search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி"

    • லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது
    • 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கரூர்

    கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் ஒரு காரில் தர்மபுரியை சேர்ந்த தந்ைத- மகளை அழைத்து கொண்டு பழனியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த கார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தடாக்கோவில் தேசியநெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் ேநற்று இரவு 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, அரியலூரில் இருந்து கேரளாவிற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் வந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து ெதாடா்பாக ேகரளாைவ ேசா்ந்த லாரி டிைரவா் அகில் என்பவாிடம் அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர்.
    • இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (50).இவர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் நடை பயிற்சிக்காக வெள்ளையம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் சகுந்தலாவிற்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. சீனிவாசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சேலம்-கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்தார்.
    • அப்போது, கோவை பக்க மிருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் பரத், (வயது 22). எலக்ட்ரிசியன். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தன் தாயார் ஜோதிமணி(56), என்பவருடன் சேலம்-கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்தார். அப்போது, கோவை பக்க மிருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த தாய், மகன் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த பொன்ராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    பவானி:

    பவானி அருகே உள்ள செலம்பகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (58) விவசாயி. சம்பவத்தன்று இரவு முனியப்பன் தனது மொபட்டில் பால் கேன் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    இந்நிலையில் பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த முனியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் முனியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத வகையில் சண்முகம் மீது மோதியது.
    • அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள ஆரியகவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (45). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. சண்முகம் தற்போது தனது மாமியார் ஊரான செல்லிகவுண்டனூரில் வசித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் சண்முகம் வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் அந்தியூர் ரோட்டில் குறிச்சி பிரிவு என்ற பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத வகையில் சண்முகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும்இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற சிட்டிபாபு.
    • திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சா லையை கடக்க முயன்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற சிட்டிபாபு (38) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும் போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சா லையை கடக்க முயன்றார். அப்போது காரைக்குடி யில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சிட்டிபாபு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிட்டிபாபு உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
    • இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள புன்னம் நாரப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சக்திவேல் (29). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் மகன் நந்தகோபால் (26).

    இவர்கள் 2 பேரும் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோடு, ஜம்பை பேரூராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளுடன் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சக்திவேல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையிலும், நந்தகோபால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கார் டிரைவர் அர்த்தனாரீஸ்வரர் என்பவரிடம் போலீசார் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜம்பையில் டீக்கடை முன்பாக ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெருந்துறை சிப்காட் அருகே கார் வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட்டில் இருந்து பிஸ்கெட்டுகள் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு ஒரு லாரி சென்றது. அப்போது டிைர வர் வினாயக மூர்த்தி (49) லாரியை சிப்காட் அருகே ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.

    அப்போது பெருந்துறை-கோவை ரோட்டில் மோட்டார் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கும், பெருந்துறை பாண்டியன் நகரை சேர்ந்த நந்தகுமார் (28), நசியனூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (29), புங்கம்பாடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34), ஈரோடு, சம்பத் நகரை சேர்ந்த மணிவண்ணன் (27) ஆகிய 4 பேர் கோவை செல்வதற்காக ஒரு காரில் வந்தனர்.

    காரை நந்தகுமார் ஓட்டினார். அப்போது அந்த கார் பெருந்துறை சிப்காட் அருகே வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பினபுரம் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். மேலும் கார்த்திகேயன், சுரேஷ்குமார், மணி வண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
    • இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    பவானி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நவீன் (19). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் பவானியில் இருந்து மேட்டூர் ரோட்டில் நேற்று மாலை நவீன் அவருடைய நண்பர் அருண் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நவீனை அக்கம் பககத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதில் அருண் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • பள்ளிக்கு சென்ற முத்துரோஷன் சைக்கிளில் வீட்டிற்கு வரும்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.
    • விபத்தில் காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் முத்து ரோசனின் வலது கால் சிதைந்து அவன் அலறி துடித்தான்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தில் வசித்து வருபவர் ராம்குமார் (64). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முத்து ரோஷன் (வயது 11). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற முத்துரோஷன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கோமான் மேலத்தெருவில் வரும்போது பின்னால் வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் முத்து ரோசனின் வலது கால் சிதைந்தது. அவன் அலறி துடித்தான். உடனே அக்கம் பக்கத்தினர் அவனை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை ராம்குமார் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

    விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த முகமது பாசில் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி பலியானார்.
    • கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தென்னேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64) விவசாயி, இவர் நேற்று சொந்த வேலை காரணமாக எலவனாசூர்கோட்டை க்கு சென்றார். வேலை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது திம்மலை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்த போது அவருக்கு பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் இவரது மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெங்கடேசன் மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் கோவை வடமதுரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகள் பிரியதர்ஷினி (29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×