திண்டிவனத்தில் கார் மோதி வாலிபர் காயம்

திண்டிவனம் தீர்த்த களம் மேம்பாலம் அருகே வரும்போது சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மோகன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
திண்டிவனத்தில்  கார் மோதி வாலிபர் காயம்
Published on

விழுப்புரம்:

திருச்சி பகுதியை சேர்ந்தவர் மோகன் வயது 27 இவர் திண்டிவனம் பகுதியில் விளம்பர போர்ட் பணி செய்து வருகிறார் இந்த நிலையில் இவர் திண்டிவனம் பகுதிக்கு பொருள்கள் வாங்குவதற்காக வேலை செய்யும் இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது திண்டிவனம் தீர்த்த களம் மேம்பாலம் அருகே வரும்போது சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மோகன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.இருசக்கர வாகனம் காருக்கு அடியில் மாட்டிக் கொண்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த அமுதப் பிரியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com