search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதல்"

    • திண்டிவனம் வழியாக தனது இனோவா காரில் சென்று கொண்டி ருந்தனர்.
    • தடுப்புக்கட்டையில் வேகமாக மோதி, சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்:

    புதுச்சேரி முத்துப்பிள்ளைப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரராகு, ரியல் எஸ்டேட் பிரமுகர். இவரது மகன் அருண்சர்மா. இவர்கள் 2 பேரும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியாக தனது இனோவா காரில் சென்று கொண்டி ருந்தனர்.இந்த காரை, புதுச்சேரி உப்பளம் காந்தி தெருவை சேர்ந்த வெங்கட்ராமன், என்பவர் ஓட்டிச்சென்றார். கார் கிளியனூர் அருகே ஓமந்தூரை கடக்கும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்த தடுப்புக்கட்டையில் வேகமாக மோதி, சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் , வீரராகு, அருண்சர்மா மற்றும் வெங்கட்ராமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த கிளியனூர் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் காயம டைந்த 3பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் குறித்து கிளியனூர் போ லீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம் தீர்த்த களம் மேம்பாலம் அருகே வரும்போது சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மோகன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    விழுப்புரம்:

    திருச்சி பகுதியை சேர்ந்தவர் மோகன் வயது 27 இவர் திண்டிவனம் பகுதியில் விளம்பர போர்ட் பணி செய்து வருகிறார் இந்த நிலையில் இவர் திண்டிவனம் பகுதிக்கு பொருள்கள் வாங்குவதற்காக வேலை செய்யும் இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது திண்டிவனம் தீர்த்த களம் மேம்பாலம் அருகே வரும்போது சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மோகன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.இருசக்கர வாகனம் காருக்கு அடியில் மாட்டிக் கொண்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காரை ஓட்டி வந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த அமுதப் பிரியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரையூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூர் குழிப்பட்டி பகுதியை சேர்ந்த வர் பால்பாண்டி(வயது43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோசலாதேவி அயன் கரிசல்குளத்திற்கு சென்றிருந்தார். அவரை கூப்பிட்டு வருவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பேரையூர் சிலைமலைபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த கார், அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பால்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பேரையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பால்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து கோசலாதேவி கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் ராமர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலூர் அருகே கார் மோதி 2 பெண்கள் பலியானர்கள்.
    • காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியபட்டு பகுதியில் இன்று மதியம் கலிபாமேரி உள்பட 5 பேர் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் கலிபாமேரி, தேவதர்ஷினி ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

    • செல்வகார்த்தி கார் டிைரவராக வேலை பார்த்து வருகிறார்.
    • வானூர் வாழப்பட்டாம் பாளையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலம் பொறையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகார்த்திக்(30). கார் டிைரவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நண்பர் பொறையூர் கிராமத்தை சேர்ந்த ராகவன் (17) இவருடன் செல்வகார்த்திக் புதுச்சேரி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வானூர் வாழப்பட்டாம் பாளையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராகவனை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரியநாயக்கன்பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ள பிளிச்சி பெட்டதாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 50). இவரது சொந்த ஊர் பொள்ளாச்சியை அடுத்த தொழில்பேட்டையாகும். கணவர் இறந்ததையடுத்து இங்கு வந்து வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை.

    இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஒட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியவில் வீட்டில் இருந்து மளிகை கடைக்கு செல்ல மேட்டுப்பாளையம் சாலையை கடந்துள்ளார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

    பீகார் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


    பாட்னா :

    பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் அருகே இருக்கும் சிகாந்த்ரா எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரியில் மோதி 
    சொகுசு கார் விபத்துக்குள்ளானது. 

    இதில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக நேற்று பிறந்த பெண் குழந்தை மட்டும் விபத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்தது. 

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    நிவாஸ் பாண்டே மற்றும் சீமா தேவி தம்பதியருக்கு நேற்று வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. எனவே, தாய் மற்றும் குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வாடகை கார் மூலம் உறவினர் சகிதம் பயணித்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குஜராத் மாநிலத்தில் எதிரே வந்த லாரியின் மீது மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அகமதாபாத் ::

    குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்கோட்-மோர்பி தேசிய நெடுஞ்சாலையில் தங்காரா எனும் பகுதியில் எதிரே வந்த லாரியின் மீது சொகுசு கார் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் பற்றிய தீ வேகமாக கார் முழுதும் பரவியது.

    இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    சண்டிகர் :

    பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே இருக்கும் கால்சியான் எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரு லாரி நின்றுகொண்டிருந்தது. அப்போது, இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த சொகுசு கார், இந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

    இதில், காரில் பயணித்த 8 பேரில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 வயது குழந்தை மட்டும் விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்தது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×