search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வானிலை ஆய்வு மையம்"

    • தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன.
    • இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை வானிலையை கண்காணிக்க டாப்ளர் ரேடார்கள். சென்னை வானிலை ஆய்வு மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

    தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன.

    உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு, முன்னெச்சரிக்கைகளை உலகத்தரம் வாய்ந்தது என பாராட்டியுள்ளது.

    வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ், மிச்சாங் புயல்கள் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

    சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள அர்ப்பணிப்போடு இயங்கும் பணியாளர்களை புண்படுத்துகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ் அணி செயலாளர் வி.கே.பி. சங்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டியன் எம்.எல். ஏ., ஓ.பி.எஸ். அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை மனக்கவலம்பிள்ளை நகருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டனர். வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை வைத்து, முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது.

    ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் மாநகர் பகுதிக்குள் புகுந்து அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் மிகுந்த சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வீடுகள் தோறும் கணக்கெடுத்து ரூ.25 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை புதிதாக மீண்டும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் எங்கு எங்கு மழை பெய்யும் எவ்வளவு மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையை முறையாக வழங்கி உள்ளது. அரசுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். எடுக்க தவறி விட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் சுமத்துவது தவறு. பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.

    வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை கட்டுவதை ஒரு மாதம் அல்லது 2 மாதம் தள்ளி வைக்க வேண்டும்.

    சென்னையை விட தென் மாவட்டங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

    வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. அதனையும் கணக்கெடுத்து பொருட்களையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி புரியும் வேலையில் மத்திய அரசு நிதி வழங்கும் முன்பே மக்களுக்கு எந்த மாதிரியான நிதி வழங்க வேண்டும் என்பதை திட்டமிட்டு மக்களுக்கு வழங்கினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை முன்னுதாரணமாக எடுத்து அரசு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை
    • நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இதுகுறித்து கூறியதாவது:-

    கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

    18ம் தேதி காலை முதல் மதியம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 11 செ.மீ மழை பெய்துள்ளது. இதேபோல், நெல்லை மாவட்டத்தில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

    காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

    திருச்செந்தூரில் 92 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    தென்மாவட்டங்களில் பெய்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு தவறானது. அவர்கள் கூறியிருந்த கணிப்பின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால், கணிப்பை விட கூடுதல் மழை பெய்தததால் பாதிப்பு அதிகமாகி உள்ளது.

    மீட்பு பணிகளில் 1,350 பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    160 நிவாரண முகாம்கள் அமைப்பு, சுமார் 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இன்று மட்டும் முகாம்கள் தவிர 34 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    9 ஹெலிகாப்டர்கள் மூலம் கிராமங்களில் உணவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 13,500 கிலோ உணவு வழங்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் வடிந்த பகுதிகளில் இதர சேவைகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பால் விநியோகம் ஓரிரு நாளில் சீரடையும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும்.

    தென்காசி, குமரி மாவட்டங்களில் 100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 18 சதவீத மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 60 சதவீத இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. வெள்ளம் வடிய வடிய மின் விநியோகம் வழங்கப்படும்.

    திருச்செந்தூரில் இன்று காலை அதிகனமழை பதிவானது.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் 2 முறை உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தென்மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும்.
    • டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளக்காடாகி உள்ளது. வரலாறு காணாத வகையில் மழை கொட்டி தீர்த்ததால் தென்மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறார்கள். பஸ், ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. மழை தற்போது குறைந்து வெள்ள நீர் வடிந்து வந்தாலும் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

    இதற்கிடையில் தென் மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தென் தமிழகத்தில் இன்று கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும். ஓரிரு இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை வடதமிழக கடலோர பகுதிகளை மிச்சாங் புயல் நெருங்கும்.
    • புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது. சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    நாளை வடதமிழக கடலோர பகுதிகளை மிச்சாங் புயல் நெருங்கும். மாலை 5 மணிக்கு மேல் தரைக்காற்று அதிகளவு வீசக்கூடும்.

    நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே வருகிற 5ந்தேதி முற்பகல் புயல் கரையை கடக்கும்.

    மிச்சாங் புயலை எதிர்கொள்ள முப்பது கப்பல்களுடன் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயலையொட்டி இரவு நேரத்திலும் கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர். 8 கப்பல்கள் தொடர் ரோந்து பணியிலும், 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன.

    புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் விரைவாக கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும்.
    • வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்திற்கு நாளை முதல் வரும் 5ந்தேதி வரை ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    * நாளை முதல் 5ந்தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    * வரும் 3 மற்றும் 4ந் தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * இந்த கால கட்டத்தில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாக கூடும்.

    இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு.
    • கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இந்த மழை வருகிற 4-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் புயல், காற்று, இடியுடன் மழை பெய்தது. மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    • தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
    • வங்கக்கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் "மிச்சாங்" என பெயர் வைக்கப்படும்.

    புதுடெல்லி:

    தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் "மிச்சாங்" என பெயர் வைக்கப்படும்.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் அந்தமான் தீவுகளில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி 26-ந்தேதி உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்மான் கடல் பகுதியில் உருவாவதற்கான சாத்திய கூறுகள் தாமதம் ஆயின. இன்று 27-ந்தேதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டது.

    சூறாவளி சுழற்சியானது தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ளது. மேலும் சராசரி கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ. வரை சுழற்சி நீண்டுள்ளது. அதன் தாக்கத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளன.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ந்தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக அந்தமான் தீவுகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். எனவே 29-ந்தேதி முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தென்கிழக்கு வங்காள விரிகுடா, மத்திய வங்காள விரிகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேணடாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். நாளை (28-ந்தேதி) முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகரில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கடலோர தமிழகப் பகுதிகளில் கன மழை பெய்தது. சென்னையில் 2 நாட்கள் பலத்த மழை கொட்டியது.

    அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து புயலாக மாறி ஒடிசா, மேற்கு வங்கம் கடல் பகுதிக்கு நகர்ந்து சென்றதால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் குறைந்தது.

    இந்த நிலையில் குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24-ந்தேதி வரை அநேக இடங்களில லேசான மழையும், ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 22, 23 மற்றும் 24-ந் தேதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

    இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் இன்று லேசான மழை பெய்யும்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடைகிறது. அடுத்து வருகின்ற 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பேரிடர் மேலாண்மை துறை மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கையுடன் மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    புதுடெல்லி:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யும்.
    • 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×