search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருசக்கர வாகனம்"

    • வக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்பு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

    வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணி புரியும் உலமா நலவாரிய உறுப்பி னர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பின ராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப் பாளர் உறுப்பினராகவும் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும்.

    மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கு வக்பு கண்காணிப்பாளரின் சான்று மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்றார்.
    • இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி தோப்புகொல்லை வடக்கு தெருவை சேர்ந்தவர்சுப்பிரமணியன். இவர் மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅர சுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே தச்சூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்.அவரது மனைவி பெரியம்மாள் (வயது 75). இவர் நேற்று இரவு தனது காட்டுக் கொட்டையின் முன்பு படுத்திருந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் மீது மோதி சென்ற இருசக்கரவாகனம் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் நட மாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையும் நடத்தி வரு கின்றனர்.

    இதையொட்டி இரணியல் சப்- இன்ஸ் பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் காரங்காடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்த கூறிய போது நிற்காமல் சென்றார்.

    அதனால் போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவரை விரட்டி சென்ற போது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அனுமதி இன்றி 69 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது

    அதனை பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபரை தேடி வருகின்றனர்.

    • மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம்
    • போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி,:

    அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் மாலை அணிய வந்த அய்யப்ப பக்தர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோண வடிவ பூங்கா முன்பு நிறுத்தி வைத்துவிட்டு கடலில் புனித நீராடுவதற்காக கடற்கரைக்கு சென்றனர்.

    இதற்கிடையில் கடலில் புனித நீராடி மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்து இருப்பதாக கூறினார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அய்யப்ப பக்தர்கள் போக்கு வரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் குமரி மாவட்ட பா.ஜ.க. பொருளாதாரப் பிரிவு தலைவரும், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலருமான சி.எஸ்.சுபாஷ் தலைமையில் பா.ஜ.க.வினரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் அய்யப்ப பக்தர்களும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை சுற்றி வளைத்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

    • ஜெயச்சந்திரன் தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
    • இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன். இவர் திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்இருசக்கர வாகனம் நிறுவனம் எதிரே தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து திண்டிவனம் போலீசாரிடம் ஜெயச்சந்திரன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்துமர்ம நபர்களை வலை வீசிதேடி வருகின்றனர்.

    • திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • திண்டிவனம் போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் இரு சக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் மயிலம் ரோட்டில் உள்ள உணவகத்தின் வெளியே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, உணவு வாங்க சென்றுள்ளார். மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசில் கண்ணதாசன் புகார் செய்தார். அதன் பெயரில் திண்டிவனம் போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் இரு சக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடியது திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியைச் சேர்ந்த அஜய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜய் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சவேரியார் ஆலயம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து கோட்டார் சவேரியார் ஆலய சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
    • செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சவேரியார் ஆலயம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து கோட்டார் சவேரியார் ஆலய சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

    இதனால் வடசேரி பஸ் நிலையத்திற்கு கன்னியாகுமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலை செட்டிகுளம் சந்திப்பு வழியாக சவேரியார் ஆலயத்திற்கு செல்கிறது. கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதானம் ராமன் புதூர் வழியாக செட்டிகுளத்திற்கு வருகிறது. வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கப்படுவதையடுத்து செட்டிகுளம் பீச் ரோடு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசார் அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இன்று காலையில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் செட்டிகுளம் பகுதியில் சிக்கி பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலை நடுவே கான்கிரீட்டுக்களால் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் பஸ்கள் மட்டுமே செல்ல முடியும் நிலை உள்ளது.ஆனால் அதன் இடையே இருசக்கர வாகனங்களும் செல்வதால் அவர்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டது.

    செட்டிகுளம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் காலை மாலை நேரங்களில் இன்னும் அதிகமாக கூடுதல் போலீசாரை நியமனம் செய்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சியில் காசநோய் கண்டறியும் வாகனம் கலெக்டர் ஸ்ரீதர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் 2025-ல் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ரே பொருத்திய நவீன மருத்துவ வாகனத்தினை சென்னை யில்தமிழகமுதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப் பட்ட காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த காசநோய் கண்டறியும் வாகனம், மருத்துவ குழுவினருடன் கிராமங்கள் முழுவதும் சென்று காசநோய் கண்டறிதல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட் டவர்கள், வயதான வர்கள், புகைப்பிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ள வர்கள், சிறுநீரகம் தொடர்பான நோய் உடைய வர்கள், புற்று நோயால் பாதிக்க ப்பட்ட வர்களுக்கு எக்ஸ்ரே பரி சோதனை மேற் கொள்ளப்படும். இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.

    இந்நிகழ்வின்போது, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாலச்சந்தர், துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குநர் பொது சுகாதாரம் ராஜா, நெஞ்சக நோய் நிபுணர் ராம்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, உதவி மருத்துவ அலு வலர் பொய்யாமொழி, தேசிய சுகாதார குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பிரதம மந்திரி மத்திய மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவும், சில்லரை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டும் ரூ.69,243 மதிப்பீட்டிலான இருசக்கர வாகனத்தினையும், ரூ.4,478 மதிப்பீட்டிலான 70 லிட்டர் கொள்ளளவு உள்ளகுளிர்காப்பு பெட்டியினையும், பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியத்திலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானிய த்திலும் வழங்கப் படுகிறது.

    அதன்படி, இன்று சங்கராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் களில் பொதுப்பிரிவு வகுப்பைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கு தலா ரூ.73,721 மதிப்பிலான குளி ர்காப்பு பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தினை 40 சதவீத மானியத்துடன் ரூ.44,233 மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது, உதவி இயக்கு நர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) நித்ய பிரியதர்ஷினி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் சந்திரமணி மற்றும் அரசு அலு வலர்கள் உடன் இருந்தனர்.

    • 2 பேர் தூக்கிச் சென்ற போது கம்பின் ஒரு பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தட்டியது
    • இந்த விபத்து நடந்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள பட்டகசாலியன் விளை பகுதியில் சுடலை மாடசுவாமி கோவில் உள்ளது. இங்கு நடை பெறும் திருவிழாவிற்காக பந்தல் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

    பந்தல் அமைப்பதற்காக தொழிலாளர்கள் வாகன த்தில் இருந்து கம்புகளை இறக்கி கொண்டு சென்றனர். நீளமான கம்பை 2 பேர் தூக்கிச் சென்ற போது கம்பின் ஒரு பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தட்டியது.

    இதில் இருசக்கர வாகன த்தை ஓட்டிச் சென்ற பெண் உட்பட 2 பேர் கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த காரின் அடியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மத்திய பகுதியில் சிறிய இடத்தில் இயங்கி வரும் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பயணிகள் அதிகளவில் வருவதால் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    அரசு, தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்தை சரி செய்ய போலீசார் புதிய வழிமுறைகளை கொண்டு வந்தாலும் பொதுமக்கள் அதை கடைபிடிப்பதில்லை.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் திருச்சி, சென்னை, பெங்களூரு, தஞ்சாவூர், நாகப்பட்டினம் பஸ்கள் நிறுத்த பகுதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்த வழியாகத்தான் பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வேண்டும்.

    அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் செல்வதற்கும், பஸ்களை திருப்பி நிறுத்துவதற்கும் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். இதுதவிர இந்த இருசக்கர வாகனங்கள் நடந்து செல்லும் பயணிகளுக்கும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் இடையூறாக உள்ளன.

    பஸ்கள் உள்ளே வரும் பகுதியில் நெரிசலை தவிர்க்க போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர்.

    இதை கண்டுகொள்ளாமல் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அறிவிப்பு பலகை அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு பஸ் நிலையத்திற்குள் செல்கின்றனர்.

    இதனால் தினந்தோறும் அந்த பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஏற்கனவே நெரிசலாக உள்ள பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்ந்து பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை வெளியிடங்களில் நிறுத்த வேண்டும்.

    போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்களும் வாகனங்களை பஸ் நிலையத்தில் இஷ்டம் போல் நிறுத்துகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×