search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பயிற்சி"

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் படித்து முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரையில் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

    இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தோராயமாக 6,553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியி ட ங்களுக்கான தோராயமாக 3,587 பணியிடங்க ளுக்கான போட்டித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்ப டவுள்ளதாக தெரிகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தினை சேர்ந்த தகுதியான, ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி பயனடையும் வகையில், அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்டு 19-ந் தேதி தொடங்கி, வார நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அல்லது அலுவலக தொலைப்பேசி 04175-233381 என்ற எண்ணில் தங்களது பெயரினை வரும் 18-ந்தேதி க்குள் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு திருவண்ணா மலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்து ள்ளார்.

    • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

    குரூப் -4 தேர்வில், 17 பேர் சான்றிதழ் சரிபார்ப் புக்கு தேர்வாகியுள்ளனர். 2022-ம் ஆண்டு சீருடைப் பணியாளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும் 2022 -ம் ஆண்டு போலீஸ் தேர்வில் 17 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ள னர். தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டிஎன்பி எஸ்சி குரூப் -1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு வருகிற 14-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாட வாரியாக சிறந்த வல்லு நர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மேலும் இத்தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் ஒவ் வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை களில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை தொலைபேசி எண்கள் மூலமோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் உமா கூறியுள்ளார்.

    • கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதி ராஜா
    • 30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில் எழுதப்படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் நபா்களுக்கு கனரா வங்கி சாா்பில் செல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் தொடா்பாக இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

    இதுகுறித்து கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதி ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ் மக்களுக்கு ெசல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. 30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில் எழுதப்படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

    இந்தப் பயிற்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தொழில் தொடங்க ஆலோசனைகளும் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436, 94890-43923 என்ற செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயிற்சி வகுப்பை கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • சுமார் 150 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை முழு நேர அரசு பொதுநுாலக கட்டிடத்தில் நான் முதல்வன் திட்டம் வாயிலாக சுமார் 150 மாணவர்களுக்கு மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற செயலாளா் மயிலேறும்பெருமாள், பயிற்சி அலுவலா் சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் நுாலக வாசகர் வட்ட செயலாளா் செண்பக குற்றாலம், நூலகர் ராமசாமி, நுாலக அரசுத்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள்சேகர் உள்பட பலா் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

    • ரெயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று முதல் 50 நாட்கள் நடைபெற உள்ளது.
    • ெரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் அதிகளவில் விண்ணப்பித்து தேர்ச்சி பெறவேண்டும்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக ெரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று முதல் 50 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் 150 மாணவ மாணவியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.300 மணி நேரம் வழிகாட்டல் வகுப்புகள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் 120-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

    இப்பயிற்சி வகுப்பில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இடைநிற்றல் இல்லாமல், தினசரி நடைபெறும் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு தொடர்ச்சியாக வருகைதந்து, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ெரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் அதிகளவில் விண்ணப்பித்து தேர்ச்சி பெறவேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக பயிற்சி அலுவலர் அமிர்தவிக்ரமன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் 129 காலிப்பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் 30.5.2023அன்று தொடங்கப்படவுள்ளது. மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும். இவ்வகுப்பில் தொடர்ந்து மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோதொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாள்கள் தொடா்ச்சியாக நடத்தப்படும்.
    • இந்தப் பயிற்சி வகுப்பில் 150 இளைஞா்கள் வரையில் கலந்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வங்கிப் பணி உள்ளிட்ட அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர மே 20 -ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பணியாளா் தோ்வாணையம், ெரயில்வே பணியாளா் தோ்வாணையம் மற்றும் வங்கிப் பணியாளா் தோ்வாணையம் ஆகியவற்றின் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தமிழகத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்கள் வெற்றி பெற உதவிடும் வகையில் மாவட்டந்தோறும் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாள்கள் தொடா்ச்சியாக நடத்தப்படும்.

    பயிற்சிக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பில் 150 இளைஞா்கள் வரையில் கலந்து கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    எனவே, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சி மையத்தில் சேர மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான இளைஞா்கள் நேரடியாக இணையதளம் வாயிலாக மே 20 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94990-55944 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது.
    • இதில், ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. இதில், ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கவியரசு வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் மணி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் பணிக்கு தற்போது அரசின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வில் 15 பேர் தேர்வாகி உடல்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். குறிப்பாக போட்டி தேர்வு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஒருவர் காவல் துறையில் சேர்ந்து அஸ்தம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். எனவே, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்தால் போட்டி தேர்வில் வெற்றி பெற்று நீங்களும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    • சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    திருப்பூர் :

    சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம்1.6.2023 முதல்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் தன்னார்வ பயிலும் வட்டம் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை, எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4.5.2023 அன்று முதல் திங்கள் - வெள்ளி வரை தினமும் 2மணி முதல் 3.30 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி வகுப்பில் மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • 2021-ம் ஆண்டு, போலீஸ் போட்டித் தேர்வில், 24 பேரும், 2022-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    நாமக்கல் வேலை வாய்ப்பு மைய, தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2021-ம் ஆண்டு, போலீஸ் போட்டித் தேர்வில், 24 பேரும், 2022-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.

    மேலும், 2022-ல் நடந்த போலீஸ் தேர்வில் 17 பேர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 615 காலி பணியிடங்கள் கொண்ட டி.என்.யு.எஸ்.ஆர்.பி., எஸ்.ஐ. எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி, நேரடியாக நடத்தப்பட உள்ளது.

    இலவச நேரடி பயிற்சி வகுப்பு, வரும், 12-ந் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம். 

    • மத்திய அரசு பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.
    • விருதுநகர் மாவட்ட போட்டித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ெஜயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி. சி.ஜி.எல். தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 7ஆயிரத்து500 பணிக்காலி இடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 3.5.2023 ஆகும்.

    இந்த தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நாளை(24-ந்தேதி) முதல் நேரடியாக நடைபெற உள்ளது.

    போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக எழுதலாம்.

    இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562-293613 அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சலில் வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த அரிய வாய்ப்பை விருதுநகர் மாவட்ட போட்டித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 ஆகும். இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., அல்லது எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓ.பி.சி .,பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

    இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஜூலை 2023-ல் நடைபெறும். 1 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் 100 கேள்விகளுக்கு 200 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு தவறான கேள்விக்கும் 0.50 மதிப்பெண் குறைக்கப்படும். இத்தேர்விற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.மேலும் வரும் 24.4.2023 திங்கள்கிழமையன்று இலவச பயிற்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.

    எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் மேற்கண்ட தேர்விற்கு நேரடியாக தாங்களே இணைய வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு பல்லடம் சாலை, திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் 4-வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அல்லது 9499055944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    ×