search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் காயம்"

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார்.
    • தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் துட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் தங்கபாலு (26). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் தினேஷ்குமார் (20) என்பவருடன் நேற்று மாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டிற்கு சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை தங்கபாலு ஓட்டி சென்றார். ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு இரவு 7.30 மணியளவில் சேலம் திரும்பினர்.

    அப்போது கடும் பனி மூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடியே இருவரும் மலைப்பாதையில் சென்றுள்ளனர். 17-வது மற்றும் 18-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது தங்கபாலுவின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார். தங்கபாலு இடது காலில் முறிவு ஏற்பட்டு சாலையில் கிடந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் மற்றும் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்கபாலுவை மீட்டு சிகிச்சை அளித்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த தினேஷ்குமாரை தேடினர். இதில் அதிர்ஷ்டவசமாக தினேஷ்குமார் தலை மற்றும் கைகளில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரையும் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சியோல்:

    தென்கொரியா லெசூர் மாகாணம் சியோங்கனம் பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.பலர் அங்குள்ள கடைக்குள்ளும், வெளியிலும் இருந்தனர்.

    அப்போது வணிக வளாகத்துக்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதை ஓட்டி வந்தவர் திடீரென நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காரை நிறுத்தி விட்டு மர்ம வாலிபர் கீழே இறங்கினான். திடீரென அவன் கையில் வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்தினான். இதில் பலருக்கு கத்திக்குத்து விழுந்தது.

    இதை பார்த்ததும் பொது மக்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 9 பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இது பற்றி அறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் மீது காரை ஏற்றி கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருக்கு 22 வயது இருக்கும். அவர் ஏன் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாக்குதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
    • தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆக்ரா:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒருவரை வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கினார்.அந்த கும்பல் ஆபாசமாக திட்டியபடி அவரை கீழே தள்ளி தலையில் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் அப்படியே மயங்கி விட்டார்.

    அதன் பிறகு தான் அந்த மோசமான சம்பவம் அரங்கேறியது. காயத்துடன் உயிருக்கு போராடியவர் மீது வாலிபர் சிறுநீர் கழித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலுக்கு ஆளானவரை பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று சேர்த்தனர். ஆனால் தாக்கப்பட்டவர் இது தொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் தாக்குதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சுமார் 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஆதிய்யா என்ற வாலிபர் சிக்கினார். போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பு நடந்ததாகவும், தற்போது தான் அந்த வீடியோ காட்சி வெளியானதாவும் போலீசார் தெரிவித்தனர்.

    • கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • வினோதினி சகோதரர்கள் பார்த்திபனை ஓட ஓட விரட்டி பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்து பெருமுனை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பார்த்திபன் (வயது 28). இவருக்கும் கோழியூர் கிராமத்தை சேர்ந்த வினோதினி (23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தற்போது பார்த்திபன் மற்றும் இவரது மனைவி வினோதினி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

    இந்நிலையில் நேற்று வினோதினியின் கணவர் வீட்டில் இருக்கும் வினோதினிக்கு சொந்தமான திருமண சீர்வரிசை பொருட்களை எடுப்பதற்கு வினோதினியின் சகோதரர்கள் விக்னேஷ், விஜய் மற்றும் இவர்களுடைய நண்பர்களுடன் பெருமுளையில் உள்ள பார்த்திபன் வீட்டிற்கு சென்றனர். அப்போது பார்த்திபனுக்கும், வினோதினியின் சகோதரர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதனால் வினோதினி சகோதரர்கள் பார்த்திபனை ஓட ஓட விரட்டி பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர். 

    இதனை தடுக்க வந்த பார்த்திபனின் மைத்துனர் வடிவேலையும் அவர்கள் கல் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பார்த்திபனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பார்த்திபனை சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி பலத்த காயமடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி தாலுகா, ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாமல் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி பலத்த காயமடைந்தார்.

    அப்போது அந்த சாலை வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை.

    இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கொல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய் (வயது 35). இவர் கோவை தியாகி குமரன் வீதி பகுதியில் தங்கி தங்க நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

    அவர் இன்று காலை வழக்கம்போல வீட்டில் சமைப்பதற்காக கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமானது. அதிர்ஷ்டவசமாக பிஜாய் உயிர் தப்பினர்.

    சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அங்கு காயம் அடைந்து கிடந்த பிஜாயை மீட்டனர். அவரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம் தீர்த்த களம் மேம்பாலம் அருகே வரும்போது சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மோகன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    விழுப்புரம்:

    திருச்சி பகுதியை சேர்ந்தவர் மோகன் வயது 27 இவர் திண்டிவனம் பகுதியில் விளம்பர போர்ட் பணி செய்து வருகிறார் இந்த நிலையில் இவர் திண்டிவனம் பகுதிக்கு பொருள்கள் வாங்குவதற்காக வேலை செய்யும் இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது திண்டிவனம் தீர்த்த களம் மேம்பாலம் அருகே வரும்போது சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மோகன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.இருசக்கர வாகனம் காருக்கு அடியில் மாட்டிக் கொண்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காரை ஓட்டி வந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த அமுதப் பிரியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் ஐ.ஆர்.டி.டி. மெயின் ரோடு பகுதியில் பச்சியப்பன் (67) பணி ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் பவானியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு நடராஜபுரம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிகிறது.

    பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, சுகுணாபுரம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது (25) என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் பச்சியப்பன் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவானி போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அப்துல் ஹமீது பவானி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இறந்த பச்சியப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×