search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லகண்ணு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு.
    • நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!

    ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்! என கூறியுள்ளார்.

    • சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்தார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    இளம் வயதில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று தனது 80 ஆண்டு கால பொது வாழ்வில் 7 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து தன் வாழ்வையே ஏழை, எளியோருக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும் அர்ப்பணித்து தகைசால் என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கி வருவதையொட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

    சென்னையில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். அதை பெற்றுக்கொண்ட ஆர்.நல்லகண்ணு உடனடியாக ரூ.10 லட்சம் காசோலை மற்றும் தனது சொந்த நிதி ரூ. 5 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

    அதனை அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்தார்.

    • தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற மனிதராக ஆர்.நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார்.
    • தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் விடுதலை போராட்டம், ஏழை, எளிய மக்களுக்கான உரிமை போராட்டங்களை இன்றளவும் முன்னின்று நடத்தி வருகிறார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற மனிதராக ஆர்.நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார். தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் விடுதலை போராட்டம், ஏழை, எளிய மக்களுக்கான உரிமை போராட்டங்களை இன்றளவும் முன்னின்று நடத்தி வருகிறார். கம்யூனிஸ்டு கட்சி வழங்கிய ரூ.1 கோடி நிதி உதவியை கட்சிக்கே மீண்டும் திருப்பி நன்கொடையாக வழங்கிய பண்பாளர்.

    இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்பவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதும், அத்துடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    கச்சநத்தம் கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
    மானாமதுரை:

    கச்சநத்தம் கொலையில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் மாற்று சமுதாயத்தினரால் கொலை செய்யப்பட்ட மூவரது வீடுகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    கச்சநத்தம் கிராமத்தில் நடந்துள்ள கொலைகள் காட்டு மிராண்டித்தனமானது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். கிராமத்திலிருந்து வெளியேறி செல்ல முடியாமல் உள்ளனர்.

    இவர்களது வாழ்வாதாரத்துக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர். உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். இந்தக் கொலைச் சம்பவத்துக்கு காவல்துறை முக்கிய காரணமாகும். கச்சநத்தம் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் எஸ்.குணசேகரன், தங்கமணி, மாநிலக்குழு உறுப்பினர் முத்தையா, மாவட்டச் செயலாளர் கண்ணகி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
    ×