கார் மோதி விவசாயி பலி

பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
கார் மோதி விவசாயி பலி
Published on

பவானி:

பவானி அருகே உள்ள செலம்பகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (58) விவசாயி. சம்பவத்தன்று இரவு முனியப்பன் தனது மொபட்டில் பால் கேன் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் பவானியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று காடையாம்பட்டி ஏரி அருகில் சென்று கொண்டிருந்தபோது முனியப்பன் ஒட்டி வந்த மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த முனியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் முனியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இச்சம்பம் தொடர்பாக பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com