search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டி அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
    X

    பூதப்பாண்டி அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

    • தடுப்பு சுவரை இடித்துவிட்டு காங்கிரீட் சுவர் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை
    • யானை கூட்டம் விவசாயி ஒருவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி உள்ளது.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி உடையார்கோ ணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வரு கிறார்கள். இந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    அட்டகாசம் செய்யும் யானைகள் தோவாளை கால்வாயில் உள்ள பாலத்தின் வழியாக வந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறை சார்பில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தடுப்பு சுவர்களை இடித்து தள்ளி விட்டு காட்டு யானை களுக்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் மீண்டும் யானை கூட்டம் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக வனத்துறையினர் நேரடி யாக சென்று விசாரணை மேற்கொண்டு சேதமடைந்த வாழை மற்றும் தென்னை களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் யானை வராமல் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வன அதிகாரி இளையராஜா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதா வது:-

    பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி பகுதியில் வாழை, தென்னை மரங்க ளை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது. 3,4 யானைகள் கூட்டமாக வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதிக்கு காட்டு யானைகள் வருவதை தடுக்கும் வகையில் தோவாளை பாலத்தின் மேல் தடுப்புசுவர் கட்டப் பட்டுள்ளது.

    அந்த தடுப்புச்சுவரை இடித்து தள்ளி விட்டு தற்போது யானை விளை நிலங்களுக்குள் புகுந்துள் ளது. தற்பொழுது அந்த பகுதியில் தடுப்பு சுவரை அகற்றி விட்டு காங்கிரீட் சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இந்த பகுதியை அடைத்து விட்டால் யானை கூட்டம் விளைநிலங்கள் புகுவதை தடுத்து விடலாம்.

    மேலும் யானை வராமல் தடுக்கும் வகையில் அகழி வெட்டவும் ஏற்பாடு செய்துள்ளோம். வனத்துறை அதிகாரிகள் பாலத்தின் மேல் காங்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் வரை அங்கேயே முகாமிட்டு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். பொது மக்கள் அச்சப்பட தேவை யில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×