search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் திட்டம்"

    • ரூ.2,883 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டத்துக்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நடந்தது.
    • அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்க உத்தர விட்டுள்ளார்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில், துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூ. 2,883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதேபோல் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்க உத்தர விட்டுள்ளார். இதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:- தலைவர் செஹானாஸ் ஆபிதா:- நகராட்சி பகுதியில் நிலவும் நிறை, குறைகளை நேரடியாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தெரிவிக்க வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடிக்காமல் வலைத்த ளங்களில் நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி கமிஷனர், அலுவலர்கள் மீது தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தனிப்பட்ட பேச்சை நிறுத்த வேண்டும்.

    கவுன்சிலர் சேக் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் முகமது ஹாஜா சுகைபு:- கீழக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அரசு மருத்து வமனையில் புதிய பாதை ஏற்படுத்த மருத்துவ நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    1- வது வார்டு பாதுஷா: கீழக்கரை நகராட்சியாக தரம் உயர்த்திய பிறகும் கீழக்கரை கோரிக்கைகளை இதுவரையிலும் நிறை வேற்றப்படாததால் வருகின்ற நகர் சபா கூட்டத்திற்கு கலந்து கொள்ள போவதில்லை என்று கூறினார்.

    இதேபோல் கவுன்சி லர்கள் முகம்மது காசிம், பவித்ரா, சப்ராஸ் நவாஸ், நசுருதீன் உள்ளிட்டோர் சாக்கடை வசதி, அடிப்படை வசதிகள், வரிவசூல் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி முன்னாள் வாகன ஓட்டுநர் அய்யப்பனுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் நகராட்சி பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், மேலாளர் தமிழ்ச்செல்வன், இளநில உதவியாளர் உதயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சினை களை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபை கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன
    • நெல்லை மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சினை களை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபை கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    பகுதிசபா கூட்டம்

    குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில் மார்ச் 22 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

    கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் மக்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் பகுதி சபாக்களை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒவ்வொரு உள்ளாட்சி மன்றமும் வார்டு கமிட்டி என்ற குழுவை ஒவ்வொரு வார்டுக்கும் அமைத்து கொள்ள முடியும்.

    அந்த வார்டின் கவுன்சிலரையே தலைவராக வார்டு கமிட்டிக்கு நியமிக்க வேண்டும். அது போலவே வார்டில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் பகுதி சபை என்ற 'ஏரியா சபா'வையும் உள்ளாட்சி மன்றம் நிறுவிக்கொள்ளலாம்.

    அந்த வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், அந்த ஏரியா சபையின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்கள்.

    கலெக்டர், எம்.எல்.ஏ.

    இந்நிலையில் உள்ளாட்சி தினத்தையொட்டி இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சி களில் முதல்முறையாக பகுதிசபா கூட்டம் நடைபெற்றது.நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு பகுதியான பாளை அன்புநகரில் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    24 மணி நேரமும் தண்ணீர்

    நெல்லை மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொலை நோக்கு பார்வையில் நெல்லை மாநகரத்தை தூய்மையான நகரமாக மாற்ற முதல் கட்டமாக 5 வார்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நிலத்தடி நீரை மேம்படுத்து வதற்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    கால்வாய் தூர்வாரும் பணி

    மாநகரப் பகுதிகளில் உள்ள பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவை தூர்வாரப்பட்டு குடியிருப்புகளில் இருந்து குப்பைகளை கால்வாயில் கொட்டாத வண்ணம் கம்பி வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநகர பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநகரப் பகுதியில் உள்ள வார்டு மக்களின் குறைகளை நேரடியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாளைக்கு குடிநீர்

    பின்னர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கூட்டத்தில் பொது மக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் .

    இதற்காக தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடித்தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மாவட்ட நிர்வாகம், மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த திட்டம் வந்தால் பாளையங்கோட்டை பகுதியில் பல வார்டுகள் பயன்பெறும்.

    ரூ. 512 கோடியில் பாதாளசாக்கடை திட்டம் பகுதி- 3 விரைவில் வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

    மேயர், துணை மேயர்

    அதேபோல் பழைய பேட்டையில் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து வார்டு பகுதியிலும் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் அப்பகுதியின் குறைகள் எடுத்துரைக்கப்பட்டு அதனை தீர்க்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • ராஜபாளையத்தில் நடைமுறைக்கு வராத தாமிரபரணிகுடிநீர் திட்டத்துக்கு வரி வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்.
    • இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயவாளர் மாரியப்பன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணி இன்னும் நிறைவடையவில்லை.

    தாமிரபரணி கூட்டு குடிநீர்த்திட்டப் பணிக்காக நகராட்சியின் பங்குத் தொகையாக ரூ.53 கோடியை நகராட்சியில் இருந்து ஈடு செய்வதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், மொத்த மதிப்பீட்டில் 20 சதவீதத்தை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனாக பெறுவதற்கு 11.7.2016-ம் தேதியன்று அ.தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

    அந்த தீர்மானத்தில், குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத் தொகைக்கான கட்டணத்தை மாற்றியமை த்தும் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி குடியிருப்புகளுக்கு 500 சதுரஅடி வரை மாதம் ரூ.50 என்பதை ரூ.150/- ஆகவும், அதற்கு மேல் சதுர அடிக்கு தகுந்தவாறு கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் அந்த தீர்மான த்தின் நிறைவாக திருத்தியமைக்கப்பட்ட கட்டண உயர்வு மற்றும் வைப்புத்தொகை திட்டம் பயனுக்கு வரும் நாள் முதல் நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் ராஜபாளை யம் நகராட்சியில் இன்னும் நிறைவடையவில்லை. பணிகள் நிறைவடையாமல் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்திருப்பதை யொட்டி மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருத்தியமைக்கப்பட்ட குடிநீர் கட்டணத்தை 1.4.2022 முதல் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க ஆரம்பித்துள்ளது.

    இது குறித்து பொது மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் 21.7.2022-ம் தேதியன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், 500 சதுர அடிக்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.100 எனவும், அதற்குமேல் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.150 எனவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றியது.

    தி.மு.க தலைமையிலான நகர்மன்றம் குடிநீர் கட்டணத்தை மாற்றிய மைத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், இதற்கு முன் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க. நகர்மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி குடிநீர் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1800 (இதுவரை ஆண்டுக்கு ரூ.600) வழங்க வேண்டுமென குறிப்பாணை வீடுதோறும் வழங்கி உள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே தாங்கள் தலையிட்டு தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் வரை உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்று வரும் 4-வது குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார், துணைமேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
    • அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணை யில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் அருகில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அணையில் போது மான அளவு தண்ணீர் இல்லாததால் புதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ 250 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புத்தன்அணையில் இருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கு மேற்கொள்ள ப்பட்டுவரும் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணி குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி மற்றும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டு அந்த பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ 250 கோடி செலவில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த திட்டத்திற்கு மேலும்ரூ 45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுரூ 296 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது பொது மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும்.

    எனவே இந்த பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு நாகர்கோவில் நகர மக்க ளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அழிவின்போது மண்டல தலைவர் ஜவஹர் திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    கோவில்பட்டியில் ரூ.81.82 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்த 2-வது குடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #EdappadiPalanisamy
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.81.82 கோடி செலவில் 2-வது குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வந்தது. இன்று அந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் அத்தியாவசிய தேவைகளை அரசு நிறைவேற்றுகிறது. குடி மராமத்து திட்டத்தால் நல்ல பலன் கிடைத்துள்ளது. விவசாயிகளை காக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது.

    வீதிகளில் மூடப்படாமல் இருக்கும் குழாய்களை மூடி நீர் வீணாவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும். தங்கத்துக்கு இணையான தண்ணீரை வீணாக்க கூடாது. விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டுகுடிநீர் திட்டம் உருவாக்கப்படும்.  

    இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #EdappadiPalanisamy
    ×