கார் மோதி தலைமை ஆசிரியை கால் முறிவு

தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர். இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.
கார் மோதி தலைமை ஆசிரியை கால் முறிவு
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (50).இவர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் நடை பயிற்சிக்காக வெள்ளையம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

இதில் சகுந்தலாவிற்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. சீனிவாசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com