search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஆர் தனபாலன்"

    • சென்னை அசோக் நகரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் சங்கத்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • காமராஜர் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து வருகிற 7-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அசோக் நகரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடைபெற்ற சங்கத் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், சந்திரன், ஜெயபால், மாரிதங்கம், மின்னல் ஸ்டீபன், முத்துரமேஷ், கொட்டிவாக்கம் முருகன், கோயம்பேடு வைகுண்டராஜா, ஸ்ரீனிவாசன், பாடி விஜயகுமார், பல்லாவரம் மணிகண்டன், வேல்முருகன், ஓட்டேரி மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காமராஜர் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல்கட்ட போராட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தவறான கருத்தை பதிவு செய்கிறார்.
    • காமராஜரின் மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரை பற்றி தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ச்சியாக தவறான தகவல்களை நாட்டு மக்களிடம் பரப்பி வருவதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தவறான கருத்தை பதிவு செய்கிறார்.

    காமராஜர் என்றுமே தோற்றவர் அல்ல. அவர் கொண்டு வந்த கே பிளான் படி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சி பணிக்கு வந்தார். அவர் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இன்றளவும் தி.மு.க. என்கிற கட்சியே தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும் என்பதை ஆ.ராசா போன்றவர்கள் உணர வேண்டும். விருதுநகரில் தோற்கடிப்பட்ட காமராஜருக்கு, நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை மக்கள் அளித்தார்கள் என்பதை நாடறியும்.

    பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 47 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவரது மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் தி.மு.க.வினர் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண கூடத்தில் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் என்.ஆர்.தனபாலன் பங்கேற்று கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும், என்.ஆர்.டி. கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனருமான என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

    என்.ஆர்.தனபாலன் தனது பிறந்தநாளையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லறை தோட்டத்தில் உள்ள தாயாரின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் இயங்கி வரும் அரிமா சங்கத்திற்கு சொந்தமான டயாலிசிஸ் சென்டரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான பழங்கள், காலை உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து அவர் தி.நகர் திருமலைப்பிள்ளை தெருவில் காமராஜர் நினைவு இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண கூடத்தில் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.தனபாலன் பங்கேற்று கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

    பிறந்தநாள் விழாவில் 1000 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, தையல் எந்திரம், வேட்டி-சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை என்.ஆர்.தனபாலன் வழங்கினார்.

    விழாவில் ஏராளமானோர் பங்கேற்று என்.ஆர்.தனபாலனை வாழ்த்தினார்கள். அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி.சேகர், த.மா.கா. நிர்வாகி ஜி.ஆர்.வெங்கடேஷ், இந்திய நாடார்கள் பேரமைப்பு பொதுச்செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், நிர்வாகி அண்ணா தனபால், பொருளாளர் ஏ.எம்.டி.சிவக்குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர்தர் தேவசகாயம், மாவட்ட செயலாளர் பெருமாள், ரத்தினம் ஹார்டுவேர்ஸ் என்.ஆர்.அந்தோணிதாஸ், தொழில் அதிபர் ஆவடி ஏ.முருகன் கிராமணியார், எஸ்.எம்.எண்டர்பிரைசஸ் கே.சத்தியமூர்த்தி, மனோபாக்யா டிரான்ஸ்போர்ட் எஸ்.பாக்யராஜ், ஸ்ரீ காமாட்சி அம்மன் பண்ட் கரு.வெள்ளைச்சாமி நாடார், பா.திருமலை நாடார், கரு.த.காமராஜ் நாடார், ஸ்ரீ பூர்ணிமா ஏஜென்சிஸ் என்.அஜித்குமார், ஆர்.முத்துகிருஷ்ணன்,

    பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் குமார், மாநில பொருளாளர் துறையூர் பி.பிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் சந்தானம், மாவட்ட தலைவர் எம்.வைகுண்ட ராஜா, மாவட்ட செயலாளர் ஜெ.முத்து, மதுரவாயல் பகுதி தலைவர் டி.செல்டன், விருகை பகுதி தலைவர் கே.மணிராஜ், அம்பத்தூர் பகுதி தலைவர் எம்.சேர்மக்கனி, மகளிர் அணி துணைத்தலைவி சிவகங்கை விக்டோரியா, குமரி அன்பு கிருஷ்ணன், கும்மிடிப்பூண்டி காமராஜ், குலசை முத்து, கே.பி.நல்லதம்பி, வி.பி.ஐயர், பூவை.ஜெயக்குமார், நசரத்பேட்டை முருகேசன், திருமழிசை அய்யாத்துரை, ராஜாகனி,

    தமிழ்நாடு நாடார் பேரவை செயற்குழு உறுப்பினர் மதுரை பன்னீர்செல்வம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, சென்னை நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திக், அகில உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க துணைத்தலைவர் பவர் பாண்டியன், செயலாளர் முருககனி, நடிகர்கள் விஜய் பாரத், கரிகாலன், விஜித், இயக்குனர்கள் அருள் செல்வன், பகவதி பாலா, தயாரிப்பாளர் பூபால் அழகன், கேமராமேன் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

    பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை என்.ஆர்.டி. குழும இயக்குனர் ஆர்.சம்பத் தலைமையில், என்.ஆர்.டி. அறக்கட்டளை நிர்வாகிகள் என்.ஆர்.டி. பிரேம்குமார், என்.ஆர்.டி. பிர்லா டேவிட், என்.ஆர்.டி.சேசுராஜ், ஜெ.பிரவீன்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தண்ணீரில் விஷ பூச்சிகளும், பாம்புகளும் நடமாடுவதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.
    • மக்களின் அச்சத்தை போக்கி, நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி, தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்டு, தங்குவதற்கு இடம் கொடுத்து, உணவு, உடைகள் வழங்கி, கொசுத் தொல்லை மற்றும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள போர்வைகள் வழங்கிட வேண்டும்.

    சென்னை மாநகராட்சியும், அரசும் துரிதமாக செயல்பட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாதுகாக்கிற பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் தண்ணீரில் விஷ பூச்சிகளும், பாம்புகளும் நடமாடுவதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கி, நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி, தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக 2 ஆண்டுகளும், மதுரை ஜில்லா சபை தலைவராக 4 ஆண்டுகளும் பதவி வகித்தார்.
    • 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று தலைமை தாங்கி மாநாட்டை வெற்றி மாநாடாக்கினார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தி.நகர் பனகல் பூங்காவில் சென்னை வாழ் நாடார் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள பட்டி வீரன்பட்டி 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் திருவுருவ சிலையை பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் மறைந்த அன்றைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14.4.1992-அன்று வைத்தார். சிலையை திறந்து வைத்த ஜெயலலிதா பாண்டிபஜார் சாலையின் பெயரை 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அங்காடி சாலை என்றும், பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அங்காடி சாலை காவல் நிலையம்' என்றும் பெயர் வைத்து மறைந்த தலைவரின் புகழுக்கு பெருமை சேர்த்தார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த காலம் வரை அப்பெயரே நீடித்து வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் அங்காடி சாலை என்கிற பெயரை மாற்றி தியாகராயர் சாலை என்று பெயர் பலகை வைத்திருப்பதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரும், கொடைக்கானல் மலையில் காப்பி தோட்ட உரிமையளரும் பெரும் நிலக்கிழாரும், மெத்த படித்தவரும், சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளருமானவர் 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் ஆவார். 1920 முதல் 1937 வரை 17 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக நீதிக்கட்சி தலைவர் பி.டி.ராஜன் பரிந்துரையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக 2 ஆண்டுகளும், மதுரை ஜில்லா சபை தலைவராக 4 ஆண்டுகளும் பதவி வகித்தார். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று தலைமை தாங்கி மாநாட்டை வெற்றி மாநாடாக்கினார்.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் ஏற்றம் பெறவும், தீண்டாமை ஒழியவும் பாடுபட்ட மாபெரும் தலைவரின் பெயரிலான பாண்டிபஜார் வீதிக்கு மீண்டும் அச்சம் அகற்றிய அண்ணல் 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் கடை வீதி' என்று பெயர் சூட்டி மறைந்த தலைவரின் மங்கா புகழுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே செடி நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அம்பத்தூரை, சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கையெழுத்து முகாம் நடத்தினார்கள்.
    • மாணவ-மாணவிகளின் வீடுகளில் இருக்கும் செய்தித்தாள்களை சேகரித்து அதனை மறுசுழற்சிக்கு எடுத்துச்செல்வது சம்பந்தமாக அவர்களுக்கு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அன்னை வயலட் பன்னாட்டு பள்ளியும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே செடி நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அம்பத்தூரை, சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கையெழுத்து முகாம் நடத்தினார்கள்.

    ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கிடையே செடி நட வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டது.

    முகாமில் மாணவ-மாணவிகளின் வீடுகளில் இருக்கும் செய்தித்தாள்களை சேகரித்து அதனை மறுசுழற்சிக்கு எடுத்துச்செல்வது சம்பந்தமாக அவர்களுக்கு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் சென்னை-சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் பசுமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக இதுவரை 2 ஆயிரம் மரங்களுக்கு மேல் நடுவதற்கு ஏற்பாடு செய்து தந்த அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனரும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர். தனபாலனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் ட்ரீம் கலாம் அமைப்பின் மூலம் "சிறந்த பசுமை விழிப்புணர்வாளர்" என்ற விருது கல்லூரியில் நடைபெற்ற ஓணம் விழாவில் வழங்கப்பட்டது.

    • தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற மனிதராக ஆர்.நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார்.
    • தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் விடுதலை போராட்டம், ஏழை, எளிய மக்களுக்கான உரிமை போராட்டங்களை இன்றளவும் முன்னின்று நடத்தி வருகிறார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற மனிதராக ஆர்.நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார். தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் விடுதலை போராட்டம், ஏழை, எளிய மக்களுக்கான உரிமை போராட்டங்களை இன்றளவும் முன்னின்று நடத்தி வருகிறார். கம்யூனிஸ்டு கட்சி வழங்கிய ரூ.1 கோடி நிதி உதவியை கட்சிக்கே மீண்டும் திருப்பி நன்கொடையாக வழங்கிய பண்பாளர்.

    இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்பவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதும், அத்துடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    • அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
    • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் தடையின்றியும், கட்டண உயர்வின்றியும் இருந்து வந்த நிலையில் திடீரென தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருப்பதும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதும் ஏமாற்றமளிக்கிறது. தமிழகத்தை ஆளும் இன்றைய தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் வெளியிட்டு வந்த அறிக்கையும், பொய் பிரச்சாரங்களையும் திரும்பி பார்க்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்த உடன் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விரைவு பஸ் கட்டணம் உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறையாமை, தமிழகம் முழுவதும் ரவுடிகள் அட்டகாசம், அரசு அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் ஆளும் தி.மு.க.வினரின் அடாவடித்தனம், திராவிட மாடல் என்ற போர்வையில் மக்கள் விரோத ஆட்சி செய்துவரும் இன்றைய அரசின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல.

    இந்த அதிரடியான மின் கட்டண உயர்வால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். அன்றாடம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×