search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவிகள்"

    • முகாமில் மக்களிடமிருந்து 321 மனுக்கள் பெறப்பட்டது.
    • 96 பயனாளிகளுக்கு ரூ. 28 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே விடையல் கருப்பூர் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கால்நடை துறை, சமூக நலத்துறை, பொது சுகாதாரதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தங்கள் துறை சார்ந்த கண்காட்சி குடிலை பொது மக்களின் பார்வைக்காக அமைத்திருந்தனர். பின்னர், துறை ரீதியாக அரசால் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்.

    முகாமில் மக்களிடமிருந்து 321 மனுக்கள் பெறப்பட்டது. 96 பயனாளிகளுக்கு ரூ. 28 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 83 பயனாளிகளுக்கு ரூ.83 ஆயிரத்துக்கு முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம், வேளாண்துறையில்
    8 பயனாளிகளுக்கு ரூ. 6,906-க்கு என 187 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர்.

    • மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதையடுத்து வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துச்சாமி அரிசி, பெட்ஷீட், வேஷ்டி, சர்ட், சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    பவானி:

    மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, பசுவேஸ்வரர் வீதி, கந்தன் பட்டறை,| குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துச்சாமி அரிசி, பெட்ஷீட், வேஷ்டி, சர்ட், சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராசன்,ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், பவானி நகரமன்றத் நலைவர் சிந்தூரி இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோபாலபுரத்தில் மக்கள்தொடர்பு முகாம் நடந்தது.
    • 361 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை அடுத்துள்ள எஸ்.கோபாலபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை 361 பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கள்ளிக்குடி வருவாய்த்துறை உள்ளிட்ட 14 அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 361 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 66 லட்சத்து 44 ஆயிரத்து 975 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் சௌந்தரியா, கள்ளிக்குடி தாசில்தார் சுரேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நீலாதேவி, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
    • வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு மக்களின் குறைகளை எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சூரங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் பயிறு, சிறு தானியங்கள், சிகப்பு கடல் பாசி, உரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் ராமசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தூர்பாண்டியன், மருதகனி சுப்பிரமணியன், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், சூரங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் ராமச்சந்திரன், தங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதிதாசன், தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட துறைசார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பொதுமக்களிடமிருந்து 375 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளு க்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 375 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்களும், 1 பயனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தேய்ப்பு பெட்டியும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 580 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்கள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 600 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் வழங்கினார்.

    இதில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) கண்ணகி, உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவபடத்திற்கு மரியாதை

    ஆறுமுகநேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் அவரது உருவப் படத்திற்கு தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருமான அ.கல்யாணசுந்தரம் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஆறுமுகநேரி நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏ.கே.எல். கூட்டுறவு சங்க துணை தலைவர் நவநீத பாண்டியன், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×