என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் திட்டம்-பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீர் செய்ய வேண்டும் - கமிஷனரிடம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை
    X

    மாநகராட்சி புதிய கமிஷனர் பவன்குமாரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    குடிநீர் திட்டம்-பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீர் செய்ய வேண்டும் - கமிஷனரிடம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை

    • பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாமல் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பவன்குமார் பொறுப்பேற்றுள்ளார். அவரை திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அப்போது திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடாமல் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மண்டல வாரியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அப்போது கவுன்சிலர்கள் கண்ணப்பன், தங்கராஜ், தமிழ்செல்வி கனகராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

    Next Story
    ×