இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.
கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்தது.
கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்தது.
Published on

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இம்மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. 8 நிரந்தர உண்டியல் 1 கோசாலை உண்டியல் உள்பட 9 உண்டியல்கள் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன.

அதில் ரொக்கம் ரூ.37 லட்சத்து 67 ஆயிரத்து 839-ம், தங்கம்- 179.96 கிராம், வெள்ளி- 551.84 கிராம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.

இந்து அறநிலைய துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளர் யக்ஞநாராயணன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம், மகாராஜன், நவரத்தினம், அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர்.

தமிழக அரசு உத்தரவின் படி உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com