவில் பிரதான வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்ப பகுதியில் விடிய விடிய பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளாக இன்றும் அப்பகுதியில் சாமியான பந்தல் அமைத்து திரளான பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கை யிலான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் கோவில் பகுதி யில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • பாலமேடு அருகே உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை பூண்டி கொடுத்த வகையறா பங்காளிகள் செய்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு கிழக்கு தெருவில் அமைந்துள்ள மார்நாடு கருப்புசாமி, ராக்காயி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த பூஜையில் மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூண்டி கொடுத்த வகையறா பங்காளிகள் செய்தனர்.

    • இன்று ஹோம வழிபாட்டுடன் விழா தொடங்கியது.
    • 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பட்டாரியர் புதுதெருவில் புங்கையடி விநாயகர் ஆலயம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவில் கோட்டாறு பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செப்பிட்ட சாஸ்தா டிரஸ்ட் மூலம் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

    இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி இன்று (வெள்ளிக்கிழ மை) காலை தொடங்கி 3 நாட்கள் விழா நடைபெறு கிறது. இன்று காலை 7 மணிக்கு மங்கல இசை, நாதஸ்வரம் ஆகியவற்றுடன் விழா தொடங்கி தேவார பண்ணிசை பாடப்பட்டது.

    தொடர்ந்து மகா கணபதி ஹோமம், புண்யாக வாசனம், நவகிரக ஹோமம், கோ பூஜை செய்யப்பட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 8.30 மணிக்கு நைட் பேர்ட்ஸ் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கி றது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக நாளை (22-ந்தேதி) யும் சிறப்பு வழி பாடுகள், அன்னதானம் போன்றவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வேதிகார்ச்சனை, விநாயகர் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு விமானம், கோபுரம் கலச ஸ்தானம் செய்யப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு கடலூர் டாக்டர் சிவாஜி கண்ணன் வழங்கும் பல் சுவை நிகழ்ச்சி நடக்கிறது.

    23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழ மை) காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெறுகிறது. அதன்பிறகு ராஜகோபுரம், முலாலய கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து புங்கையடி விநாயகருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை, கோ பூஜை நடக்கிறது.

    அதன் பிறகு சிவானி சிவமித்ரா சகோதரர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நாதஸ்வர மேளதாளம் முழங்க விசேஷ அலங்காரத்துடன் மூசிக வாகனத்தில் புங்கையடி விநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவர் நாகராஜன், செயலா ளர் முருகப்பெரு மாள், பொருளாளர் ரவி மற்றும் கவுரவ ஆலோச கர்கள், செயற்குழு உறுப்பி னர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ள னர்.

    விழாவையொட்டி கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற் றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை தலையில் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் 21 வகையான தீபாரதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரி கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று முதல் காலை வேளையில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் லட்சார்ச்சனை நடைபெற்று மாலையில் சிறப்பு அபி ஷேகம் அலங்காரம் நடை பெறும்.

    தொடர்ந்து இன்று (28-ந் தேதி) முளைப்பாரி இடுதல், 31- ந் தேதி திருவிளக்கு பூஜை, 2-ந் தேதி கலை நிகழ்ச்சிகள், 3-ந்தேதி அம்மன் திருவீதி உலா, 4-ந் தேதி பால்குடம், காவடி எடுத்தல், இரவு முளைப்பாரியை அம்மன் சன்னதியில் வைத்தல், இரவு கலைநிகழ்ச்சிகள், 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.

    ×