search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவசம்"

    • குளச்சல் கடலோர பாதுகாப்பு குழுமம் (மரைன் போலீஸ்) தகவல்
    • பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் பயிற்சி கால ஊக்க தொகை வழங்கப்படும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடலோர பாதுகாப்பு குழுமம் (மரைன் போலீஸ்) விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு வழிகாட்டுதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உரிய நிதி ஒப்பளிப்பு அரசாணை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடத்தி முடிக்கப்பட்டது. 9-வது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

    கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் நடத்தப்பட உள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதி உள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்பந்தப் பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலு வலகங்களில் இருந்தும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவல கங்களில், இருந்தும் மேலும் மீனவர் கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாய விலை கடைகள் ஆகிய இடங்களில் இருந்தும் இலவசமாக பெற்றுக் கொள்ளவும்.

    இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து 3 மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    அனைத்து கடலோர மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு, மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் பயிற்சி கால ஊக்க தொகையும் வழங்கப்படும்.

    எனவே 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 சத வீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.
    • தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வரு கிறது.

    அதன்படி இந்த ஆண்டும் நியாயவிைலக் கடைகள் மூலம் வேட்டி-சேலை களை வழங்க அரசு உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து வேட்டி-சேலைகள் கொள்முதல் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் முடிந்ததும் அவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

    சென்னையில் இருந்து மண்டலம் வாரியாக அனுப்ப ப்பட்டு, பின்னர் மாவட்ட ங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.அதன்படி குமரி மாவட்டத்தில் விநியோ கிக்கப்பட வேண்டிய வேட்டி-சேலைகள் லாரிகள் மூலம் வந்தன. மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.

    தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் வேட்டி-சேலைகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை தாலுகா அலுவலகத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட வேட்டி-சேலைகள்,வட்டா ட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

    அங்கிருந்து அவை விரைவில் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

    • 21-ந்தேதி அறிமுக வகுப்பு நடக்கிறது
    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற 46 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    மேலும் குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தத் திட்ட மிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக வகுப்பு வருகிற 21-ந் தேதி (திங்கள்கிழமை) பகல் 11 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடை பெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் நகல் மற்றும் தேர்வு மைய அனுமதிச் சீட்டு ஆகியவற்றுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 21-ந் தேதி வருகை புரியுமாறு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்து உள்ளார்.

    • நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம்.
    • “பறவைகள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் உரையாற்றினார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தேசிய மேல்நிலை ப்பள்ளி நாட்டு நல பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் முட்டம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை படை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்களது இல்லங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    "பறவைகள் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் ஆதி லிங்கம் உரையாற்றினார்.

    நகராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன். மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய வெங்கடேசன். மற்றும் ஆசிரியர்கள் செங்குட்டுவன், முத்துக்குமார், விமல், தேசிய பசுமைப்படை ஆசிரியர் சக்தி வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

    • இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • ஊராட்சி தலைவர் பழனிவேல், துணை தலைவர் கேபிள் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் அறக்கட்டளைகள் மற்றும் ராக்ஸ் மருத்துவமனை இணைந்து அரசு மேல்நிலைப்பபள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. ஊராட்சி தலைவர் பழனிவேல், துணை தலைவர் கேபிள் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    டாக்டர் வீரபத்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சர்க்கரை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளித்து மாத்திரைகள் வழங்கினர். அறக்கட்டளை நிர்வாகிகள் நாகு ஆச்சாரி, முருகேசுவரி, பஞ்சவர்ணம் நாகஜோதி, கார்த்திக், செல்லபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்களுக்கு பயிற்சியாளர் சங்கரபாண்டி மூச்சு பயிற்சியளித்தார்.

    • முகாமானது வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.
    • முகாமிற்கான ஏற்பாடு களை ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ மனையில் மார்பக புற்று நோய்க்கான இலவச ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று தொடங்கியது. முகாமானது வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.

    முகாமில் மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய் விழிப்புணர்வு, அதனை எதிர்கொள்ளும் முறை, அறுவை சிகிச்சை பற்றி ஆலோசனைகள், மருந்து முறைகள், புற்றுநோய் வரும்முன் தடுப்பது குறித்த ஆலோசனைகள், ஏற்கனவே மார்பக புற்றுநோய் கண்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மேலும் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    மேலும் ரூ.500 சிறப்பு கட்டணத்தில் மேமோ கிராம் சிறப்பு சிகிச்சை செய்யப்படுகிறது. முகாமில் புற்றுநோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை டாக்டர்கள் பாலா, நிதிலா, ஸ்காட், கண்மணி, பிரஜித், தேவநாயகம், டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் ஆகியோர் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    முகாமிற்கான ஏற்பாடு களை ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

    • நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், 179 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.

    தொடர்ந்து பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.

    மழைக்காலம் என்பதால் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தங்களுடைய சொந்த செலவில் குடைகள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 171 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமச் சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் எஸ்.என்.குமார், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி, 13-வது வார்டு கவுன்சிலர் ஆதிலிங்கபெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சீதாராமன், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், பேரூர் தலைவர் கிங்ஸ்லின், பேரூர் அ.தி.மு.க. செயலர் சிவபாலன், மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைக்கு அலங்காரம் மற்றும் பூஜைகள் அந்தந்த பகுதி நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது.

    தாராபுரம் :

    இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி தாராபுரம் வட்டாரத்திற்குட்பட்ட குண்டடம், மூலனூர், தாராபுரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதியில் உள்ள குக்கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் 31-ந் தேதி காலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அன்று அதிகாலை முதல் 10 மணி வரை விநாயகர் சிலைக்கு அலங்காரம் மற்றும் பூஜைகள் அந்தந்த பகுதி நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி மதியம் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அமராவதி ரவுண்டானாவில் வெளியூரிலிருந்து வரும் விநாயகர் சிலைகள் ஒன்று திரண்டு கடைவீதி, பூக்கடை வீதி வழியாக என்.என்.பேட்டை சென்று பழைய அமராவதி ஆற்று பாலம் அருகே ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    விநாயகர் சிலை வேண்டுவோர் தாராபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×