search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஞ்ஞானி"

    • சங்கரன் என்பவர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் படித்த மாணவர்.
    • இஸ்ரோ விஞ்ஞானியான சங்கரனை பாராட்டி பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    சந்திராயன்-3 விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

    இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் துருவத்தில் அதன் லேண்டரை வெற்றிகரமாக இறக்கி உலக நாடுகளே வியக்கும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.

    இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும், உலக நாட்டு தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி குழுவில் இடம் பெற்றிருந்த சங்கரன் என்பவர் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கடந்த 1983 -ம் ஆண்டில் இருந்து 1985-ம் ஆண்டு வரை இயற்பியல் துறையில் படித்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது அவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

    இதனை தொடர்ந்து சரபோஜி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான சங்கரனை பாராட்டி அவரது படத்துடன் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    அதில் விஞ்ஞானி சங்கரன் மற்றும் சந்திரயான்- 3 வெற்றி விஞ்ஞானிகள் அனைவரையும் வாழ்த்தி பெருமிதம் கொள்கிறோம் . இங்கனம் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பிளக்ஸ் போர்டை கல்லூரியில் படிக்கும் மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து நாமும் சங்கரனை போல் விஞ்ஞானியாக மாறி இந்தியாவுக்கு பல்வேறு புகழை தேடி தர வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.

    • கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
    • அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    பழனி:

    நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல்நாடு என்ற பெருமையும், நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையும் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன்மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

    இந்த திட்டத்தில் செற்கைகோள் மையத்தின் இயக்குனராக சங்கரன், திட்ட இயக்குனர் வீரமுத்து வேல் தமிழகத்தை சேர்ந்தவர். மேலும் சந்திரயான்-3 திட்டத்தில் பூமியில் இருந்து ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர் நிலவில் கால் பதிப்பதற்கான லேண்டர் மற்றும் நிலவினை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை மிக முக்கியமானவையாகும். இவை மூன்றையும் பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான ஆணைகளை பிறப்பிக்கும் டெலிகாமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்த கவுரிமணி (வயது50) என்பவர் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

    10ம் வகுப்பு வரை பழனியில் உள்ள பள்ளியிலும், 11, 12-ம் வகுப்புகளை திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப்பள்ளியிலும், தொலைதொடர்பு பொறியியலில் பி.இ., எம்.இ. பட்ட படிப்புகளை மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவரது கணவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.

    சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன் மூலம் இக்குழுவில் பணியாற்றிய பழனி பெண் விஞ்ஞானி கவுரிமணிக்கு அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.
    • இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார்.

    வாஷிங்டன்:

    லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் மரணம் அடைந்தார். வயது மூப்பு காரணமாக 100-வது வயதில் அவரது உயிர் பிரிந்தது.

    செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.

    வேதியியலுக்கான இந்த நோபல் பரிசை, அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

    1980-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஜான் குட்எனப் லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்தார். 1922-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், அமெரிக்காவில் வளர்ந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

    இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். 2011-ம் ஆண்டு ஜான் குட்எனப்புக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவியலுக்கான குடியரசு தலைவர் பதக்கம் வழங்கி கவுரவித்தார். ஜான் குட்எனப் கண்டுபிடித்த லித்தியம்-அயன் பேட்டரி, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    • கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.

    ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.

    இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.

    மத்திய அரசின் என்ஜினீயர், விஞ்ஞானி உள்பட 4 தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.

    சேலம்:

    என்ஜினீயரிங் பணி தேர்வு-2022, ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி தேர்வு- 2022, இந்திய பொருளாதார பணி தேர்வு- 2022, இந்திய புள்ளியியல் பணி தேர்வு- 2022 ஆகியவற்றுக்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி. வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து சமீபத்தில் முதல்நிலை தேர்வு சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இதனை தொடர்ந்து முதன்மை (மெயின்) தேர்வுக்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி என்ஜினீயரிங் பணி முதன்மை தேர்வு வருகிற 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2 ஷிப்டுகளாக நடைபெற உள்ளது. முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், 2-வது ஷிப்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறுகிறது.

    இதேபோல் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி முதன்மை தேர்வு, இந்திய பொருளாதார பணி தேர்வு, இந்திய புள்ளியியல் பணி தேர்வு ஆகியவையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் கடந்த 6-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடைசி நாளான 26-ம் தேதி மாலை 4 மணிக்கு பிறகு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாது.

    தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன் மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரித்துள்ள புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, புகைப்படம் உள்ளிட்டவைகள் தேர்வு எழுத வரும்போது கொண்டு வர வேண்டும் என யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    ×