search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம் இடையப்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    இடையப்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்..

    12 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம் இடையப்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    • மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் கள் அமைந்துள்ளன.
    • 12 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் தேர்த்திருவிழாவிற்கு ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் இடையப்பட்டியில் இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் கள் அமைந்துள்ளன.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் தேர்த்திருவிழாவிற்கு ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.

    இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு மாரியம்மன் கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் மாவிளக்கு சுமந்து, அம்மனுக்கு துதி பாடிச் சென்றனர்.

    இதனைத்தொடர்ந்து, சேலம் லட்சுமணூர் கோடங்கி நாயக்கனூர் கிராமிய கலை குழுவினரின் தேவராட்டம் நடைபெற்றது. வெண்ணிற வேட்டி சட்டை அணிந்து, தாரை தப்பட்டை, உறுமிமேள இசைக்கேற்ப நடனமாடிய கலைஞர்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.

    புதன்கிழமை மகா சக்தி மாரியம்மன் ரதம் ஏறுதல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல், உருளைத்தண்டம் போடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் தீர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விமான வாகனம், ரதத்தேர் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் அலகு குத்தி ஊர்வலமாக வந்து பக்தர்கள் பரவசத்தை ஏற்படுத்தினர்.

    நேற்று (வியாழக்கிழமை) கிராமிய தோல் இசைக்கருவி கள் முழங்க மகாசக்தி மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்து. ராஜவீதியில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×