மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
Published on

பவானி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நவீன் (19). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் பவானியில் இருந்து மேட்டூர் ரோட்டில் நேற்று மாலை நவீன் அவருடைய நண்பர் அருண் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நவீனை அக்கம் பககத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதில் அருண் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com