search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில்போலீஸ் எஸ்.ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி
    X

    நாமக்கல் மாவட்டத்தில்போலீஸ் எஸ்.ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • 2021-ம் ஆண்டு, போலீஸ் போட்டித் தேர்வில், 24 பேரும், 2022-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    நாமக்கல் வேலை வாய்ப்பு மைய, தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2021-ம் ஆண்டு, போலீஸ் போட்டித் தேர்வில், 24 பேரும், 2022-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.

    மேலும், 2022-ல் நடந்த போலீஸ் தேர்வில் 17 பேர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 615 காலி பணியிடங்கள் கொண்ட டி.என்.யு.எஸ்.ஆர்.பி., எஸ்.ஐ. எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி, நேரடியாக நடத்தப்பட உள்ளது.

    இலவச நேரடி பயிற்சி வகுப்பு, வரும், 12-ந் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.

    Next Story
    ×