search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்டி"

    • தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.

    நாகர்கோவில்: தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.

    இதுபோல் கரும்பு, சர்க்கரை,அரிசி உள்ளிட்ட பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பிக்கப்பட்டு பின்னர் ரேஷன் கடை மூலம் விநியோக செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகள் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தது. அதனை அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவித்த உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.

    • குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
    • 84,651 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகைக் காக, கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில், சேலைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.

    தாசில்தார் அலுவலத் திற்கு ஒதுக்கப்பட்ட தலா ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 302 வேட்டி, சேலைகளில், 84,651 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 32 ஆயிரத்து 651 சேலைகள் மட்டும் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முழு ஒதுக்கீட்டிற்கு ஏற்றவாறு கடந்த 4-ந் தேதி 27 ஆயிரம் வேட்டிகளும், 5-ந் தேதி 5 ஆயிரத்து 651 வேட்டிகளும் வரப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முதல் நிலுவையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மீதமுள்ள இலவச வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.
    • தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வரு கிறது.

    அதன்படி இந்த ஆண்டும் நியாயவிைலக் கடைகள் மூலம் வேட்டி-சேலை களை வழங்க அரசு உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து வேட்டி-சேலைகள் கொள்முதல் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் முடிந்ததும் அவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

    சென்னையில் இருந்து மண்டலம் வாரியாக அனுப்ப ப்பட்டு, பின்னர் மாவட்ட ங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.அதன்படி குமரி மாவட்டத்தில் விநியோ கிக்கப்பட வேண்டிய வேட்டி-சேலைகள் லாரிகள் மூலம் வந்தன. மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.

    தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் வேட்டி-சேலைகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை தாலுகா அலுவலகத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட வேட்டி-சேலைகள்,வட்டா ட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

    அங்கிருந்து அவை விரைவில் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

    • தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
    • தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி செய்திட விசைத்தறிகளுக்கு ஆா்டா் வழங்கிட வேண்டும் என விசைத்தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஈரோடு சுரேஷ், செயலாளா் பல்லடம் வேலுசாமி, பொருளாளா் சித்தோடு பாலசுப்பிரமணயம் ஆகியோா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் 223 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளா் சங்கங்கள் மூலம் 67ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல நெசவாளா்கள் பயன் பெற்று வருகிறாா்கள். கடந்த ஒரு மாதமாக ஜவுளித் துறையில் நூல் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் காரணமாக பல்லாயிரம் விசைத்தறிகள் வேலை இல்லாமல் அதனை சாா்ந்த நெசவாளா்களும் அவா்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனா்.கடந்த 10 ஆண்டுகளாக 2021ம் ஆண்டு வரை ஜூன் மாதத்தில் தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாா்பில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. அதேபோல இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் வேட்டி, சேலை வடிவத்தில் எவ்வித மாறுதல் இல்லாமல் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அதே ரகமும் தரமும் மாற்றப்படாமல் உற்பத்தி செய்ய உத்தரவிட்டால் பல லட்சம் நெசவாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வழிவகை செய்ய ஏதுவாக இருக்கும்.

    கடந்த வருடம் வேட்டி தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்திலும், சேலை தயாரிப்பு நவம்பா் மாதத்திலும் தொடங்கப்பட்ட காரணத்தால் உற்பத்தி செய்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. ஆதலால் இந்த வருடம் வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்கி விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனா்.

    • அரசியலில் எங்களுக்கு ஆசானாக விளங்குவது நம்முடைய திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்தான்.
    • அரிஸ்டோ மேம்பால பணிகள் ராணுவ நில பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா திருச்சி 24-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சோபியா விமலாராணி, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் 24-வது வார்டில் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் வேட்டி, சேலை, 24-வது வார்டு என அச்சடிக்கப்பட்ட பனியன்கள், மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டது. விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் பேசியதாவது:-

    அரசியலில் எங்களுக்கு ஆசானாக விளங்குவது நம்முடைய திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்தான். அவரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் திருச்சி மாநகர காங்கிரஸ் சார்பாக 7 இடங்களில் கொண்டாடப்பட்டது. அதில் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று உணவு வழங்குவது, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்குவது உள்பட சிறப்பாக நடைபெற்றது.

    மேலும் அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். அதில் பாதியில் நின்ற அரிஸ்டோ மேம்பால பணிகள் ராணுவ நில பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. நம்முடைய எம்.பி. மத்திய அரசு அமைச்சர்களிடம் பேசி ரெயில்வே நிலத்தை நம்முடைய மக்கள் பயன்பாட்டிற்காக பெற்று தந்துள்ளார்.

    விமான நிலையத்திற்கு 7 ஏக்கர் நிலம் பெற்று தந்துள்ளார். புதிய விமானங்கள் நம்முடைய திருச்சி மாவட்டத்திற்கு வந்து செல்வதற்கு வழிவகை செய்திருக்கிறார். புதிய ரெயில்களை நம்முடைய ரெயில் நிலையத்திற்கு வரவழைத்திருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு வெற்றி ெபற்று தனது பணியை தொடங்கினார்.

    2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்ததால் எந்த நலத்திட்ட பணியும் செய்ய முடியாமல் இருந்தது. மேலும் மத்திய அரசு எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தியது. இதனால் தன்னுடைய மக்களுக்காக நலத்திட்ட பணிகள் செய்ய முடியாமல் வருத்தம் அடைந்தார்.

    6 முறை எம்.எல்.ஏ., 2 முறை எம்.பி., மத்திய அமைச்சராக இருந்தவர் தான் நம்முடைய நம்பிக்கைகுரிய திருநாவுக்கரசர். திருச்சி மாநகரத்தை பொருத்தமட்டில் நம்முடைய 24-வது வார்டுக்கு சுமார் ரூ.25 லட்சத்திற்கான நலத்திட்ட பணிகளை செய்து தருவதாக ஒப்புதல் அளித்துள்ளார். அதை அவர் கட்டாயம் செய்து தருவார். இந்த வார்டு திருச்சி மாநகராட்சியில் முன்மாதிரியான வார்டாக மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின், இளங்கோ, தனசேகர், மாவட்ட துணைத்தலைவர் முரளி, மாவட்ட பொதுச்செயலாளர் டி.கே.சுப்பையா, 24-வது வார்டு தலைவர் ரவி, 18-வது வார்டு மலர் வெங்கடேஷ், ஜெயம்கோபி, பிரியங்கா பட்டேல்,வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 75-வது சுதந்திர தினத்தையெட்டி அமுது பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது
    • ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை குமரி மாவட்டம் முழுவதும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு

    நாகர்கோவில் :

    75-வது சுதந்திர தினத்தையெட்டி அமுது பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை குமரி மாவட்டம் முழுவதும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது.மேலும் கலெக்டர் அரவிந்த் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று வேட்டி அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

    பெண் ஊழியர்கள் பாரம்பரிய உடையான சேலை அணிந்து பணிக்கு வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடினார்கள். தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டது மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பி ரியா, ஆர்டிஓ சேதுராம லிங்கம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேசிய தாவது:-

    75 -வது சுதந்திர தின விழா அமுது பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாம் கடந்து வந்த பாதையை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஏற்கனவே சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை பற்றி நாம் நினைத்து பார்க்க வேண்டும். நமது நாடு முன்பு எவ்வளவு வளர்ச்சி பெற்று இருந்தது தற்போது எவ்வளவு வளர்ச்சி பெற்று உள்ளது என்பதை தெரிந்து இருக்க வேண்டும் .

    பழைய நிலைமையை நினைத்துப் பார்க்க வேண்டும். இப்பொழுது உள்ள பிரச்சனைகளையும் நாம் தெரிந்து இருக்க வேண்டும். பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.தற்போது இங்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் வருவாய்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு உள்ளார்கள்.நம் மாவட்டத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து அந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×