search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சபை கூட்டம்"

    • ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் எழுந்து வந்து காலால் அம்மையப்பனை எட்டி உதைத்து தாக்கினார்.
    • மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்படி தங்கப்பாண்டியனை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளையார்குளம். இந்த ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விவசாயி அம்மையப்பன் என்பவர், கிராம சபை கூட்டத்தை ஒரே இடத்தில் நடத்தாமல் வெவ்வேறு கிராமங்களில் நடத்த வேண்டும். மேலும் ஊராட்சி செயலாளர்களை மாற்றம் செய்ய வேண்டும் என கூறினார்.

    அப்போது ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் எழுந்து வந்து காலால் அம்மையப்பனை எட்டி உதைத்து தாக்கினார். இதில் அம்மையப்பன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    காந்தி ஜெயந்தியன்று பொதுமக்களின் குறைகளுக்காக போடப்பட்ட கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கப்பாண்டியன் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மான்ராஜ் எம்.எல்.ஏ. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்படி தங்கப்பாண்டியனை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அம்மையப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விவசாயியை எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமறைவாகி உள்ளார்.

    இரவு முழுவதும் தேடியும் தங்கப்பாண்டியன் கிடைக்காத நிலையில் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள் அல்லது கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.
    • பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமங்களை ஒன்றி ணைத்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனா புரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று அவர்களது போராட்டம் 433-வது நாளாக நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் பொதுமக்கள் கிராமசபை கூட்டங்களை புறக்கணித்தனர்.

    பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த 13 கிராமங்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மட்டும் கலந்து கொண்டனர். இதனால் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.

    ஏற்கனவே நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. நேற்று பரந்தூர் விமானநிலையம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆய்வு செய்ய வருவதை எதிர்த்து ஏகனாபுரம் கிராமத்தில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம்.
    • ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக்கூடாது.

    சென்னை:

    கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்றைக்கு கிராம சபையில் பங்கெடுத்த நீங்கள், பங்கேற்காத உங்கள் ஊர் மக்களிடம் போய் சொல்லுங்கள், கிராம சபையை ஒரு ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றக் களமாக கருதி கலந்து கொள்ள வேண்டும் என்று.

    கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும். ஊராட்சியினுடைய எல்லாப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    மகளிர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் கலந்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கிராமசபையில் அவர்கள் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படுகிற பணிகள் பொதுவானதாகவும் எல்லோரும் பயன் பெறும் வகையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கிராம சபை நடைபெற்ற விவரங்களை குறிக்க, பதிவேடு பராமரித்து, எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.

    நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், சுகாதாரம் பேணுதல், முறையான திட, திரவக்கழிவு மேலாண்மை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதை நிலைநிறுத்துகிற வகையில், எல்லா ஊராட்சி மன்ற தலைவர்களும் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.

    விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்கள்தான் அதிகமாக பயனடைகிறார்கள். 1000 ரூபாய் என்பது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. இன்னும் சொன்னால், ஊரகப் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இந்தத் திட்டம் வழிவகை செய்திருக்கிறது.

    ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம். இதுவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

    அனைத்துத் துறையும் வளர வேண்டும் அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம். நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும்.

    "ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக்கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும்" என்று நான் அடிக்கடி சொல்லி கொண்டு வருகிறேன்.

    அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றால், கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாக வேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.

    இன்று (திங்கட்கிழமை) காந்தியடிகளின் பிறந்தநாள். "இந்தியா-கிராமங்களில் வாழ்கிறது" என்று சொல்லி, 'கிராம சுயராஜ்ஜியம்' எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார்.

    தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும், உழைக்கும், உழைக்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • தமிழ்நாட்டில் சோழர் காலம் தொட்டே கிராம சபைக்கூட்டம் வழக்கத்தில் உள்ளது.
    • வேளாண்மைக்கு என்ற தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தி.மு.க. அரசுதான்.

    சென்னை:

    இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    கிராம சபை கூட்டம் நடைபெறுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கம். தமிழ்நாட்டில் சோழர் காலம் தொட்டே கிராம சபைக்கூட்டம் வழக்கத்தில் உள்ளது. மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான்.

    கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் தடையின்றி ஒலிக்க வேண்டும். வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் கிராமங்களே முன்னிலை வகிக்கிறது. 

    கிராம அளவில் கிராம சபை கூட்டம் மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக உள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களும் வளர்ச்சி பெற வேண்டும். கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ரூ.1000-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். வேளாண்மைக்கு என்ற தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தி.மு.க. அரசுதான்.

    தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியையொட்டி 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகே கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை 429 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக கலெக்டர் கூறினர்.
    • பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை 2-ந் தேதி காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்திட உத்தர விடப்பட்டுள்ளது.

    இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நட வடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தி னை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதித்திட அரசு தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • அனைத்து துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.

    கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்கள், ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான ஆண்ட றிக்கை மற்றும் வரவு, செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் குறித்தும் விவா திக்கப்படவுள்ளது. மேலும், அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்து ரைக்கவும், பொது மக்களுக்கு தேவையான விவரங்களை அளித்திடவும், அனைத்து துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    எனவே, பொது மக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • திரு நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டு சார்பில் கிராம சபை கூட்டம் கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் தலைமையில் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் மாணிக்கம் நகர், ஜீவரத்தின மாள் நகர், ஜீவன் நகர், திரு நகர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • விஜய் வசந்த்துக்கு கோவில் சார்பாக மரியாதை செலுத்தினர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மருங்கூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில் கொடை விழாவில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

    பின்பு பத்மநாபபுரம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் விஜய் வசந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

    • 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உடுமலை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் , பொதுமக்கள் பங்கேற்றனர். சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது.அதைத்தொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 839 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பால சுப்பிரமணியம், துணைத்தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராகல்பாவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமை வகித்தார். ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ) கலந்து கொண்டார்.

    இதே போன்று சின்னவீரன் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையிலும் பூலாங்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், உடுமலை வட்ட சட்ட பணிகள் குழுவை சேர்ந்த நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • சில ஊராட்சிகளில் சிறு, சிறு வாக்குவாதங்களுடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    பல்லடம்:

    77-வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதன்படி பல்லடம் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி,அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது. கரைப்புதூர் ஊராட்சியில் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

    இதேபோல செம்மிபாளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமையிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையிலும், மல்லேகவுண்டம்பாளையத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும், பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும், புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி கிராம சபை தலைவர் கவிதாமணி கலந்து கொள்ளாததாலும், ஊராட்சி மன்ற கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி,பணிக்கம்பட்டி ஊராட்சி, அனுப்பட்டி ஊராட்சி, உள்ளிட்டஊராட்சிகளில் சிறு, சிறு வாக்குவாதங்களுடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    • கிராம சபா கூட்டம் பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் நடைபெற்றது
    • கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், மத்தூர் ஊராட்சியில் 77 -ஆம் ஆண்டு கிராம சபா கூட்டம் பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கல்வித்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழு பெண்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இக்கூட்டத்தை மக்கள் நலப்பணியாளர் ராஜா ஒருங்கிணைத்து செய்திருந்தார்.கூட்டத்தி ற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் வெங்க டேசன் செய்திருந்தார்.

    • சுதந்திர தின சிராம சபா கூட்டம் நாயுடு குருகு ப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் (பொறுப்பு) செய்திருந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், பெரு கோபனப்பள்ளி ஊராட்சி யில் சுதந்திர தின சிராம சபா கூட்டம் நாயுடு குருகு ப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, தமிழக அரசு வழங்கும் இலவச வீடு வேண்டியும், முதியோர் உதவித் தொகை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் முரளிதரனிடம் மனுக்கள் அளித்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சத்தியா சரவணன், ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், ஊரக துறை, வேளாண்மைத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, தொண்டு நிறு வனங்கள், மகளீர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் (பொறுப்பு) செய்திருந்தார்.

    ×