search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறுதல்"

    • 19-ந் தேதி கரை திரும்பாதவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மீனவர்களின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
    • அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மாயமான மீனவர்களை மீட்டு கரை சேர்த்தது

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கீழ கடிய பட்டணத்தை சேர்ந்தவர் எட்வின் ஜெனில் (வயது 34). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி பிற்பகல் வழக்கம்போல் கடியபட்டணத்தை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளர்கள் சார்லஸ் எட்வின் (45), பிரான்சிஸ் (71), ஜோசப் (63), சகாய பெனின் (33) ஆகியோருடன் எட்வின் ஜெனில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். மறுநாள் 19-ந் தேதி கரை திரும்ப வேண்டும். ஆனால் கரை திரும்பவில்லை. அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மேற்கூறிய மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்தது.இரவு 5 மீனவர்களும் பத்திரமாக கரை சேர்ந்தனர்.

    கரை திரும்பிய மீன வர்களை தி.மு.க.மாநில மீனவர் அணி இணை செயலாளர் நசரேத் பசலியான், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் நேற்று கடியபட்டணம் சென்று சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆறுதல் கூறினர்.

    • கடந்த 24-ந்தேதி பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த திராவகம் கலந்த குளிர்பானம் குடித்தார்
    • கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு, அனந்த நகரை சேர்ந்தவர் 6 - ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அஸ்வின். கடந்த 24-ந்தேதி அன்று மதியம் பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த குளிர்பானத்தை குடித்தார்.

    கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் பெரும் துயரத்தில் உள்ள மாணவன் அஸ்வின் வீட்டிற்கு கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சென்று மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவி னர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • கப்பலூர் தீ விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர்களை சந்தித்து டி.ஜி.பி. ஆறுதல் தெரிவித்தார்.
    • 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் கப்ப லுார் தொழிற் பேட்டையில் உள்ள பசை தயாரிப்பு கம்பெனியில் கடந்த 15-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம், மதுரை, தல்லா குளம் மற்றும் கள்ளிக்குடி ஆகிய தீயணைப்பு நிலைய ஊர்திகள் மூலம் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    தீயணைக்கும் பணியின் போது ஆலையில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு நிலைய அலு வலர் பாலமுருகன், சிறப்பு நிலைய அலுவலர் பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கார்த்திக், கல்யாண குமார் ஆகியோர் தீ காயம் அடைந்தனர். 4 பேரும் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மற்றும் அலுவலர்களை தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும் வீரர்களின் குடும்பத்தி னரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தீயணைப்பு வீரர்களுக்கு ரூ. 3லட்சத்து 50ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்க ளுக்கு, தீயணைப்பு நிலையங்க ளுக்கு அதிநவீன உபகரண ங்கள் வாங்க திட்டமிட ப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். தீபாவளி பண்டி கைக்கு பொதுமக்கள் வணிக நிறுவனங்களில் கூடுவதால் தீயணைப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.
    • பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.

    குடிமங்கலம்:

    உடுமலையில் இருந்து தடம் எண் 22 டவுன் பஸ் நேற்று மாலை 4.30 மணிக்கு ஆமந்தகடவு அம்மா பட்டிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை டிரைவர் சதீஷ்குமார் (வயது 45) என்பவர் ஓட்டினார்.

    அந்த பஸ் குடிமங்கலம் அருகே சனுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக பஸ்வை டிரைவர் திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்பாராத விதமாக உப்பாறு ஓடையில் கவிழ்ந்தது. பள்ளி விட்டு மாணவ- மாணவிகள் ஊருக்கு திரும்பும் நேரம் என்பதால் அதிகளவில் மாணவ-மாணவிகள் பயணம் செய்துள்ளனர்.

    இந்த விபத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சின் ஒரு பக்கம் ஜன்னல் பகுதி தரையில் சிக்கிக்கொண்டது. இதனால் பஸ்சில் சிக்கிய மாணவ-மாணவிகளும், பயணிகளும் அபயக்குரல் எழுப்பினர். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி சென்று காயம் அடைந்த தேவிகா (வயது 55), விந்தியா (21), சரஸ்வதி (53), முத்தம்மாள் (65), மகேஸ்வரி (52), வாசுகி (17), அபிநயா (16), சஞ்சய் (16), தனலட்சுமி (42), கலைச்செல்வி (16), பிரியங்கா (16), வசுந்தரா (16), வித்யா விகாசினி (15) உள்பட 41 பயணிகளை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடாசலம் (வயது45) மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மட்டும் 25 மாணவ-மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் காயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று காலை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • ரயில் மீது ஏறி சமுதாய கொடியை அசைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி விபத்தில் விபத்துக்குள்ளானார்.
    • சிவகங்கை மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துலெட்சுமி ஆகியோர் உடனிருந்து விஜய் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    திருத்துறைபூண்டி:

    திருத்துறைபூண்டி வட்டம் எடையூர் ஊராட்சி வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    தேசிய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவினை முன்னிட்டு சிவக ங்கை மாவட்டம் தேவக்கோட்டை அதங்குடி ஊரை சேர்ந்த விஜய் மதுரையிலிருந்து பரமக்குடியை நோக்கிச் செல்லும் ரயில் மீது ஏறி சமுதாய கொடியை அசைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானார்.

    இதனையடுத்து மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபத்துக்கு ள்ளாகியவிஜய் மற்றும் அவரது குடும்பத்தை சந்தித்து வளரும் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாலை.

    பட்டாபி ராமன் ரூ.25,000 நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார்.

    மாநில துணை பொதுச் செயலாளர் இ.க.பாலுச்சாமி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் கருப்பு, மாநில தகவல் தொழில்நுட்பம் தலைவர் வீரா முகிலன் சிவகங்கை, ராமநாதபுரம் மண்டல செயலாளர் ராசைய்யா மதுரை மண்டல செயலாளர் துரைப்பாண்டி, சிவகங்கை மாவட்ட செயலாளர் மணிகண்டன், சிவகங்கை மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துலெட்சுமி ஆகியோர் உடனிருந்து விஜய் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    • பள்ளிப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார்.
    • மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பள்ளிப்பாளையம்:

    மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் உள்ள ஜனதா நகர், சந்தப்பேட்டை, அக்ரஹாரம், நாட்டா கவுண்டன்புதூர் மற்றும் பல பகுதிகளில் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்த வீடுகளில் வசித்து வந்த மக்கள் முகாமில் தங்கு வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை நேற்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து நிவாரணம் பொருட்கள் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், பள்ளிப்பா ளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஒன்றிய செயலாளர் செந்தில், பேரவை செயலாளர் சுப்பிரமணி, மற்றும் ஏராள மானோர் உடன் இருந்தனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
    • தலா ரூ.1 லட்சம் என மூன்று குடும்பத்திற்கு 3 லட்சமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனுக்கு ரூ.35 ஆயிரமும் வழங்கினார்.

    கும்பகோணம்:

    அணைக்கரை அடுத்த மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள ப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். பாதிக்க ப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி தலைமை அரசு கொறடா கோவி.செழியன் தனது சொந்த நிதியிலிருந்து தலா குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் என மூன்று குடும்பத்திற்கு 3 லட்சமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கினார்.

    இதில் எம்.பி.க்கள் கல்யா ணசுந்தரம், ராமலிங்கம், திருப்பனந்தாள்ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர்அண்ணா துரை, அவைத் தலைவர் கலியமூர்த்தி, மிசாமனோகர், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் பாலகுரு, இளவரசி, இன்பத்தமிழன், மாவட்ட பிரதிநிதி கஜேந்திரன், ஒன்றிய துணைச் செய லாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொ ண்டனர்.

    ×