

மதுரை
மதுரை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்துவிதமான ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது. மேற்கண்ட கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.