search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்தி ஜெயந்தி"

    • மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு சுதந்திர தின விழா, காந்தி ஜெயந்தி மற்றும் குடியரசு தின விழாவின் போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
    • அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, பிரதோஷம் மற்றும் அஷ்டமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே செந்தாம் பாளையத்தில் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு 1997-ம் ஆண்டு கோவில் அமைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கடந்த 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி செந்தம்பாளையம் வையாபுரி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் காந்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கோவிலில் தினமும் பூஜை நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் வளாகத்தில் விநாயகர் சரஸ்வதி, லட்சுமி, சத்தீஸ்வரர், துர்க்கை, முருகன், ஆஞ்ச நேயர், அய்யப்பன் மற்றும் காலபைரவர் சுவாமிகளுக்கு தனித்தனி ஆலயங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சுவாமிகளுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய்க்கு சுதந்திர தின விழா, காந்தி ஜெயந்தி மற்றும் குடியரசு தின விழாவின் போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மேலும் அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, பிரதோஷம் மற்றும் அஷ்டமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    கவுந்தப்பாடி மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய் கோவி லில் 154-வது காந்தி ஜெயந்தி விழாவையொட்டி 26-ம் ஆண்டு பொங்கல் திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    இதையடுத்து காலை 9 மணிக்கு மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய்க்கும் புனித நீர் மற்றும் நவதிரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்திக்கு கையில் தேசியக்கொடி கொடுத்து பொங்கல் படைத்து சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது.

    விழாவில் பவானி, அந்தியூர், அத்தாணி, கோபி செட்டிபாளையம், காஞ்சி கோவில், பெருந்துறை, சித்தோடு, ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தேச பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியை, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி செந்தாம்பாளையம் காந்தி கோவிலுக்கு இன்று காலை தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி ஆனந்தன் வந்தார். தொடர்ந்து அவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தரிசனம் செய்தார்.

    விழா ஏற்பாடுகளை நிர்வாகி தங்கராஜ், ஊர் கவுண்டர் ஆறுமுகம், ஊர்காரியக்காரர் பழனிச்சாமி, கோவில் அர்ச்சகர் கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.

    சென்னை:

    காந்தி ஜெயந்தியையொட்டி மத்திய மந்திரி எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற நாமக்கல் கவிஞர் வரிகள் உரைக்கும் அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை. இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காந்திஜெயந்தியன்று இறைச்சி கடைகள் மற்றும் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் அய்யலூர், வடமதுரை, குள்ளனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மது மற்றும் இறைச்சி விற்பனை நடைபெற்றது.

    குள்ளனம்பட்டி:

    மகாத்மா காந்தி மது, புலால் உண்பதை தவிர்த்து வந்தார். மேலும் ஆரோக்கியமான வாழ்விற்கு இவற்றை தவிர்ப்பதே நல்லது என அறிவுறுத்தினார். இதனால் காந்திஜெயந்தியன்று இறைச்சி கடைகள் மற்றும் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதும் மது மற்றும் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்த போதிலும் தடுக்க முடியவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இறைச்சி கடைகள் பெரும்பாலும் திறந்து விற்பனை நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுைற என்பதால் அசைவ உணவு சாப்பிட அனைத்து தரப்பினரும் விரும்பினர். இதனால் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்தனர்.

    இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்ட போதிலும் திண்டுக்கல் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு இறைச்சி விற்கப்பட்டது. மேலும் மீன்கடைகளும் திறந்திருந்தன.

    இதேபோல் நகர்பகுதியில் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுகூடங்கள் அடைக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆட்கள் மதுவிற்பனையில் ஈடுபட்டனர். நேற்றே அதிகளவில் மது மொத்தமாக வாங்கி வைத்து இன்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக காலை முதலே குடிமகன்கள் மதுவாங்கி சென்றனர்.

    மேலும் மாவட்டத்தில் அய்யலூர், வடமதுரை, குள்ளனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மது மற்றும் இறைச்சி விற்பனை நடைபெற்றது.எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • முதுகுளத்தூர் தாலுகா குமாரகுறிச்சி கிராமத்தில் முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா குமாரகுறிச்சி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடுவிழா ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளியில் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தலைமை ஆசிரியர் நாகவள்ளி, ஆசிரியைகள் வாகிதா யாஸ்மின், மாதவி, செவிலியர் ரஞ்சிதா கலந்து கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் முத்து லட்சுமணன், ஹரிஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்ககேற்றனர். மகாத்மா காந்தியின் சிறப்பு குறித்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

    • மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபி ஆகிய தினத்தை முன்னிட்டு அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உணவு விடுதிகளுடன் கூடிய அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மேற்கண்ட நாள்களில் மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 2-ந் தேதி, காந்திஜெயந்தி மற்றும் 9-ந் தேதி மூடப்பட வேண்டும்.
    • மிலாடி நபி அன்றும் டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள், அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 2-ந் தேதி (ஞாயிற்று கிழமை), காந்திஜெயந்தி மற்றும் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி அன்றும் டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள், அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மாநகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தியன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மீறி செயல்படும் கடைகளில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்துவிதமான ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது. மேற்கண்ட கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்கள் உள்ளிட்டவை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்படும்.

    கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு இறுதி அறிக்கையினை உறுதி செய்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்கள் உள்ளிட்டவை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும். மேலும், கிராம ஊராட்சிகள், பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும்.
    • கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டக் கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம்,ஜல் ஜீவன் திட்டம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், 2022-23-ஆம் ஆண்டு பயனாளிகள் விவரங்கள் கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் போன்ற கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    பொதுமக்கள் கிராம சபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு காந்தி ஜெயந்தியன்று சைவ உணவு வழங்க இந்திய ரெயில்வே திட்டமிட்டு வருகிறது. #GandhiJayanti #IndianRailways
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்திய ரெயில்வே புதிய திட்டம் ஒன்றை செய்து வருகிறது. அதன்படி 2018-20 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ரெயில்களில் காந்தி ஜெயந்தி அன்று சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். அந்நாளை சைவ நாளாக கொண்டாட திட்டம் வகுத்து வருகிறது.



    மேலும், மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட தண்டி பகுதிக்கு சபர்மதி பகுதியிலிருந்து சிறப்பு ரெயில் விடவும் திட்டமிட்டுள்ளது. ரெயில் டிக்கெட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் அச்சிடப்படும் என கூறியுள்ளது.


    இத்திட்டத்திற்கு கலாச்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதே போல் கடந்த மாதம்,  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய குழு ஒன்றை அமைத்தார்.  #GandhiJayanti #IndianRailways

    ×