தென்தாமரைகுளம் கோவில் அருகே இறந்து கிடந்த தொழிலாளி

இறந்து கிடந்த முதியவர் யார்? என தெரியவில்லை. அவரது கழுத்தில் டயாலிசிஸ் செய்ததற்கான சிரெஞ்சு உள்ளது
அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் 
அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் 
Published on

கன்னியாகுமரி:

அகஸ்தீஸ்வரம் அடுத் துள்ள சுக்குப்பாறை தேரி விளை சிவ சுடலைமாட சுவாமி கோவில் பின்புறம் நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தென்தாம ரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் அங்கு கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை கைப்பற்றிஆசாரி ள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த முதியவர் யார்? என தெரியவில்லை. மேலும் அவரது கழுத்தில் டயாலிசிஸ் செய்ததற்கான சிரெஞ்சு உள்ளதால் அவர் சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோயால் அவதிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன உளைச்சலால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com