search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமசபை"

    • ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
    • சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் 500 -க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு பகுதியினர் ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்ற இந்த சுடுகாட்டுக்கு முறையான பாதை வசதி இல்லாத நிலையில் அருகில் உள்ள பட்டா நிலத்தின் வழியை பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் மேல் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத வண்ணம் தடுப்புகள் அமைத்தும் ,செல்லும் வழியில் பள்ளங்கள் தோண்டியும் நிலத்தின் உரிமையாளர் இடையூறு செய்து வருவதாக தெரிய வருகின்றது .

    இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த நிலையில் 3 முறை சமாதான கூட்டம் திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றும் இதுவரையில் சுடுகாட்டுக்கு செல்லுகின்ற பாதையை துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும்,ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் கருவம்பாக்கம் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கமுதியில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் மகளிர் உரிமை தொகை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கமுதி ஊராட்சி ஒன்றியம், தலை வநாயக்கன்பட்டியில் மகளிர் உரிமை தொகைக் கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல்வர் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழராமநதி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமையில் சிறப்பு கிராம சபைகூட்டம் நடைபெற்றது. ஊர் நல அலுவலர் (மகளிர் திட்டம்) ராசாத்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மைதீன் ஊராட்சி செயலர் முத்து ராமு மற்றும் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஆனையூர், பாக்குவெட்டி, பொந்தம்புளி, பெருநாழி, திம்மநாதபுரம், பேரையூர், காத்தனேந்தல், உட்பட ஏராளமான ஊராட்சிகளில் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    • சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு விவாதிக்கப்பட்டது.
    • ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் சீனிவாசன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் சீனிவாசன் கலந்து கொண்டு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    இக்கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவீ னம், 2022-23ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்ப ணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெ டுப்பு அறிக்கை, மறு-கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நம்ம ஊரு சூப்பரு சிறப்பு பிரசாரம், தனிநபம் சுகாதாரம், ஒருமுறை பயன்ப டுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், ஜல்ஜீவன் திட்டம் - விடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி தீர்மானம்,சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மகளிர் சுயஉதவி குழுக்கள், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, குழந்தைக ளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை, சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதில் ஊராட்சி செயலர் மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் அனைத்து கிராம அண்ணா மறுமணச் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட எரவாஞ்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி தேவி பாலதண்டாயுதம் தலைமை யிலும், அகரகொந்தகையில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையிலும், கொட்டா ரக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ் காந்தி தலைமையிலும், ஏனங்கு டியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையிலும்,வடகரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையிலும், பில்லாளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சகாயராஜ் தலைமையிலும், ராராந்திமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா தேவி தலைமையிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.

    • வாராப்பூர் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள கட்டையம்பட்டி பண்ணை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சியின் வரவு-செலவு விவரங்களை மக்களிடம் நேரடியாக துண்டு பிரசுரங்கள் மூலம் அனைவரிடமும் தலைவர் வழங்கினார். ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, குடிநீர், கிராம வளர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதமரின் மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டம், ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

    விவசாயத்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ,காவல்துறை அதிகாரிகள் , வருவாய்த்துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய பற்றாளர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    • உத்திரகோசமங்கையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு பங்கேற்று ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ''நம்ம ஊரு சூப்பரு'' குறித்த விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    • கமுதி அருகே கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.

    இளநிலை உதவி யாளர் நிறைபாண்டியன் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் ராஜேசுவரி கதிரேசன், ஊராட்சி செயலாளர் வேல் முருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி முழுவதும் கூடுதல் மின்விளக்கு அமைத்தல், கருங்குளம் மயானத்திற்கு எரிமேடை மற்றும் காத்திருப்போர் கூடம், தடுப்புச்சுவர் அமைத்தல், புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பது குறித்தும், பாக்குவெட்டி, கருங்குளம் கிராமத்தில் மயானச்சாலை அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதேபோல் ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்காளர் தெய்வ மணிகண்டன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராமநாதன், ஊராட்சி செயலர் ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு ஒப்புதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    கீழராமநதி ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் முத்துமாரி முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மைதீன், ஊராட்சி செயலர் முத்துராமு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கே.நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
    • கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

    இதில், உலக தண்ணீர் தின கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் பணிகள் நடக்கின்றன.

    மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சித்திட்டம் , தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன்(குடிநீர்) இயக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும், ஊராட்சிகளில் தற்போது நடைபெறும் அனைத்து பணிகள், கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல்.

    கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு,

    ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி/சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல்,

    2021 -22 மற்றும் 2022 - 23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.

    • சோழவந்தான் பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • துணை தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார்.

    சோழவந்தான்

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடந்தது. திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் மாலிக், பற்றாளர் சுஜாதா முன்னிலை வகித்தனர். செயலர் வேலன் அறிக்கை வாசித்தார். திருவேடகம் ஊராட்சி தலைவர் பஞ்வர்ணம் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பற்றாளர் பேச்சியம்மாள் முன்னிலை வகித்தார். சுதாபிரியா அறிக்கை வாசித்தார். காடுபட்டி ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் பிரதாப், பற்றாளர் வீரலட்சுமி முன்னிலை வகித்தனர். செயலர் ஒய்யணன் அறிக்கை வாசித்தார்.

    தென்கரை ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலர் முனிராஜ் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சி தலைவர் பவுன்முருகன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் பாக்கியம், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, பற்றாளர் கருப்பையா முன்னிலை வகித்தனர். செயலர் திருசெந்தில் அறிக்கை வாசித்தார்.

    கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். செயலர் முணியாண்டி அறிக்கை வாசித்தார். இரும்பாடி ஊராட்சியில் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலர் காசிலிங்கம் அறிக்கை வாசித்தார்.

    ரிஷபம் ஊராட்சியில் தலைவர் மணி என்ற சிறுமணி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பற்றாளர் நாகராஜ், துணை தலைவர் சிவசாமி முன்னிலை வகித்தனர். எழுத்தர் முத்துவேலம்மாள் அறிக்கை வாசித்தார். நெடுங்குளம் ஊராட்சியில் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் இஞ்சி தேவர் பற்றாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். செயலர் ரேவதி அறிக்கை வாசித்தார்.

    முள்ளிபள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார். செயலர் மனோபாரதி அறிக்கை வாசித்தார். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் 204 கிராம ஊராட்சிகளிலும் நாளை காலை இக்கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
    • பொதுமக்களுக்கு விவரங்களை அளித்திட அனைத்து துறை அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காந்தி ஜெயந்தியான நாளை (2-ந்தேதி) நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணிக்கு நடத்தி அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறை வெண்வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஓன்றியங்களுக்குட்பட்ட 204 கிராம ஊராட்சிகளிலும் நாளை காலை இக்கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள், ஊராட்சியின் முந்தைய ஆண்டுக்கான அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

    மேலும் , அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்கு தேவை யான விவரங்களை அளித்திடவும் அனைத்து துறைகளின் அலுவலர்களும் இக்கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும்.
    • கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டக் கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம்,ஜல் ஜீவன் திட்டம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், 2022-23-ஆம் ஆண்டு பயனாளிகள் விவரங்கள் கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் போன்ற கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    பொதுமக்கள் கிராம சபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்.

    • மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும்.
    • இதில் அடுத்த 5 ஆண்டுகளில் கிராமத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் மேற்கொள்ளப்பட வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் கிராமத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகளான அடித்தட்டு மக்களின் நலன், பெண்களின் முன்னேற்றம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிவகைகளை கண்டறிதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் நீர் மேலாண்மை, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேபோன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×