search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் திட்டம்"

    • நிலக்கோட்டை பேரூராட்சிக்கு ரூ.37 கோடி மதிப்பில் அணைப்பட்டி பேரணையிலிருந்து குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
    • சிறுமலை நீர்த்தக்கம், நிலக்கோட்டை சப்-கோர்ட்டு கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சியில் தான். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என பேசினார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு ரூ.37 கோடி மதிப்பில் அணைப்பட்டி பேரணையிலிருந்து குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசிய தாவது,

    மாணவிகளின் நலன் கருதி தி.மு.க. ஆட்சியில் நிலக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். அதேபோல் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில், 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு ள்ளது.

    மேலும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத அனைத்து பெண்களுக்கும் விரைவில் வழங்கப்படும். நான் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான பிறகு 100 நாள் வேலை திட்ட பெண்களுக்கு தினக்கூலி ரூ.250-லிருந்து ரூ.300 வரை வழங்க முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கோட்டை பேரூராட்சி யில் அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் நோக்கத்தோடு ரூ.37 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கு, காவேரி தண்ணீர் மட்டும் இல்லாமல் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து குடிதண்ணீர் வழங்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிலக்கோ ட்டையில் தொடங்கப்பட உள்ளது. 1975-ஆம் ஆண்டுகளில் நல்ல தண்ணீர் வழங்க தி.மு.க. ஆட்சி முடிவு செய்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உத்தரவின் பேரில், பேரணையிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டது.

    கொடைரோடு அருகே சிறுமலை நீர்த்தக்கம், நிலக்கோட்டை சப்-கோர்ட்டு கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சியில் தான். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., நிலக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் மணிகண்டன், சவுந்தரபாண்டியன், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, பேரூ ராட்சி தலைவர் சுபாஷினி கதிரேசன், துணை தலைவர் முருகேசன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன்,

    அம்மைய நாயக்கனூர் நகர செயலாளர் விஜயகுமார், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கோகுல்நாத், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பூங்கொடி முருகு, மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் அறிவு என்ற சின்னமாயன், நில க்கோட்டை முக்குலத்தோர் பிரிவு சங்க செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.2800 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் கூறினார்.
    • மக்களுக்கு எளிதாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் சென்னையில் நடை பெற்ற மாவட்ட கலெக்டர் கள், போலீஸ் சூப்பிரண்டு கள் மாநாட்டில் கலந்து கொண்டு ராமநாதபுரம் வந்த கலெக்டர் விஷ்ணு சந்திரன், நிருபரிடம் கூறிய தாவது:-

    தமிழக அரசின் அனைத்து திட்டப்பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். திட்டங் களை நிறைவேற்றுவதில் உள்ள குறைகளை தவிர்க்க வும், பணிகளை விரைவு படுத்தவும் உத்தரவிட்டார்.

    குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி பனை மர விதைகளை நட்டு வளர்க்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருவதை பாராட்டி இந்த திட்டத்தை முழுமையாக வெற்றி பெற வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    ஏற்கனவே செயல் பாட்டில் உள்ள அனைத்து குடிநீர் வழங்கும் திட்டங்க ளும் ரூ.500 கோடி செலவில் பழுது பார்த்து சீரமைக்கப் பட்டு வருகிறது. அதன்படி பழுதடைந்த குழாய்கள், குடிநீர் தொட்டிகள் சீர மைக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர காவிரியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 2 திட்ட பணிகளும் நிறைவேற்றப் பட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் அடியோடு தீரும். இந்த 2 திட்டங்களையும் அடுத்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.இதனால் குடிநீர் திட்டப் பணிகள் விரைந்து செயல் படுத்தப்படும்.

    அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்தநிலையில் இன்று காலை அன்னூர் குறுக்கிலியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 4-வது குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தலைமை பொறியாளர் வெங்கடேஷ், செயற்பொறியாளர் கண்ணன் ,இளநிலைபொறியாளர் கோவிந்த பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.10.88 கோடி மதிப்பீட்டில் புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் அம்ரூத் 2.0 திட்டத்தை பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பாராளுமன்ற உறுப்பினர்.

    சி.என்.அண்ணாதுரை, கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), மு.பெ.கிரி (செங்கம்), வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், புதுப்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபார திமனோஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, கோபு, புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷ்னாபீ, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது.

    அவினாசி :

    அவினாசி அருகே அன்னூர், கருவலூர், அவினாசி, திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 4 வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவினாசி, மேட்டுப்பாளையம் ரோட்டில் தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    குடிநீருக்காக மக்கள் அவதி பட்டு வரும் நிலையில் இப்படி குடிநீர் வீணாவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனே வடிகால் வாரியத்தனர் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • 11 யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினர்.
    • பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கூடுதல் தலைமை செயலர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா, மேலாண்மை இயக்குநர்(குடிநீர் வடிகால் வாரியம்) தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா,

    எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜ பாளையம் தங்கப் பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களை் சேர்ந்த 1,286 குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சேர்ந்த 45 வழியோர குடியிருப்புகளுக்கான ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    ரூ.48.39 கோடியில் சாத்தூர் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்க டைத் திட்டம், ரூ.251.20 கோடியில் ராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டங்களையும் அமைச் சர்கள் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் ராஜபா ளையம், ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சா த்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகள் பயன்பெற உள்ளன. இதற்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகில் தாமிரபரணி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட உள்ளது. நீர் சேகரிப்பு கிணற்றின் மூலம் பெறப்படும் நீர் புதிதாக வடக்கு குருவிக்குளம் நகர் கிராமத்தில் அமையவுள்ள 17.90 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள உயர்மட்ட மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து 2 பொது தரைமட்ட நீர் உந்து நிலையம் மற்றும் 163 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி களுக்கு 2519.29 கி.மீ நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதில் சாத்தூர் நகராட்சி 3 மண்டலங்கலாக பிரிக்கப்பட்டு, நகரத்தில் உற்பத்தியாகும் கழிவு நீரை பாதாள சாக்கடை திட்ட த்தின் மூலம் சேகரிக்கப்பட உள்ளது. இதில் 6 ஆயிரத்து 500 வீடுகளின் மூலம் உருவாக கூடிய கழிவுநீர் 26.958 கி.மீ. நீளமுள்ள கழிவு நீர் குழாய்கள், 1102 எந்திரங்களை இறக்கும் குழிகள் மற்றும் 3 கழிவு நீரேற்று நிலையங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, இருக்கன்குடி ரோட்டில், நகராட்சி குப்பை கிடங்கிற்கு அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

    ராஜபாளையம் பாதாள சாக்கடை திட்டத்தில் 38,586 வீட்டு இணைப்புகள் மூலம், 5,865 எந்திரத்தை இறக்கும் குழிகளில் இருந்து, கழிவு நீர் உந்து குழாய்கள் மூலம் பெறப்படும் கழிவு நீர், 3 நீரேற்றும் நிலையங்கள் மற்றும் 4 கழிவு நீர் உந்து எந்திரத்தை இறக்கும் குழிகள் மூலமாக உந்தப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படவுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், குழாய்கள் மூலம் கொத்தன்குளம் பகுதியில் அமைந்துள்ள பொதுப் பணித்துறை குளத்தில் சேர்க்கப்படும்.

    இந்த பாதாளச் சாக்கடைத்திட்டம் மூலம் நகராட்சியில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நிலங்கள் அசுத்தம் அடை யாமல் பாதுகாப்பான தாகவும், தூய்மையாகவும் அமையும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தலைமைப் பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், மதுரை) ரகுபதி, மேற்பார்வை பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், கோவில்பட்டி) செந்தூர்பாண்டி, நகர்மன்றத் தலைவர்கள் குருசாமி(சாத்தூர்), பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஊத்துக்குளி பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் இந்த திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராசுக்குட்டி, ஊத்துக்குளி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புத்தன் அணையில் மேயர் மகேஷ் நேரில் ஆய்வு
    • தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தற்போது தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் போதுமான அளவு பொதுமக்களுக்கு இல்லாததால் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்கு ரூ.251 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பைப் லைன் அமைக்கும் பணி, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி மேயர் மகேஷ் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்த நிலையில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக மேயர் மகேஷ் இன்று காலை புத்தன் அணைக்கு சென்றார். அங்கு செய்யப்பட்டுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத பைப் அமைத்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 420 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைக்கப்படுகிறது.

    இதில் தற்பொழுது 380 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக 11 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். மே 31-ந்தேதிக்குள் பணிகள் அனைத்தும் முழுமை பெறும்.

    இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்கப்படும். 4 லட்சம் மக்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள். 85 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளோம். ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர் பிராங்கிளின், மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வடக்கு பகுதிக்கு மேல்நிலைத் தொட்டிகளில் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது.
    • வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை ஆய்வு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு அம்ரூத் திட்டத்தில் 4 வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பணி ஏறத்தாழ நிறைவடைந்து தற்போது வடக்கு பகுதிக்கு மேல்நிலைத் தொட்டிகளில் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது.இதனை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். இரண்டாவது மண்டலம், 7வது வார்டு குருவாயூரப்பன் நகரில் ஆய்வு நடந்தது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    மேல்நிலை தொட்டியில் நீரேற்றும் முறை மற்றும் வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை ஆகியன ஆய்வு செய்யப்பட்டது. குழாய் உடைப்பு சரி செய்தல், சரியான அளவில் குழாய்கள் பதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொ ள்ள அறிவுறுத்தப்பட்டது.

    • ஒப்பந்த தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும்.
    • தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி மற்றும் பேரூராட்சிகளின் குடிநீர் திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு, தூய்மைப்பணி ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்க அரசாணையின்படி மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு சி.பி.ஐ. நகர செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் முத்தையன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாரிமுத்து, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் முருகையன், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.
    • ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை அய்யப்பன் தாங்கல் ஆயில் மில் சாலையில் காலி நிலம் உள்ளது. இது கிருஷ்ணாநதி நீர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலம் ஆகும். இங்கு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேங்கும் குப்பைகள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. 450 தெருக்களில் இருந்து 12.5 டன் குப்பைகள் இந்த நிலத்தில் கொட்டப்பட்டன.

    இதனால் இந்த இடம் சுகாதார சீர்கேடாக மாறி யது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்ப வர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர். அய்யப்பன் தாங்கல் மட்டுமின்றி குன்றத்தூர் பஞ்சாயத்து எல்லைக்கு உள்ளிட்ட கெருகம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளி லும் இதேபோன்று குப்பைகள் கொட்டும் பிரச்சினைகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் சுற்றுச் சூழலை மாசுப்படுத்தியதற்காக உள்ளாட்சி அமைப்பு ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த சில மாதங்களில் ஆயில்மில் சாலையில் கொட்டப்பட்ட 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.

    இதையடுத்து இங்கு 90 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "ஆயில்மில் சாலையில் குப்பைகள் அகற்றப்பட்டாலும், தற்போது அதற்கு இணையாக உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் குப்பைகளை கொட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலமும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்" என்றனர்.

    • பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாமல் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பவன்குமார் பொறுப்பேற்றுள்ளார். அவரை திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அப்போது திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாமல் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மண்டல வாரியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அப்போது கவுன்சிலர்கள் கண்ணப்பன், தங்கராஜ், தமிழ்செல்வி கனகராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

    ×