search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிகுளம் சந்திப்பில் பஸ்களுக்கிடையே சிக்கி தவிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் - கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டுகோள்
    X

    செட்டிகுளம் சந்திப்பில் பஸ்களுக்கிடையே சிக்கி தவிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் - கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டுகோள்

    • சவேரியார் ஆலயம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து கோட்டார் சவேரியார் ஆலய சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
    • செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சவேரியார் ஆலயம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து கோட்டார் சவேரியார் ஆலய சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

    இதனால் வடசேரி பஸ் நிலையத்திற்கு கன்னியாகுமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலை செட்டிகுளம் சந்திப்பு வழியாக சவேரியார் ஆலயத்திற்கு செல்கிறது. கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதானம் ராமன் புதூர் வழியாக செட்டிகுளத்திற்கு வருகிறது. வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கப்படுவதையடுத்து செட்டிகுளம் பீச் ரோடு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசார் அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இன்று காலையில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் செட்டிகுளம் பகுதியில் சிக்கி பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலை நடுவே கான்கிரீட்டுக்களால் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் பஸ்கள் மட்டுமே செல்ல முடியும் நிலை உள்ளது.ஆனால் அதன் இடையே இருசக்கர வாகனங்களும் செல்வதால் அவர்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டது.

    செட்டிகுளம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் காலை மாலை நேரங்களில் இன்னும் அதிகமாக கூடுதல் போலீசாரை நியமனம் செய்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×