என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தகைசால் தமிழர் விருது பெறும் கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணுக்கு என்.ஆர்.தனபாலன் வாழ்த்து
  X

  "தகைசால் தமிழர்" விருது பெறும் கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணுக்கு என்.ஆர்.தனபாலன் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற மனிதராக ஆர்.நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார்.
  • தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் விடுதலை போராட்டம், ஏழை, எளிய மக்களுக்கான உரிமை போராட்டங்களை இன்றளவும் முன்னின்று நடத்தி வருகிறார்.

  சென்னை:

  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழக அரசியலில் அப்பழுக்கற்ற மனிதராக ஆர்.நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார். தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் விடுதலை போராட்டம், ஏழை, எளிய மக்களுக்கான உரிமை போராட்டங்களை இன்றளவும் முன்னின்று நடத்தி வருகிறார். கம்யூனிஸ்டு கட்சி வழங்கிய ரூ.1 கோடி நிதி உதவியை கட்சிக்கே மீண்டும் திருப்பி நன்கொடையாக வழங்கிய பண்பாளர்.

  இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்பவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதும், அத்துடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள்.

  இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

  Next Story
  ×