search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவியம்"

    • திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
    • 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி முழுவீச்சில் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் நடத்த ஏதுவாக ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் அமரும் விதமாக கலையரங்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.இதன் முகப்பில் தமிழருக்கும் திருப்பூர் மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையிலான சிமென்டில் புடைப்பு சிற்பம் அமைக்கப்பட்டு, இது பார்வையாளர்களை கவரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

    அதில் பண்டை தமிழரின் ஆடல், பாடல்களை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் இருவரும் ஜோடியாக இணைந்து திருவிழா ஒன்றில் நடனம் ஆடுவது, வண்ணங்களில் தோரணம் கட்டி, களைகட்டிய ஊர்த்திருவிழா, மத்தளம் இசைத்தபடி பெண் கலைஞர்கள், கிராம கோவில்களில் நடக்கும் அன்றைய நாட்டிய நடன நிகழ்ச்சி.திருப்பூர் மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் களம் காண தயாராக இருக்கும் காங்கயம் காளை, பின்னலாடையின் அடையாளமாக வெவ்வேறு நிறங்களில் பளிச்சிடும் நூல் ரகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி வந்து செல்பவர்கள் ஓவிய வடிவமைப்பை உற்று கவனித்து வியந்து செல்கின்றனர்.

    • ருதரப்பா நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி உள்ளது.
    • பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

    உடுமலை, ஆகஸ்ட்.2

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருதரப்பா நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் உள்ளது. மாணவ மாணவியர் இருபாலரும் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி சுவர்களில் சுற்றுச்சூழலை காப்போம் மரம் வளர்ப்போம். நீரை பாதுகாப்பது அவசியம் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியம் வரைவதால் மாணவர்களுக்கு மனம் ஒரு நிலைப்படும். எனவே மாணவர்களுக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்படுத்தப்பட்டது என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி
    • ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பங்கேற்று ஓவியங்கள் வரைந்ததுடன் அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனப்பி வைத்தனர். அந்த வகையில் 3 ஆயிரம் ஓவியங்கள் அனுப்பி வைக் கப்பட்டன.

    இந்த ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. இந்த கமிட்டி தேர்வு செய்த சிறப்பான ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    • பிரதமர் மோடி, அண்ணா, கருணாநிதி உருவங்களை வரைந்து அசத்தல்
    • நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் வை. கோபால கிருஷ்ணன் என்ற கோபால் (வயது 67), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்.

    இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் போது மாணவர்களை வைத்து ஆண்டுதோறும் ஓவிய கண்காட்சிகளை நடத்தி வந்து உள்ளார்.

    நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ள வை. கோபாலகிருஷ்ணன் ஓய்வுக்கு பிறகு வீட்டில் முடங்கி கிடக்க கூடாது என்று ஓவியக்கலையில் சிறப்பு படைப்புகளை படைக்க தொடங்கினார்.

    சாதாரணமாக வரையும் ஓவிய படைப்புகளில் இருந்து மாறுபட்டு வண்ண மணலைக் கொண்டு மணல் ஓவியம் வரையும் கலையில் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்களை மணல் ஓவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    தான் வரையும் மணல் ஓவிய படைப்புகளை கண்காட்சிபடுத்தியும் வருகிறார். இந்த மணல் ஓவியங்களை உருவாக்குவ தற்காக கன்னியாகுமரி கடற்கரையில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு, ரோஸ், வெள்ளை போன்ற பல வண்ண கலர் மணல்களை சேகரித்து வைத்துள்ளார்.

    இந்த பல வண்ண மணல்களைக் கொண்டு மகாத்மாகாந்தி, பாரதியார், பிரதமர் நரேந்திர மோடி, முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முகதோற்ற உருவங்களை மணல் ஒட்டோவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அரசியல் தலைவர்களின் மணல் ஓவியங்களை வரை வதற்கு முன்பு பென்சில் மூலம் அட்டையில் "ஸ்கெட்ச்" போட்டு முன் வரைவு செய்து அதன் மேல் பலவண்ண மணல் களை ஒட்டி இந்த மணல் ஓவியத்தை வரைந்து உள்ளேன்.

    நான் படைத்த மணல் ஓவியங்கள் மற்றும் செய்தித்தாள் காகித ஒட்டோ வியங்களை காமராஜர் பிறந்த தினமான வருகிற 15-ந்தேதிஅன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சிய கத்தில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் கண்காட்சி யில் இடம் பெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்தசினிமா படப்பிடிப்புக்கு வந்த நடிகர் சூர்யாவிடம் அவரது தந்தை நடிகர் சிவகுமாரின் உருவத்தை இவர் மணல் ஓவியமாக வரைந்து அவரிடம் நேரில் சென்று கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர்.
    • நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் என் குப்பை, எனது பொறுப்பு, என் நகரம் -எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.

    அலகு -2 மாணவர்கள் ஒருக்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான உழவர் சந்தை சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக்கை விடு... துணிப் பையை எடு... மரம் வளர்ப்போம் போன்ற ஓவியத்தை வரைந்தனர். மாணவ பிரதிநிதி ரத்தினகணேஷ் முன்னிலையில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஈடுபட்டனர். கண்கவர் விழிப்புணர்வு ஓவியம் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    ×