என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Public school students"
- 200 ஆண்டு பழமையான நாணயங்களை திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டெடுத்தனர்.
- 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.
மாணவர்கள் அய்யப்பன், பிரவீன்ராஜ்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்க ளுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடை யாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர்.
இதுபற்றி பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜ குரு கூறியதாவது:-
9-ம் வகுப்பு மாணவர் பிரவின்ராஜ், 6-ம் வகுப்பு மாணவர் அய்யப்பன் ஆகியோர் 4 ஆங்கிலேயர் கால வட்டவடிவ காசுகளை கீழவலசை, சேதுக்கரையில் கண்டெடுத்துள்ளனர். இதில் 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.
இது கி.பி.1833-ல் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரையும், மறுபுறம் தராசு படமும் உள்ளது. தராசின் மேலே ஆங்கிலத்தில் குவாட்டர் அணா எனவும், அதன் கீழே அரபி வாசகமும் உள்ளது.
மற்றொன்று கி.பி.1887-ம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்தில் வெளியிடப்பட்டது. ¼ அணா மதிப்புள்ளது. ஒரு கால் அணா இந்தியா 1887 என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டு உள்ளது. நாணயத்தின் பின்புறம் விக்டோரியா எம்பரஸ் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது.
மாணவர் அய்யப்பன் சேதுக்கரை கடற்கரையில் கண்டெடுத்த 2 நாணயங்களில், ஒன்று கி.பி.1835-ல் வெளி யிடப்பட்டதாகும். இதில் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன் நடுவில் ½ அணா என்றும், மறுபுறம் கம்பெனி முத்திரையும் உள்ளது.
மற்றொன்று 6-ம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1941-ல் வெளியிடப் பட்டது. இது ¼ அணா மதிப்புள்ளது.
திருப்புல்லாணி வரும் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். இந்த நாணயங்கள் இவ்வாறு போடப்பட்டதாக இருக்கலாம். பிரவின்ராஜ் கண்டெடுத்தது மக்களின் சேமிப்பில் உள்ளது.
திருப்புல்லாணி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் பாண்டியர், சோழர், டச்சுக்காரர் நாணயங்களை ஏற்கனவே கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்