search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி மேலாண்மை ஆணையம்"

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது.
    • இது காணொலி வாயிலாக நடைபெறும் என கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது.

    இரண்டாவது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அனைத்துக் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

    இதற்கிடையே, ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவதுதான் கடைசி முடிவு என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார். மேற்படி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

    இந்த விசாரணையின்போது காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேட்கக்கூடும் என்பதால், அதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாக கூட இருக்கிறது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இது காணொலி வாயிலாக நடைபெறும் என கூறப்படுகிறது.

    இதில் தமிழ்நாடு அரசுசார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட போராடுவார்கள். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடைபெறுவதால் அதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறுவார்கள். அதன்பேரில், காவிரி மேலாண்மை ஆணையம் நியாயமான உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம்
    • கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தருகிறோம்

    சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். நாங்கள் மறுபரிசீலனை இல்லாமல் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    கே: உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளாரே?

    ப: உச்சநீதிமன்றம் என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அதுதான் உச்சநீதிமன்றம். சென்னைக்கு இந்த பிரச்சினை ஆரம்பித்ததோ, என்றைக்கு இதே பிரச்சினைதான். அவங்க முதலில் நடுவர் மன்றத்தையே ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு நடுவர் மன்றத்துக்கு வாதாடி அதை பெற்றோம். நடுவர் மன்றத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பு கேட்டோம். அதை கொடுக்க கூடாது என்று கர்நாடகா முட்டுக்கட்டை போட்டது.

    அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் சென்று அதற்கும் தீர்வு கண்டோம். அதன் பிறகு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்றனர். அப்போதும் உச்சநீதிமன்றம் சென்றனர்.

    காவிரி நீர் பிரச்சினையில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    அதை நாங்கள் சந்தித்து தமிழ்நாடு மக்களுக்கு வேண்டிய உரிமையை பெற்றுக் கொண்டுதான் வந்துள்ளோம். இனியும் பெறுவோம்.

    கே: சேப்பாக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் மத்தியில் அமலாக்கத்துறை சோதனை நடத்துள்ளதே?

    ப: அதெல்லாம் எனக்கு தெரியாது.

    கே: இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய தமிழக முதல்-அமைச்சர் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். அங்குள்ள கர்நாடக முதல்-மந்திரியிடம் பேசினார் என்றால் சுமூகமாக முடியும் என்று சொல்கிறார்களே?

    ப: அப்படி பேசினால் குளோஸ் ஆகிவிடுவோம். பேச்சுவார்த்தை சரியில்லை என்றுதான் கோர்ட்டுக்கு சென்று இவ்வளவு தூரம் வந்துள்ளோம். மறுபடியும் பேச சென்றால் நாம் சட்டரீதியாக செல்வதை விட்டு விடுவதாக அர்த்தமாகிவிடும்.

    கே: கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுத்தால் இது முடிவுக்கு வரும் என கூறப்படுகிறதே?

    ப: எங்களை கெடுப்பதற்கு அப்படி சொல்கிறார்கள். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே கடைசி வாய்ப்பு. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு இதில் நடவடிக்கை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவு.
    • உச்சநீதிமன்றத்தில் 6ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கர்நாடகா மனு தாக்கல்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு, உச்சநீதிமன்றத்தில் 6ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கர்நாடகா மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    செப்டம்பர் 12-ம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இந்த முடிவை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    • கர்நாடக அரசு இந்த முறையும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துவிட்டது.
    • கர்நாடக அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது.

    நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், வழக்கம்போல் இந்த முறையும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துவிட்டது.

    அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதை குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என கர்நாடக அரசு கூறியுள்ளது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

    காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழக அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் கோர்ட்டு கேட்டுள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) கூட இருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 55 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது.
    • மத்திய அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காக்க காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தமிழகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அறமும், மனசாட்சியும் இல்லாத கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    அணைகளில் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றமாக நடுவர் மன்றத்தால் கூறப்பட்டுள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக உள்ளது. இந்த வாரியம் தான் பக்ரா, நங்கல், பியாஸ் திட்டங்களின் அணைகளை இயக்கி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், சண்டிகர், டெல்லி ஆகிய 7 மாநிலங்களுக்கு நீரையும், மின்சாரத்தையும் வழங்கி வருகிறது.

    55 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் 1991-ம் ஆண்டில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பும், 2005-ம் ஆண்டில் வழங்கிய இறுதித் தீர்ப்பும் கர்நாடக அரசால் ஓர் ஆண்டு கூட சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் இப்போதைய அமைப்பு மாற்றப்பட வேண்டும்.

    பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது
    • கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை.

    காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தரா மையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
    • தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை.

    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
    • தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை.

    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இந்த கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இத்தகவலை தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா கூறி உள்ளார். 

    • காவிரி நீரை திறந்து விடாததால் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
    • உடனே காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று மதியம் கூடுகிறது.

    தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தரவேண்டிய காவிரி நீரை திறந்து விடாததால் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.

    அதன் அடிப்படையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய சேர்மன் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    இதில் தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இன்றைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு முறைப்படி வழங்காததால், உடனே காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.

    கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்து விடாமல் பாக்கி வைத்துள்ளது. அதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது.
    • இந்த ஆணையம் அமைக்கப்பட்டது முதல் இதுவரை 21 கூட்டம் நடந்துள்ளது.

    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடக்கிறது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்காததால், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தையும் அளித்தார். இதனால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன்பேரில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடக துணை முதல் மந்திரி சிவகுமார் தெரிவித்தார். இதற்கிடையே மழையும் பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் முழுமையான அளவில் தண்ணீர் வரவில்லை.

    இன்று நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.

    ×