search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்.ஆர்.தனபாலனுக்கு சிறந்த பசுமை விழிப்புணர்வாளர் விருது
    X

    என்.ஆர்.தனபாலனுக்கு சிறந்த பசுமை விழிப்புணர்வாளர் விருது

    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே செடி நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அம்பத்தூரை, சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கையெழுத்து முகாம் நடத்தினார்கள்.
    • மாணவ-மாணவிகளின் வீடுகளில் இருக்கும் செய்தித்தாள்களை சேகரித்து அதனை மறுசுழற்சிக்கு எடுத்துச்செல்வது சம்பந்தமாக அவர்களுக்கு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அன்னை வயலட் பன்னாட்டு பள்ளியும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே செடி நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அம்பத்தூரை, சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கையெழுத்து முகாம் நடத்தினார்கள்.

    ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கிடையே செடி நட வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டது.

    முகாமில் மாணவ-மாணவிகளின் வீடுகளில் இருக்கும் செய்தித்தாள்களை சேகரித்து அதனை மறுசுழற்சிக்கு எடுத்துச்செல்வது சம்பந்தமாக அவர்களுக்கு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் சென்னை-சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் பசுமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக இதுவரை 2 ஆயிரம் மரங்களுக்கு மேல் நடுவதற்கு ஏற்பாடு செய்து தந்த அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனரும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர். தனபாலனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் ட்ரீம் கலாம் அமைப்பின் மூலம் "சிறந்த பசுமை விழிப்புணர்வாளர்" என்ற விருது கல்லூரியில் நடைபெற்ற ஓணம் விழாவில் வழங்கப்பட்டது.

    Next Story
    ×