search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டுபிடிப்பு"

    • கொண்டனேரி கண்மாயில்‌ 17-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கழுத்தணிகலன், கைகாப்பு ஆகியவையும் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மடத்துப்பட்டி அருகே அமைந்துள்ள கொண்டனேரி கண்மாயில் கல் சிற்பங்கள் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினித் தகவல் அளித்தார். அதன் அடிப்ப–டையில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வர–லாற்றுத்துறை உதவிப்பேரா–சிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ.கந்தசாமி அப்பகுதியில் களப்பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்குள்ள கண்மாயில் 2 நடுகல் சிற்பங்க–ளும், ஒரு சதிக்கல்லும் கல் மேடையமைத்து வரி–சையாக நிறுத்தி வைக்கப் பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கல் சிற்பங்கள் அனைத் தும் கி.பி. 17 ஆம் நூற்றாண் டைச் சார்ந்ததாக கருதப்ப–டுகிறது. வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்க–ளுக்கு தனித்தனியே எடுக்கப்பட்ட நடுகல் மற்றும் வீரன் இறந்தவுடன், மனை–வியும் சேர்ந்து தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ் வுக்காக எடுக்கப்பட்ட சதிக் கல்லும் காணப்படுகிறது.

    முதல் நடுகல் சிற்பம் கூம்பு வடிவில் மாடக்கோ–வில் போன்று வடிவமைத்து மழை, வெயில் தாக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் சிற்பத்தில் வீரன் நின்ற நிலையில் தனது இடது கையில் ஈட்டியை பிடித்துள்ளது போன்றும், வலது கையில் இடுப்பில் உள்ள வளைந்து நெளிந்த குறுவாளை கை வளை–யத்தில் இணைத்துள்ளது போன்றும் காட்டப்பட்டுள் ளது.

    வீரனின் வலது பக்க தலைக்கொண்டை அலங்கா–ரம், வீரனின் உருண்டு திரண்ட கண்களும், முறுக்கு மீசையுடனும், பனை ஓலை காதணிகளை அணிந்தவா–றும் சிற்பம் காணப்படுகிறது.

    இரண்டு காதுகள் மற்றும் கைகளுக்கு இடையில் துவாரங்கள் கொண்டு புடைப்புச் சிற்பமாக செதுக் கப்பட்டுள்ளது. கழுத்தணி–கலன்களும், கைகாப்பு, கைப்பட்டைகளும், இடை ஆடை குஞ்சம் வைத்து மடித்து கட்டப்பட்டுள்ளதும், இரண்டு கால் மூட்டுகளின் பாதுகாப்புக்காக மூட்டுக் கவசமும், காற்சிலம்பு அணிந்துள்ளதையும் இச்சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

    இரண்டாவது நடுகல் சிற்பத்தின் மேல் பகுதி இரண்டடுக்கு மாடகோபுர அமைப்பு போன்று வடிவ–மைக்கப்பட்டு கீழே வீரன் ஒருவன் நின்ற நிலையில் குத்தீட்டியின் மேல்பகுதியை தனது வலது கை கொண்டும், கீழ்ப்பகுதியை இடது கை கொண்டும் பிடித்து தரை–யில் ஊன்றியபடி சிற்பம் அமைந்துள்ளது.

    வீரனின் இடது பக்க தலைக் கொண்டையலங்கா–ரம், நீண்ட காதணிகள், கழுத்தணிகள், கைக்காப்பு, பூ மாலை அலங்காரம், மார்பில் சன்ன வீரம், இடை ஆடையில் இடுப்பு பெல்ட் இணைத்து கட்டப்பட்டு குஞ்சம் தொங்கிய நிலையில், காற்சிலம்புடன் வீரனின் சிற்பம் வடிவமைக்கப்பட் டுள்ளது. மூன்றாவதாக, சதிக்கல் சிற்பத்தில் வீரனும், அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் வடிவ–மைக்கப்பட்டுள்ளது.

    வலதுபுறத்தில் அமர்ந் துள்ள வீரன் வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி வைத்துள்ள நிலையில், வீரனின் வலது கையில் வாள் ஒன்றை கையில் உயர்த்திப் பிடித்து இருப்பதும், இடது கையை கீழே மடக்கி வைத்திருப்பது போன்றும், அருகில் அமர்ந் துள்ள வீரனின் மனைவியின் வலது கையில் அல்லி மலரை உயர்த்திக் காட்டி இருப்பதும், இடது கையில் மங்கலப் பொருள் ஒன்றை வைத்திருப்பது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணிகலன், கைகாப்பு ஆகியவையும் சிற்பத்தில் காட்டப்பட்டுள் ளது.

    சிற்பத்தின் மேற்பகுதியில் மூன்று கர்ணக்கூடுகளில் சிங்கமுகங்கள் காட்டப் பட்டுள்ளது. இம்மூன்று சிற்பங்களையும் கருப்புசாமி, கருப்பாயி, சுடலைமாடன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கண்மாயில் நீர் நிரம்பி இருக்கும் பொழுது சிற்பங் கள் நீருக்குள் மூழ்கி இருந் துள்ளது. இங்கு காணப்படும் வீரக்கல் மற்றும் சதிக்கல் சிற்பங்களைக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன் வீரத்தை வெளிப்படுத்தும் வீர நிகழ்வுகள் இப்பகுதியில் நடந்துள்ளதை அறிய முடி–கிறது.

    ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நடுகற்கள், சதிச்சிற்பம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே பல சதிக்கல் சிற்பங்கள் காணப்படுவதால் பழங்காலத்தில் மக்களின் வாழ்வியல் சார்ந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கந்தசாமி கூறினார்.

    • கீழடியில் 183 தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையின ரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட் கள் இதுவரை கண்டறி யப்பட்டுள்ளது.

    மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படு கிறது.9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.
    • கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படுகிறது.

    9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.
    • இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார்.

    வாஷிங்டன்:

    லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் மரணம் அடைந்தார். வயது மூப்பு காரணமாக 100-வது வயதில் அவரது உயிர் பிரிந்தது.

    செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.

    வேதியியலுக்கான இந்த நோபல் பரிசை, அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

    1980-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஜான் குட்எனப் லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்தார். 1922-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், அமெரிக்காவில் வளர்ந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

    இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். 2011-ம் ஆண்டு ஜான் குட்எனப்புக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவியலுக்கான குடியரசு தலைவர் பதக்கம் வழங்கி கவுரவித்தார். ஜான் குட்எனப் கண்டுபிடித்த லித்தியம்-அயன் பேட்டரி, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலத்தை உழும் கலப்பையின் கொழு வாகவோ, வெட்டுவதற்கான கோடாரியாகவோ பயன்ப டுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
    • தமிழகத்தில் 3 ஆயிரம் முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி பூதிநத்தம் அகழாய்வில் கிடைத்துள்ளது.

    பென்னாகரம்,

    தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பூதிநத்தம் கிராமத்தில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று நடத்தப்பட்ட அகழ்வாய்வில் 36 செ.மீ ஆழத்தில் 22 சென்டிமீட்டர் நீளமுள்ள கற்கால கருவி கண்டுபிடிக்கப்பட்டது.

    போலாராய்டு என்ற கல் வகையை சார்ந்த இந்த கருவியின் ஒரு பகுதி 7.74 சென்டிமீட்டர் அகலம் 4.7 சென்டிமீட்டர் தடிமனுடன் மற்றொரு பகுதி 1.7 சென்டி மீட்டர் அகலம் 3.2 சென்டிமீட்டர் தடிமனுடனும் உள்ளது.

    இது நிலத்தை உழும் கலப்பையின் கொழு வாகவோ, வெட்டுவதற்கான கோடாரியாகவோ பயன்ப டுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    தமிழகத்தில் 3 ஆயிரம் முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி பூதிநத்தம் அகழாய்வில் கிடைத்துள்ளது வரலாற்று ஆய்வாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    • கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.

    ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.

    இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.

    • 200 ஆண்டு பழமையான நாணயங்களை திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டெடுத்தனர்.
    • 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.



    மாணவர்கள் அய்யப்பன், பிரவீன்ராஜ்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்க ளுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடை யாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர்.

    இதுபற்றி பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜ குரு கூறியதாவது:-

    9-ம் வகுப்பு மாணவர் பிரவின்ராஜ், 6-ம் வகுப்பு மாணவர் அய்யப்பன் ஆகியோர் 4 ஆங்கிலேயர் கால வட்டவடிவ காசுகளை கீழவலசை, சேதுக்கரையில் கண்டெடுத்துள்ளனர். இதில் 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.

    இது கி.பி.1833-ல் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரையும், மறுபுறம் தராசு படமும் உள்ளது. தராசின் மேலே ஆங்கிலத்தில் குவாட்டர் அணா எனவும், அதன் கீழே அரபி வாசகமும் உள்ளது.

    மற்றொன்று கி.பி.1887-ம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்தில் வெளியிடப்பட்டது. ¼ அணா மதிப்புள்ளது. ஒரு கால் அணா இந்தியா 1887 என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டு உள்ளது. நாணயத்தின் பின்புறம் விக்டோரியா எம்பரஸ் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது.

    மாணவர் அய்யப்பன் சேதுக்கரை கடற்கரையில் கண்டெடுத்த 2 நாணயங்களில், ஒன்று கி.பி.1835-ல் வெளி யிடப்பட்டதாகும். இதில் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன் நடுவில் ½ அணா என்றும், மறுபுறம் கம்பெனி முத்திரையும் உள்ளது.

    மற்றொன்று 6-ம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1941-ல் வெளியிடப் பட்டது. இது ¼ அணா மதிப்புள்ளது.

    திருப்புல்லாணி வரும் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். இந்த நாணயங்கள் இவ்வாறு போடப்பட்டதாக இருக்கலாம். பிரவின்ராஜ் கண்டெடுத்தது மக்களின் சேமிப்பில் உள்ளது.

    திருப்புல்லாணி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் பாண்டியர், சோழர், டச்சுக்காரர் நாணயங்களை ஏற்கனவே கண்டெடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை தொடர்ச்சி பகுதிகளில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன.
    • சேலம் மாவட்டம் அறுநூற்று மலை பகுதியில் புலிகுத்தி வீரன் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பச்சைமலை என மலைகள் சூழ்ந்த மாவட்டமாகும். இதில் கல்வராயன் மலையின் தொடர்ச்சியாக வாழப்பாடி பகுதியில் அமைந்துள்ளது அருநூற்றுமலை. அருநூற்று மலையில் ஆலடிப்பட்டி, பெலாப்பாடி, சிறுமலை ஆகியவை உள்பட 8 கிராமங்கள் உள்ளன.

    பெரும்பாலான மலைக்கிராமங்களில் பழங்குடி மக்களே வசித்து வருகின்றனர்.பழமை மாறாமல் சில வழக்கங்களை இன்றளவும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.ஆங்காங்கே சில ஊர்களில் ஊருக்குப் பொதுவான இடங்களில் வழிபாட்டில் எண்ணற்ற பழங்கால நடுகற்களும், புதிய கற்கால கருவிகளும் உள்ளன.

    பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன. இந்த மலையில் சில இடங்களில் அடர்ந்த காடுகள் சில இடங்களில் காணப்படுகின்றன.அரியவகை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் புகலிடமாய் கல்வராயன் மலை உள்ளது.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இப்பகுதிகளில் கரடி, மான், சிறுத்தை, புலி போன்றவை அதிகளவில் காணப்பட்டுள்ளன என்று ஆங்கிலேயர் கால ஆவணமான "இந்தியன் கெசட்டியர்" சான்று கூறுகிறது.

    இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் வரலாற்று ஆர்வலர்கள் குழுவைச் சேர்ந்த ஏ.டி.மோகன், பெரியசாமி, ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன், முத்தையன் , நித்தியானந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த நடுகற்களைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை தெரிவித்தனர்.

    இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

    16,17-ம் நூற்றாண்டுகளில் இங்கே விலங்கு- மனித மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.குறிப்பாக புலிகள் மக்களைத் தாக்க முயலும்போது, புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வீரத்துடன் சண்டையிட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு இங்கே நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன.

    வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு நடுகற்கள் எடுக்கும் மரபு பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. அந்த வகையில் அருநூற்றுமலை, ஆலடிப்பட்டி கிராமங்களில் 16-ம் நூற்றாண்டு நடுகல்லொன்று காணப்படுகிறது. இதில் வீரனுக்கு வலது புறத்தில் நின்று கொண்டிருக்கும் ஆக்ரோஷமான புலி வீரனைத் தாக்குவது போலவும், அவ்வீரன் தனது இரு கைகளால் ஈட்டியைக் கொண்டு புலியைக் குத்துவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் தலையில் அழகிய கொண்டையும், காதணி மற்றும் சரபலி, ஆரம், காப்பு மற்றும் காலில் வீரக்கழல் போன்ற அணிகலன்களை அணிந்துள்ளான்.

    இதனை மக்கள் இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.

    மேலும் பெலாப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஒரு நடுகல் காணப்படுகிறது. இந்நடுகல்லில் வீரனுக்கு இடதுபுறத்தில் புலி ஒன்று வீரனை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது.வீரன் தனது இடது கையில் கட்டாரியை கொண்டு புலியின் வாயில் குத்துவது போன்றும், வலது கையில் ஈட்டியை கொண்டு புலியின் வயிற்றில் குத்துவது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த வீரனின் தலையில் அழகிய கொண்டை கட்டப்பட்டுள்ளது. காதணிகள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் போன்றவை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஆகும்.

    பொங்கல் பண்டிகையின் கரிநாளின்போது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் எண்ணற்ற இன்னும் பல வரலாற்றுச் சின்னங்களும், அவை குறித்த சுவாரசியமான தகவல்களும் வெளிவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும் போது ஏறக்குறைய 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும் எனவும், அகழ்வாய்வு நடத்தும் போது தொன்மையான சிலைகள் சிற்பங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிவலிங்கம் சூத்திரக் குறியீட்டுடன் காவிரி ஆற்றை பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும் போது ஏறக்குறைய 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும் எனவும், அகழ்வாய்வு நடத்தும் போது தொன்மையான சிலைகள் சிற்பங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிவலிங்கம் உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் நடராஜ் கூறுகையில், கடந்த 22 வருடங்களாக நான் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். அப்போது இது சிவலிங்கம் என்று எனக்கு தெரியாது. இது பாண்டியன் நட்ட கல் என்று தான் பலர் கூறி வந்தனர். 8 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து பார்த்த சிவனடியார் ஒருவர், இது சிவலிங்கம் என கூறினார். இதையடுத்து சிவனடியார்கள் இங்கு வந்து சிவலிங்கத்தை தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். 8-அடி உயரமுள்ள இந்த சிவலிங்கத்தை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராள மான சிவனடி யார்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தின் நடுவே இருந்த சிவலிங்கத்தை, பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு ஏதுவாக தோட்டத்திற்கு வெளியே வைப்பதற்காக சிவலிங்கம் இருந்த பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஜோதி மற்றும் போலீசார், தொல்லியல் துறை ஒப்புதல் இல்லாமல் சிவலிங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் சிவனடியார்களுக்கும், வருவாய்த்துறை, போலீசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தொல்லியல் துறையினரை வரவழைத்து அவர்களின் ஆலோசனையின் பேரில் சிவலிங்கத்தை எடுத்து மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

    • கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை
    • கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுதவில்லை எனப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கல்லூரியில் முதுகலை பயின்று வந்தார்.

    அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை உறவினருடன், பொழியூர் கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் உறவினரின் பார்வையில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.

    மாணவியின் கைப்பை மற்றும் காலணிகள் கடற்கரையிலேயே கிடந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் பொழியூர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் வீட்டில் சோதனை செய்த போது, தற்கொலை செய்து கொள்ள மாணவி முடி வெடுத்ததாக எழுதப்பட்ட கடிதம் கிடைத்தது.

    இதனால் மாணவி தற்கொலை செய்திருக்க லாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மரைன் போலீ சாரும் கடற்கரை பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ேபாலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது, சந்தேகம் அளிக்கும் வகையில் பர்தா அணிந்த ஒருவர் ஆட்டோ வில் ஏறிச் செல்வது தெரிய வந்தது. அது மாணவி யாக இருக்கலாமா? என்ற சந்தே கத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆட்டோ டிரை வரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறியவர், களியக்காவிளையில் உள்ள ஒரு பேக்கரியில் 'கூகுள் பே' செய்து பணம் பெற்றார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 'கூகுள் பே' பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை தொடங்கினர்.

    இதில் தற்போது அந்த செல்போன் சிக்னல் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மாணவி மும்பையில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற னர். இதனை தொடர்ந்து பொழியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிகுமார் தலைமையில் போலீசார் மும்பை சென்றுள்ளனர்.

    மாணவி மும்பை சென்றது ஏன்? அவர் தானாக சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது மாணவி, கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுத வில்லை என்பதும் அதனால் அவர் ஊரை விட்டு சென்றிருக்க லாம் என்ற தகவலும் கிடைத்து உள்ளது.

    இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மும்பை சென்ற போலீசார், மாணவியுடன் திரும்பினால் தான், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    • பரமக்குடியில் உயர்குடி பெண் நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இந்த நடுகல் சிற்பம் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் வழிமறிச்சான் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சானை சேர்ந்த சிவா, சக்தி, முருகன் ஆகியோர் பரமக்குடி அருகே உள்ள வழிமறிச்சான் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் உயர் குடியைச் சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    பொதுவாக நடுகல் என்பது முற்காலங்களில் வீர, தீர செயல்களான போர்களில் ஈடுபடும் வீரர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கு எதிரான சண்டைகளில் வெற்றி பெறுபவர்களுக்கோ அல்லது சண்டையில் இறப்பவர்களுக்கோ அல்லது சமூகத்தில் பெரிதும் போற்றத்தக்க நபர்களுக்கோ நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்தது.

    தற்போது கண்டறிந்த சிற்பமும் அந்த வகையைச் சேர்ந்ததாகும். இந்த நடுகல் சிற்பம் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் 2 கைகளிலும் காப்பும், கை வளையல்களும் அணிந்தபடியும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், ஆபரணங்களும் நீண்ட காதும் தெளிவாக செதுக்க ப்பட்டுள்ளன.

    இடையில் இடைக்கச்சை அணிந்த படியும், இரு கால்களிலும் கழலைகள் அணிந்தபடியும் சிற்பம் நேர்த்தியாக வடிக்க ப்பட்டுள்ளது. இடது கையில் ஊன்றுகோல் தடியை பிடித்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. நெற்றியில் திலகம் செதுக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    இந்த புடைப்பு சிற்பம் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டியின் சிற்பமா கும். இந்த சிற்பத்தின் வடிவ மைப்பும், அணிந்துள்ள ஆபரணங்க ளையும் வைத்து பார்க்கும் போது உயர் குடியைச் சேர்ந்த பெண்ணாகவோ அல்லது சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க பெண்மணியாகவோ இருந்திருக்கலாம். இந்த நடுகல்லை பாட்டி கிழவி அம்மன் என்ற பெயரில் அந்தப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் விருது
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அர விந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறந்த பனையேறும் எந்திரத்தை கண்டு பிடிப்பவருக்கான விருது ரூ.1 லட்சம் வழங்கப் படஉள்ளது.

    பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி இல குவாக ஏறுவதற்கும், பனை நுங்கு மற்றும் பிற பொருட்களை திறம்பட அறுவடை செய்வதற்காகவும், கருவி களை கண்டுபிடிப்பதற் காக ஆராய்ச்சிகளை மேற் கொள்ளும் பல்கலை கழகங்கள், தனியார் நிறுவ னங்கள் மற்றும் முற்போக்கு மிக்க விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில், சிறந்த பனை யேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது வழங்கப்பட உள்ளது.

    பனையேறும் இயந்தி ரத்தை கண்டுபிடிப்பதற்கா கும் மொத்த செலவு, விலையின் உண்மைத் தன்மை, இயந்திரத்தின் செயல் திறன் மற்றும் ஒட்டுமொத்த பயனளிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விருதானது தோட்டக்கலை பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்), வேளாண் பொறியியல் பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்), தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் (மத்திய மற்றும் மாநிலத் திட்டம்), தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தால் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவ சாயி அடங்கிய குழுவின் மூலம் தேர்தெடுக்கப்பட்டு வழங்கப்படும்.

    பனையேறும் எந்திரத்தை கண்டுபிடிப்பவர்கள், இக்குழுவின் முன்னிலை யில் செயல் விளக்கம் அளிக்கவேண்டும். மேலும் தகவலுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×