search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன அதிகாரி"

    • மாவட்ட வன அதிகாரி இளையராஜா தகவல்
    • யானை கூட்டம் அடிக்கடி உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல் லும் சாலையில் யானை களின் நடமாட்டம் அதிக ரித்து வருகின்றன. இந்த சாலையில் கோதமடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 5 யானைகள் சாலை யை மறித்தவாறு நடுவே நின்று கொண்டிருந்தன.

    அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யானை கூட்டத்தை கண்டு பீதியடைந்தனர். இதை யடுத்து சாலையின் இருபக்க மும் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு மரண பயத்துடன் யானை கூட்டத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த யானை கூட்டம் சாலையை விட்டு நகராமல் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தன. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த யானை கூட்டம் சாலையை விட்டு மெல்ல... மெல்ல நகரத் தொடங்கின.

    இதையடுத்து சாலை யோரமாக வாகனங்களில் காத்திருந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே அங்கி ருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

    இதுபோல் யானை கூட்டம் அடிக்கடி பேச்சிப்பாறை சாலையில் உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, வனத்துறையினர் யானைகளின் நட மாட்டத்தை கண்காணித்து சாலை வழியாக செல்லும் தொழிலாளர்கள், மின் வாரிய ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவ டிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா கூறியதாவது:-

    வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் யானை கூட்டம், கேரள வன பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கன்னி யாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் புல் மற்றும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ள தால் அவற்றை உணவுக்காக யானைகள் தேடி வருவ துண்டு.

    தற்போது பேச்சிப்பாறை முதல் கோதையாறு வரை யானைகள் நடமாடி வருவ தாக கூறப்படும் பகுதி யானைகளின் வழித்தடங்கள் என்ற பட்டியலில் உள்ள பகுதிகளில் மட்டுமே அவை உலா வந்துகொண்டு இருக் கின்றன. முன்னர் ரப்பர் தோட் டங்களில் வாழை ஊடு பயிராக போடப்பட்டு இருந்ததால் அவற்றை உண்ண யானைகள் வரும். ஆனால், தற்போது வாழை களுக்கு பதிலாக அன்னாசி பழங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவும் யானைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதேநேரம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட் டுள்ளது. மற்றபடி யானை கள் அவற்றின் வழித்தடங் களில் மட்டுமே நடமாடி வருகிறது.

    குறிப்பிட்ட சீசன் முடிவ டைந்ததும் இந்த யானைகள் இடம் பெயர்ந்து விடுவது வழக்கம். எனினும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யானை வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜகதீஷ்பகன் தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
    • நமது அரசு அமைத்த மரைன் எலைட் படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ்பகன், யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான விருதுக்கு தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்.

    நமது அரசு அமைத்த மரைன் எலைட் படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.

    ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடா பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கி காட்டவுள்ள ஜகதீஷ்-க்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • வன அதிகாரியை தாக்கினர்.
    • புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை புதூர் கற்பகம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது65), ஓய்வு பெற்ற வன அதிகாரி. சம்பவத்தன்று இவரது வீட்டு வாசல் முன்பு கே.கே.நகரை சேர்ந்த அரியபுத்திரன் என்பவர் தனது காரை நிறுத்தியிருந்தார். காரை வேறு பகுதியில் நிறுத்துமாறு வெற்றிவேல் கூறினார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரியபுத்திரன், வெற்றிவேலை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.

    மதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜா(வயது44). இவர் சம்பவத்தன்று பழங்காநத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஜீவா நகரை சேர்ந்த விக்னேஷ்(24), பழங்காநத்தம் தினேஷ்குமார்(25), தினேஷ்வரன்(30), அஜய்குமார்(19) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தீயணைப்பு உபகரணங்கள் ரூ.6 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.
    • ரூ.8 லட்சம் செலவில் தீயணைப்பு பொருட்களை கொண்டு செல்ல வசதி யாக வாகனம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் களியல், குலசேகரம், வேளி மலை, அழகியபாண்டிய புரம், பூதப்பாண்டி ஆகிய 5 வன சரகங்கள் உள்ளது.

    இந்த வனப் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்க வசதியாக தீயணைப்பு உபகரணங்கள் ரூ.6 லட்சம் மதிப்பில் வாங் கப்பட்டுள்ளது.

    இதை மாவட்ட வன அதிகாரி இளையராஜா 5 வனசரக ஊழியர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று வடசேரியில் உள்ள வன அலுவலகத்தில் நடந் தது. தீயணைப்பு உபகர ணங்களை வன ஊழியர் களிடம் வன அதிகாரி இளையராஜா வழங்கினார்.

    தீ கவச உடை, புகை தடுப்பு கண்ணாடி மற்றும் முக கவசம் செடிகளை வெட்ட வசதியாக கருவி கள், கொசு வலை தீத்த டுப்பு காலணிகள் உட்பட பல்வேறு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.8 லட்சம் செலவில் தீயணைப்பு பொருட்களை கொண்டு செல்ல வசதியாக வாகனம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பிரிவு வன திருப்பதி பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார்.
    • வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் செவல் விளை தெருவில் வசிக்கும் குருசாமி-முனியம்மாள் தம்பதியரின் மூத்த மகன் சுப்புராஜ்(வயது 27).

    வனவர்

    என்ஜினீயரிங் முடித்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னைக்கு சென்றார். அங்கு சக நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடியபோது தான் வனத்துறையின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.

    இதனால் எப்படியாவது அரசு வேலையில் அதுவும் வனத்துறை பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்த சுப்புராஜ் சென்னையில் உள்ள அரசின் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வாணையத்தில் 2 ஆண்டுகள் படித்தார்.அதனை தொடர்ந்து அரசு தேர்வு எழுதிய சுப்புராஜ் கடந்த 2019-ம் ஆண்டு வனவர் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பிரிவு வன திருப்பதி பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார். தற்போது அங்கேயே பணி செய்து வருகிறார்

    வன அதிகாரி

    ஆனாலும் அதே வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார். சமீபத்தில் அவர் டி.எஸ்.பி. தரத்திலான பணிக்கு தேர்வாகி உள்ளார். இதற்காக ஏற்கனவே 5 முறை தேர்வு எழுதிய அவர் 6-வது முறையாக சமீபத்தில் தேர்வெழுதி வனத்துறை அதிகாரியாக வெற்றி பெற்றுள்ளார்.

    இதையறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சுப்புராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதனை தனது முகநூல் பக்கத்தில் பாராட்டி டி.ஜி.பி. பதிவிட்டார். அதில், கடையநல்லூர் சிறு வியாபாரி குருசாமியின் மகன் சுப்புராஜ். முதல் பட்டதாரியான இவர் இன்று இந்திய வனப்பணியில் சேருகிறார். முயற்சி திருவினையாக்கும். முதல் பட்டதாரியான சுப்புராஜ் ஐ.எப்.எஸ். வாழ்த்துகள் என பாராட்டி தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

    ×