search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மீது"

    • வாலிபர் லாரியில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதினாலும், திம்பம் மலைப்பாதை வழியாக செல்வதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாலும் இந்த வழித்தடத்தை வாகன ஓட்டிகள் அதிக அளவில் தற்போது பயன்படுத்தி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் மைசூரில் இருந்து அந்தியூர் வழியாக ஈரோட்டிற்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி தாமரைக்கரை அருகே செட்டிநொடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ேமாட்டார் சைக்கிளில் வந்த வெள்ளிமலை பகுதியை சேர்ந்த வாலிபர் லாரியில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    மேலும் இதுகுறித்து பர்கூர் மலைவாழ் மக்கள் கூறுகையில்,

    அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது. மேலும் சாலைகள் சரிவர அந்த பகுதியில் போடப்ப டாததே இதற்கு காரணம் என்றும், குண்டும், குழியுமாக இருக்கும் சூழலை ஏற்பட்டிருப்பதனால் லாரி டிரைவர்கள் அந்த குழிகளில் விடாமல் வேறு பகுதிக்கு வாகனத்தை இயக்க வே ண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டு எதிரே வரும் வாகனத்தின் மீது மோதும் நிலை ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

    இதனை நெடுஞ்சாலைத் துறை உடனடியாக பார்வையிட்டு அதனை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி ஒன்று இண்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென ரோட்டில் நிறுத்தப்பட்டது.
    • அப்போது பின்னால் வந்த யுவராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சரளை, பொன்முடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (32). இவர் நேற்று நள்ளிரவு பெருந்துறையில் இருந்து சரளை செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சிப்காட் ரவுண்டானா அருகே வந்த போது இவருக்கு முன்னால் சென்ற சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி ஒன்று இண்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென ரோட்டில் நிறுத்தப்பட்டது.

    அப்போது பின்னால் வந்த யுவராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட யுவராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பெருந்துறை சிப்காட் அருகே கார் வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட்டில் இருந்து பிஸ்கெட்டுகள் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு ஒரு லாரி சென்றது. அப்போது டிைர வர் வினாயக மூர்த்தி (49) லாரியை சிப்காட் அருகே ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.

    அப்போது பெருந்துறை-கோவை ரோட்டில் மோட்டார் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கும், பெருந்துறை பாண்டியன் நகரை சேர்ந்த நந்தகுமார் (28), நசியனூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (29), புங்கம்பாடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34), ஈரோடு, சம்பத் நகரை சேர்ந்த மணிவண்ணன் (27) ஆகிய 4 பேர் கோவை செல்வதற்காக ஒரு காரில் வந்தனர்.

    காரை நந்தகுமார் ஓட்டினார். அப்போது அந்த கார் பெருந்துறை சிப்காட் அருகே வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பினபுரம் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். மேலும் கார்த்திகேயன், சுரேஷ்குமார், மணி வண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×