search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானைகள்"

    • மாவட்ட வன அதிகாரி இளையராஜா தகவல்
    • யானை கூட்டம் அடிக்கடி உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல் லும் சாலையில் யானை களின் நடமாட்டம் அதிக ரித்து வருகின்றன. இந்த சாலையில் கோதமடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 5 யானைகள் சாலை யை மறித்தவாறு நடுவே நின்று கொண்டிருந்தன.

    அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யானை கூட்டத்தை கண்டு பீதியடைந்தனர். இதை யடுத்து சாலையின் இருபக்க மும் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு மரண பயத்துடன் யானை கூட்டத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த யானை கூட்டம் சாலையை விட்டு நகராமல் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தன. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த யானை கூட்டம் சாலையை விட்டு மெல்ல... மெல்ல நகரத் தொடங்கின.

    இதையடுத்து சாலை யோரமாக வாகனங்களில் காத்திருந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே அங்கி ருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

    இதுபோல் யானை கூட்டம் அடிக்கடி பேச்சிப்பாறை சாலையில் உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, வனத்துறையினர் யானைகளின் நட மாட்டத்தை கண்காணித்து சாலை வழியாக செல்லும் தொழிலாளர்கள், மின் வாரிய ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவ டிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா கூறியதாவது:-

    வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் யானை கூட்டம், கேரள வன பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கன்னி யாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் புல் மற்றும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ள தால் அவற்றை உணவுக்காக யானைகள் தேடி வருவ துண்டு.

    தற்போது பேச்சிப்பாறை முதல் கோதையாறு வரை யானைகள் நடமாடி வருவ தாக கூறப்படும் பகுதி யானைகளின் வழித்தடங்கள் என்ற பட்டியலில் உள்ள பகுதிகளில் மட்டுமே அவை உலா வந்துகொண்டு இருக் கின்றன. முன்னர் ரப்பர் தோட் டங்களில் வாழை ஊடு பயிராக போடப்பட்டு இருந்ததால் அவற்றை உண்ண யானைகள் வரும். ஆனால், தற்போது வாழை களுக்கு பதிலாக அன்னாசி பழங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவும் யானைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதேநேரம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட் டுள்ளது. மற்றபடி யானை கள் அவற்றின் வழித்தடங் களில் மட்டுமே நடமாடி வருகிறது.

    குறிப்பிட்ட சீசன் முடிவ டைந்ததும் இந்த யானைகள் இடம் பெயர்ந்து விடுவது வழக்கம். எனினும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யானை வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானைகள் காலை 6 மணி அளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.
    • ஊருக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டம் மாங்கரை மற்றும் தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று தடாகம் அடுத்த மூலக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.

    இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். எனினும் அந்த பகுதியிலேயே சுற்றி வந்த யானைகள் காலை 6 மணி அளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. ஊருக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    • தடுப்பு சுவரை இடித்துவிட்டு காங்கிரீட் சுவர் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை
    • யானை கூட்டம் விவசாயி ஒருவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி உள்ளது.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி உடையார்கோ ணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வரு கிறார்கள். இந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    அட்டகாசம் செய்யும் யானைகள் தோவாளை கால்வாயில் உள்ள பாலத்தின் வழியாக வந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறை சார்பில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தடுப்பு சுவர்களை இடித்து தள்ளி விட்டு காட்டு யானை களுக்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் மீண்டும் யானை கூட்டம் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக வனத்துறையினர் நேரடி யாக சென்று விசாரணை மேற்கொண்டு சேதமடைந்த வாழை மற்றும் தென்னை களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் யானை வராமல் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வன அதிகாரி இளையராஜா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதா வது:-

    பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி பகுதியில் வாழை, தென்னை மரங்க ளை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது. 3,4 யானைகள் கூட்டமாக வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதிக்கு காட்டு யானைகள் வருவதை தடுக்கும் வகையில் தோவாளை பாலத்தின் மேல் தடுப்புசுவர் கட்டப் பட்டுள்ளது.

    அந்த தடுப்புச்சுவரை இடித்து தள்ளி விட்டு தற்போது யானை விளை நிலங்களுக்குள் புகுந்துள் ளது. தற்பொழுது அந்த பகுதியில் தடுப்பு சுவரை அகற்றி விட்டு காங்கிரீட் சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இந்த பகுதியை அடைத்து விட்டால் யானை கூட்டம் விளைநிலங்கள் புகுவதை தடுத்து விடலாம்.

    மேலும் யானை வராமல் தடுக்கும் வகையில் அகழி வெட்டவும் ஏற்பாடு செய்துள்ளோம். வனத்துறை அதிகாரிகள் பாலத்தின் மேல் காங்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் வரை அங்கேயே முகாமிட்டு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். பொது மக்கள் அச்சப்பட தேவை யில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரவு நேரம் என்பதால் காட்டு யானைகளை விரட்ட முடியாமல் தவிப்பு
    • வாழைகள் சேதத்திற்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

    ஊட்டி,

    கூடலூர் அருகே வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. காட்டு யானைகள் கூடலூர், முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. யானைகள் உணவு தேடி ஊருக்குள் அடிக்கடி புகுந்து வருகிறது. இந்த சமயத்தில் பொதுமக்களின் வீடுகளையும், பயிர்களையும் சேதப்படுத்துகிறது. கூடலூர் அருகே அள்ளூர் வயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் உள்ளனர். இவர்கள் வாழை உள்பட பல்வேறு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் அடிக்கடி அந்த பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து அதிகாலை வரை முகாமிட்டு வாழை உள்ளிட்ட பயிர்களை சாய்த்து போட்டு நாசம் செய்தது.

    இதில் வேணு உள்பட சில விவசாயிகள் பராமரித்து வந்த 200-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது. இதனால் பொருளாதார ரீதியாக மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    காட்டு யானைகள் அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது கூட்டமாக ஊருக்குள் வந்து வாழைகளை நாசம் செய்துள்ளது. இரவு நேரம் என்பதால் காட்டு யானைகளை விரட்ட முடியாமல் போனது.

    இவ்வாறு பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்துவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் வாழைகள் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2 காட்டு யானைகள் தென்னை மரத்தை சேதம் செய்தது.
    • இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

    ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட அருள்வாடி பகுதியை சேர்ந்த பங்கஜப்பா விவசாயி 2 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரத்தை சேதம் செய்தது. அருகில் இருந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகளை இரவு 12 மணியளவில் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.

    3 மணி நேர போராட்டத்திக்கு பிறகு யானையை வனப்பகுதியில் விரட்டினார்கள். யானையால் 20 தென்னை மரம் சேதம் ஆனாது.

    இதனால் அபபகுதி விவசா யிகள் அச்சமடைந்த னர். யானைகள் விவசாயத் தோட்டத்தில் புகாதவாறு வணப்பகுதி சுற்றி அகழி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
    • வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து பேரூராட்சி முழுவதும் வனத்தையொட்டி உள்ள பகுதிகளில் 5 இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அறிய கண்காணிப்பு கோபுரம் மற்றும் முகாம் அமைக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

    இதையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

    இதில் காந்திநகர் கிராமத்தையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த காலங்களில் பணி தொடங்க உள்ள சூழலில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை சமப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் தொடங்கப்பட்டது.

    இதனை அறிந்த கிராம மக்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் விவசாய நிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திநகர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும். அதனை விடுத்து மக்கள் விவசாயம் செய்து வரக்கூடிய நிலங்களில் அமைக்க கூடாது. இதனால் விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே இங்கு அமைக்க கூடாது. மேலும் மக்கள் வசிக்கும் பகுதிகள், வனப்பகுதிகள் அளவீடு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • வாழைத்தோட்டம், கல்கூடஹள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை 2 ஆண் யானைகள் சேதப்படுத்தியது.
    • இரண்டு காட்டு யானைகள் ஒரே இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு, மோரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதையடுத்து இன்று அதிகாலை மணியக்காரன் கொட்டாய், வாழைத்தோட்டம், கல்கூடஹள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை 2 ஆண் யானைகள் சேதப்படுத்தியது.

    அந்த யானையின் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி சென்று பார்த்த போது இரண்டு காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் தஞ்சம் அடைந்து இருந்தது.

    இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இரண்டு காட்டு யானைகள் ஒரே இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • நேற்று இரவு குஞ்சப்பனை பழங்குடியினர் விற்பனை அங்காடிக்கு அருகில் உள்ள ரோட்டில் முகாமிட்டு நின்றது.
    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த குஞ்சப்பனை, முள்ளூர், மாமரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலாப்பழம் விளைச்சல் தொடங்கி உள்ளது.

    எனவே அந்த பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. அப்போது அவை ரோட்டில் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதும், துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக முள்ளூர் பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான சாலையில், காட்டு யானைகள் குட்டியுடன் கடந்த ஒரு மாதமாக உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் காட்டு யானைகள் கூட்டம் நேற்று இரவு குஞ்சப்பனை பழங்குடியினர் விற்பனை அங்காடிக்கு அருகில் உள்ள ரோட்டில் முகாமிட்டு நின்றது.

    இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே

    அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் குஞ்சப்பனையில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டத்தை வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • உரிகம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றி வந்தன.
    • 3 யானைகள் குட்டியுடன் அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதி சாலையோரத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருக வந்தன.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடக மாநிலத்திலிருந்து கடந்தாண்டு 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் அருகே தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வலசை வந்தன.

    அவை தனித்தனி குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் சுற்றியதோடு, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தன.

    இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வனத்துறையினர் தனித்தனிக் குழுக்களாகச் சுற்றிய யானைகள் கூட்டத்தை ஒருங்கிணைத்து ஜவளகிரி வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்தனர்.

    இதில், 50-க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் தொடர்ந்து, தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் வனப்பகுதியில் நிரந்தரமாக தங்கிவிட்டன.

    இதையடுத்து, யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இருக்க வனத்துறை மூலம் வனப்பகுதியில் சூரிய சக்தி தடுப்பு வேலிகள் மற்றும் யானைகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தொட்டிகள் அமைத்து தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.

    இதனால், தற்போது யானைகள் வனத்தைவிட்டு கிராமப் பகுதிகளுக்கு வருவது குறைந்துள்ளது.

    இந்நிலையில், அஞ்செட்டி அருகே உடுபராணி, நூருந்துசாமிமாலை, உரிகம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றி வந்தன.

    இதில், 3 யானைகள் குட்டியுடன் அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதி சாலையோரத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருக வந்தன. இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று குட்டியுடன் சுற்றிய யானைகளை வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

    • காட்டு யானைகள் கூட்டமாக சாலையில் வந்து நின்றன.
    • வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்து செல்போனில் யானை கூட்டத்தை படம் பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டை விட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி வருகின்றன.

    அவ்வாறு வெளியேறும் யானை கூட்டம் அடிக்கடி வனப்பகுதி ரோட்டில் வந்து இருக்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி என்ற இடத்தில் திடீரென 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சாலையில் வந்து நின்றன. அந்த யானைகள் ரோட்டில் அங்கும் இங்குமாக உலா வந்தன.

    ரோட்டில் யானை கூட்டம் இருப்பதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி விட்டனர். சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்து செல்போனில் யானை கூட்டத்தை படம் பிடித்தனர்.

    சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு யானை கூட்டம் ரோட்டை கடந்து மீண்டும் வனபகுதிக்குள் சென்றன. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து செல்ல தொடங்கியது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை கூட்டம் அடிக்கடி இங்கு வந்து சாலையை கடக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் வாகனங்களில் இருந்து இறங்கி யானைகள் கூட்டம் அருகே சென்று செல்பி எடுக்கக்கூடாது.

    அதை மீறி எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    • பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது
    • யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும்

    கூடலூர்

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் உள்ள கெவிப்பாரா என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. தொடர்ந்து சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது.

    மேலும் பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கோக்கால் மலையடிவாரம், கெவிப்பாரா, தருமகிரி, காமராஜ் நகர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இரவில் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஓவேலி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கூடலூர்-ஓவேலி சாலையில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக கூடலூருக்கு வந்து செல்கின்றனர். தற்போது காட்டு யானைகள் கூட்டமாக கெவிப்பாரா பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    இதேபோல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் சுற்றுவட்டார கிராம மக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானைகள் வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகில் பொன்னப்பல்லியில் நேற்று காலை 2 குட்டிகளுடன் 5 யானைகள் உலா வருகின்றன. அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வாழை தோப்புக்குள் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்துள்ளது. பின்னர் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் கேழ்வரகு, காய் கறி செடிகள் பூச்செடிகளை சேதப்படுத்தி உள்ளது.

    இதனால் விவசாயிகள் மன வேதனைக்கு உள்ளாகினர். இச்சம்பவம் அறிந்து வந்த ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதி விவசாயிகள் காட்டு யானைகளை விரட்ட கோரி வலியுறுத்தினர்.

    ×