லாரி மீது பைக் மோதி வாலிபர் காயம்

எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி பலத்த காயமடைந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி மீது பைக் மோதி வாலிபர் காயம்
Published on

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி தாலுகா, ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாமல் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி பலத்த காயமடைந்தார்.

அப்போது அந்த சாலை வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை.

இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com